< 那鸿书 3 >

1 祸哉!这流人血的城, 充满谎诈和强暴— 抢夺的事总不止息。
இரத்தப்பழிகளின் நகரத்திற்கு ஐயோ, அது வஞ்சகத்தினாலும் கொடுமையினாலும் நிறைந்திருக்கிறது; கொள்ளை ஓயாமல் நடக்கிறது.
2 鞭声响亮,车轮轰轰, 马匹踢跳,车辆奔腾,
சாட்டைகளின் ஓசையும், உருளைகளின் அதிர்ச்சியும், குதிரைகளின் பாய்ச்சலும், இரதங்கள் கடகடவென்று ஓடுகிற சத்தமும்,
3 马兵争先,刀剑发光, 枪矛闪烁,被杀的甚多, 尸首成了大堆, 尸骸无数,人碰着而跌倒,
வீரர்கள் குதிரை ஏறுகிறதும், பட்டயங்கள் பிரகாசிக்கிறதும், ஈட்டிகள் மின்னுகிறதும், வெட்டுண்டவர்களின் குவியலும், பிரேதங்களின் மிகுதியும் அங்கே உண்டாயிருக்கும்; பிணங்களுக்கு கணக்கில்லை; அவர்கள் பிணங்களில் தடுக்கிவிழுகிறார்கள்.
4 都因那美貌的妓女多有淫行, 惯行邪术,借淫行诱惑列国, 用邪术诱惑多族。
தன் வேசித்தனங்களினால் தேசங்களையும், தன் சூனியங்களினால் மக்களையும் விற்கிற மகா சூனியக்காரியும் ரூபவதியுமாயிருக்கிற வேசியினுடைய மிகுதியான வேசித்தனங்களினிமித்தம்,
5 万军之耶和华说:我与你为敌; 我必揭起你的衣襟,蒙在你脸上, 使列国看见你的赤体, 使列邦观看你的丑陋。
இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து உன் ஆடையின் ஓரங்களை உன் முகம்வரை தூக்கியெடுத்து, தேசங்களுக்கு உன் நிர்வாணத்தையும், இராஜ்யங்களுக்கு உன் மானத்தையும் வெளிப்படுத்தி,
6 我必将可憎污秽之物抛在你身上, 辱没你,为众目所观。
உன்மேல் தீட்டானவைகளை எறிந்து, உன்னைக் கனவீனப்படுத்தி, உன்னை வேடிக்கையாக்கிப்போடுவேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
7 凡看见你的,都必逃跑离开你, 说:尼尼微荒凉了!有谁为你悲伤呢? 我何处寻得安慰你的人呢?
அப்பொழுது உன்னைக் காண்கிறவனெல்லாம் நினிவே பாழாய்ப்போயிற்று, அதற்காகப் புலம்புகிறவர்கள் யார்? ஆறுதல் சொல்லுகிறவர்களை உனக்கு எங்கே தேடுவேனென்று சொல்லி, உன்னைவிட்டு ஓடிப் போவான்.
8 你岂比挪亚们强呢? 挪亚们坐落在众河之间,周围有水; 海作她的濠沟, 又作她的城墙。
நதிகள் மத்தியிலிருந்த நோ அம்மோனைப் பார்க்கிலும் நீ சிறப்பானவனோ? அதைச் சுற்றிலும் தண்ணீர் இருந்தது; சமுத்திரம் அதின் பாதுகாப்பும், சமுத்திரத்தில் இணையும் ஆறுகள் அதின் மதிலுமாயிருந்தன.
9 古实和埃及是她无穷的力量; 弗人和路比族是她的帮手。
எத்தியோப்பியாவும் எகிப்தும் எண்ணமுடியாத படையால் அதற்குப் பெலனாக இருந்தது; பூத்தும் லிபியாவும் அதற்கு உதவியாயிருந்தது.
10 但她被迁移,被掳去; 她的婴孩在各市口上也被摔死。 人为她的尊贵人拈阄; 她所有的大人都被链子锁着。
௧0ஆயினும் அவள் குடியிருக்கக் கூடாதென்று சிறையிருப்பிலே கொண்டுபோகப்பட்டாள்; அவளுடைய குழந்தைகள் எல்லா வீதிகளின் முனைகளிலும் மோதியடிக்கப்பட்டார்கள்; அவளுடைய கனவான்கள் பெயரில் சீட்டுப்போட்டார்கள்; அவளுடைய பெரியவர்கள் எல்லோரும் சங்கிலிகளால் கட்டப்பட்டார்கள்.
11 你也必喝醉,必被埋藏, 并因仇敌的缘故寻求避难所。
௧௧நீயும் வெறிகொண்டு ஒளித்துக்கொள்வாய்; நீயும் உன் எதிரிக்குத் தப்ப பாதுகாப்பான கோட்டையைத் தேடுவாய்.
12 你一切保障必像无花果树上初熟的无花果, 若一摇撼就落在想吃之人的口中。
௧௨உன் அரண்களெல்லாம் முதல் பழுக்கும் பழங்களுள்ள அத்திமரங்களைப்போல் இருக்கும்; அவைகள் குலுக்கப்பட்டால் அவைகளின் பழம், சாப்பிடுகிறவன் வாயிலே விழும்.
13 你地上的人民如同妇女; 你国中的关口向仇敌敞开; 你的门闩被火焚烧。
௧௩இதோ, உன் நடுவில் இருக்கிற மக்கள் பயந்தவர்கள்; உன் தேசத்தின் வாசல்கள் உன் எதிரிக்குமுன் திறக்கப்பட்டுப்போகும்; நெருப்பு உன் தாழ்ப்பாள்களைச் சுட்டெரிக்கும்.
14 你要打水预备受困; 要坚固你的保障, 踹土和泥,修补砖窑。
௧௪முற்றுகைக்குத் தண்ணீர் கொண்டுவந்து வை. உன் பாதுகாப்புகளைப் பலப்படுத்து; சேற்றிலே போய்க் களிமண்ணை மிதி, சூளையை உறுதிப்படுத்து.
15 在那里,火必烧灭你; 刀必杀戮你, 吞灭你如同蝻子。 任你加增人数多如蝻子, 多如蝗虫吧!
௧௫அங்கே நெருப்பு உன்னைச் சுட்டெரிக்கும், பட்டயம் உன்னை அழிக்கும்; அது பச்சைக்கிளிகளைப்போல் உன்னை அழித்துவிடும்; உன்னைப் பச்சைக்கிளிகளைப்போல் அதிகமாக்கிக்கொள், உன்னை வெட்டுக்கிளிகளைப்போல் அதிகமாக்கிக்கொள்.
16 你增添商贾,多过天上的星; 蝻子吃尽而去。
௧௬உன் வியாபாரிகளை வானத்தின் நட்சத்திரங்களைவிட அதிகமாக்கினாய்; இந்தப் பச்சைக்கிளிகள் பரவிப்பறந்துபோகும்.
17 你的首领多如蝗虫; 你的军长仿佛成群的蚂蚱, 天凉的时候齐落在篱笆上, 日头一出便都飞去, 人不知道落在何处。
௧௭உன் சிறந்த தலைவர்கள் வெட்டுக்கிளிகளுக்கும், உன் தளபதிகள் பெருங்கிளிகளுக்கும் சமமாயிருக்கிறார்கள்; அவைகள் குளிர்ச்சியான நாளில் வேலிகளில் முகாமிட்டு, சூரியன் உதித்த உடனேயே பறந்துபோகும்; பின்பு அவைகள் இருக்கும் இடம் இன்னதென்று தெரியாது.
18 亚述王啊,你的牧人睡觉; 你的贵胄安歇; 你的人民散在山间,无人招聚。
௧௮அசீரியா ராஜாவே, உன் மேய்ப்பர்கள் உறங்குவார்கள்; உன் பிரபலமானவர்கள் படுத்திருப்பார்கள்; உன் மக்கள் மலைகளின்மேல் சிதறியிருக்கிறார்கள், அவைகளைக் கூட்டிச் சேர்ப்பவன் இல்லை.
19 你的损伤无法医治; 你的伤痕极其重大。 凡听你信息的必都因此向你拍掌。 你所行的恶谁没有时常遭遇呢?
௧௯உன் நொறுங்குதலுக்குப் பரிகாரம் இல்லை; உன் காயம் கொடியது; உன் செய்தியைக் கேட்பவர்கள் யாவரும் உன்பேரில் கைகொட்டுவார்கள்; உன் பொல்லாப்பு எந்நேரமும் யார் மேலேதான் பாயாமற்போனது?

< 那鸿书 3 >