< சங்கீதம் 1 >

1 துன்மார்க்கர்களுடைய ஆலோசனையின்படி நடக்காமலும், பாவிகளுடைய வழியில் நிற்காமலும், பரியாசக்காரர்கள் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,
אשרי האיש-- אשר לא הלך בעצת רשעים ובדרך חטאים לא עמד ובמושב לצים לא ישב
2 யெகோவாவுடைய வேதத்தில் பிரியமாக இருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாக இருக்கிற மனிதன் பாக்கியவான்.
כי אם בתורת יהוה חפצו ובתורתו יהגה יומם ולילה
3 அவன் நீரோடை ஓரமாக நடப்பட்டு, தன்னுடைய காலத்தில் தன்னுடைய கனியைத் தந்து, இலை உதிராமல் இருக்கிற மரத்தைப்போல இருப்பான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.
והיה-- כעץ שתול על-פלגי-מים אשר פריו יתן בעתו--ועלהו לא-יבול וכל אשר-יעשה יצליח
4 துன்மார்க்கர்களோ அப்படியில்லாமல், காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள்.
לא-כן הרשעים כי אם-כמץ אשר-תדפנו רוח
5 ஆகையால் துன்மார்க்கர்கள் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை.
על-כן לא-יקמו רשעים--במשפט וחטאים בעדת צדיקים
6 யெகோவா நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கர்களின் வழியோ அழியும்.
כי-יודע יהוה דרך צדיקים ודרך רשעים תאבד

< சங்கீதம் 1 >