< சங்கீதம் 148 >

1 அல்லேலூயா, வானங்களில் உள்ளவைகளே, யெகோவாவை துதியுங்கள்; உன்னதங்களில் அவரைத் துதியுங்கள்.
Alleluja. Chwalcie PANA z niebios, chwalcie go na wysokościach.
2 அவருடைய தூதர்களே, நீங்கள் அனைவரும் அவரைத் துதியுங்கள்; அவருடைய சேனைகளே, நீங்கள் அனைவரும் அவரைத் துதியுங்கள்.
Chwalcie go, wszyscy jego aniołowie; chwalcie go, wszystkie jego zastępy.
3 சூரிய சந்திரரே, அவரைத் துதியுங்கள்; பிரகாசமுள்ள எல்லா நட்சத்திரங்களே, அவரைத் துதியுங்கள்.
Chwalcie go, słońce i księżycu; chwalcie go, wszystkie gwiazdy świecące.
4 வானாதி வானங்களே, அவரைத் துதியுங்கள்; வானத்தின் மேலுள்ள தண்ணீர்களே, அவரைத் துதியுங்கள்.
Chwalcie go, niebiosa nad niebiosami i wody, które są nad niebiosami.
5 அவைகள் யெகோவாவின் பெயரைத் துதிக்கட்டும்; அவர் கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது.
Niech chwalą imię PANA, on bowiem rozkazał i zostały stworzone.
6 அவர் அவைகளை என்றைக்குமுள்ள எல்லாகாலங்களிலும் நிலைக்கும்படி செய்தார்; மாறாத கட்டளையை அவைகளுக்கு நியமித்தார்.
I ustanowił je na wieki wieków; dał prawo, które nie przeminie.
7 பூமியிலுள்ளவைகளே, யெகோவாவை துதியுங்கள்; பெரிய மீன்களே, எல்லா ஆழங்களே,
Chwalcie PANA z ziemi, smoki i wszystkie głębiny.
8 அக்கினியே, கல்மழையே, உறைந்த மழையே, மூடுபனியே, அவர் சொற்படி செய்யும் பெருங்காற்றே,
Ogniu i gradzie, śniegu i paro, wietrze gwałtowny, wykonujący jego rozkaz;
9 மலைகளே, எல்லா மேடுகளே, கனிமரங்களே, எல்லா கேதுருக்களே,
Góry i wszystkie pagórki, drzewa owocowe i wszystkie cedry;
10 ௧0 காட்டுமிருகங்களே, எல்லா நாட்டு மிருகங்களே, ஊரும் பிராணிகளே, இறகுள்ள பறவைகளே,
Zwierzęta i wszelkie bydło, istoty pełzające i ptactwo skrzydlate.
11 ௧௧ பூமியின் ராஜாக்களே, எல்லா மக்களே, பிரபுக்களே, பூமியிலுள்ள எல்லா நியாயாதிபதிகளே,
Królowie ziemscy i wszystkie narody; władcy i wszyscy sędziowie ziemi;
12 ௧௨ வாலிபரே, கன்னிகைகளே, முதிர் வயதுள்ளவர்களே, பிள்ளைகளே, யெகோவாவை துதியுங்கள்.
Młodzieńcy, a także dziewice, starzy i dzieci;
13 ௧௩ அவர்கள் யெகோவாவின் பெயரைத் துதிக்கட்டும்; அவருடைய பெயர் மட்டும் உயர்ந்தது; அவருடைய மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது.
Niech chwalą imię PANA, bo tylko jego imię jest wzniosłe, [a] jego chwała nad ziemią i niebem.
14 ௧௪ அவர் தம்முடைய பரிசுத்தவான்கள் அனைவருக்கும், தம்மைச் சேர்ந்த மக்களாகிய இஸ்ரவேல் மக்களுக்கும் கொண்டாட்டமாக, தம்முடைய மக்களுக்கு ஒரு கொம்பை உயர்த்தினார். அல்லேலூயா.
I wywyższył róg swego ludu, chwałę wszystkich jego świętych, [zwłaszcza] synów Izraela, ludu mu bliskiego. Alleluja.

< சங்கீதம் 148 >