< சங்கீதம் 109 >

1 இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் பாடல். நான் துதிக்கும் தேவனே, மவுனமாக இருக்கவேண்டாம்.
MAIN Kot, me i kin kapikapina, kom der kotin japaimokid!
2 துன்மார்க்கனுடைய வாயும், வஞ்சகவாயும், எனக்கு விரோதமாகத் திறந்திருக்கிறது; பொய் நாவினால் என்னோடு பேசுகிறார்கள்.
Pwe au en me doo jan Kot, o me kin kotaue jara don ia, re lokelokaia on ia ki lo likam.
3 பகையுண்டாக்கும் வார்த்தைகளால் என்னைச் சூழ்ந்துகொண்டு, காரணமில்லாமல் என்னோடு போர்செய்கிறார்கள்.
Re lokaia jued on ia waja karoj, o pei on ia ni jo karepa
4 என்னுடைய அன்புக்கு பதிலாக என்னை விரோதிக்கிறார்கள், நானோ ஜெபம் செய்து கொண்டிருக்கிறேன்.
Ni ai pok on ir, re kin imwintiti on ia; a nai kin poten kapakap.
5 நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமைசெய்கிறார்கள், என்னுடைய அன்புக்குப் பதிலாக என்னைப் பகைக்கிறார்கள்.
Irail depukki ai me mau me jued, o re kin tata kin ia ni ai pok on ir.
6 அவனுக்கு மேலாகத் தீயவனை ஏற்படுத்தி வையும், சாத்தான் அவனுடைய வலதுபக்கத்தில் நிற்கட்டும்.
Kotin kajapwiladan i me doo jan Kot amen, pwen a jaunkapun o me palian I, en mi ni pali maun a.
7 அவனுடைய நியாயம் விசாரிக்கப்படும்போது குற்றவாளியாகட்டும்; அவனுடைய ஜெபம் பாவமாகட்டும்.
Ma a pan pakajau, a pan pakadeikada, pil a kapakap en kadipala i.
8 அவனுடைய நாட்கள் கொஞ்சமாகட்டும்; அவனுடைய வேலையை வேறொருவன் பெறட்டும்.
A ran akan en malaulaula, o a koa en ko on amen.
9 அவனுடைய பிள்ளைகள் திக்கற்றவர்களும், அவனுடைய மனைவி விதவையுமாகட்டும்.
Na jeri kan en japoupou, o a paud en li odi amen.
10 ௧0 அவனுடைய பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சையெடுத்து, தங்களுடைய பாழான வீடுகளிலிருந்து பிச்சை எடுக்கட்டும்.
Na jeri kan en janjarwaru jili o wia poekipoek, o re rapaki kan ar mana, doo jan nan moan im arail.
11 ௧௧ கடன் கொடுத்தவன் அவனுக்கு உள்ளதெல்லாவற்றையும் அபகரித்துக்கொள்ளட்டும்; அவனுடைய உழைப்பின் பலனை அந்நியர்கள் பறித்துக்கொள்ளட்டும்.
Me norok moni en pitia jan i a meakoaroj, o men wai en kulia jan i a dipijou kan.
12 ௧௨ அவனுக்கு ஒருவரும் இரக்கங்காட்டாமலும், அவனுடைய திக்கற்ற பிள்ளைகளுக்குத் தயவு செய்யாமல் போகட்டும்.
O jota me pan kadek on i, o jota me pan jauja na japoupou kan.
13 ௧௩ அவனுடைய சந்ததியார் அழிக்கப்படட்டும்; இரண்டாம் தலைமுறையில் அவர்களுடைய பெயர் இல்லாமல் போகட்டும்.
Kadaudok a en kokoka jan; o mar arail en niki jan nin di kaieu.
14 ௧௪ அவனுடைய முன்னோர்களின் அக்கிரமம் யெகோவாவுக்கு முன்பாக நினைக்கப்படட்டும், அவனுடைய தாயின் பாவம் நீங்காமலிருக்கட்டும்.
Japun en jam a ko en janjal mon Ieowa, o dip en in a ender lapwada.
15 ௧௫ அவைகள் எப்பொழுதும் யெகோவாவுக்கு முன்பாக இருக்கட்டும்; அவர்களுடைய பெயர் பூமியில் இல்லாமல் அழிக்கப்படட்டும்.
Ieowa en kotin majamajan irail ajau karoj, o kataman parail en niki jan in jappa.
16 ௧௬ அவன் தயவுசெய்ய நினைக்காமல், ஏழையும், தேவையுள்ளவனுமாகிய மனிதனைத் துன்பப்படுத்தி, மனமுறிவுள்ளவனைக் கொலைசெய்யும்படி தேடினானே.
Pweki a jota man kadek, pwe a pakipaki me luet o jamama, o me injenjued, pwen kamela i.
17 ௧௭ சாபத்தை விரும்பினான், அது அவனுக்கு வரும்; அவன் ஆசீர்வாதத்தை விரும்பாமற்போனான், அது அவனுக்குத் தூரமாக விலகிப்போகும்.
O a inon ion en riala; ari en lel on! O a jota injenoki kapai, ari, en doo jan i!
18 ௧௮ சாபத்தை அவன் தனக்கு ஆடையாக உடுத்திக்கொண்டான்; அது அவனுடைய உள்ளத்தில் தண்ணீரைப்போலவும், அவனுடைய எலும்புகளில் எண்ணெயைப்போலவும் பாயும்.
A kapwateki me jued duata a likau, ari me jued en kolon lole dueta pil o nan kokon akan dueta le.
19 ௧௯ அது அவன் போர்த்துக்கொள்ளுகிற ஆடையாகவும், எப்பொழுதும் கட்டிக்கொள்ளுகிற வார்க்கச்சையாகவும் இருக்கட்டும்.
Me jued en rajon a likau pup, me a kin likauwiada, o rajon men pirapir me a kin pirapireki.
20 ௨0 இதுதான் என்னை விரோதிக்கிறவர்களுக்கும், என்னுடைய ஆத்துமாவுக்கு விரோதமாகத் தீங்கு பேசுகிறவர்களுக்கும் யெகோவாவால் வரும் பிரதிபலன்.
Iduen Ieowa pan kotin pwain on me palian ia, o me kin lokaia jued duen nai.
21 ௨௧ ஆண்டவராகிய யெகோவாவே, நீர் உமது பெயரினிமித்தம் என்னை ஆதரித்து, உமது கிருபை நலமானதினால், என்னை விடுவித்தருளும்.
A komui, Main Ieowa ai Kot kotin wiawia ia, pweki mar omui; pwe omui kalanan kajampwal, dore ia la!
22 ௨௨ நான் ஏழையும் தேவையுள்ளவனுமாக இருக்கிறேன், என்னுடைய இருதயம் எனக்குள் புண்பட்டிருக்கிறது.
Pwe nai me luet o jamama, o nan monion i olar.
23 ௨௩ சாயும் நிழலைப்போல் அகன்றுபோனேன்; வெட்டுக்கிளியைப்போல் பறக்கடிக்கப்படுகிறேன்.
I kin tanwei dueta mota, o i pan kamajak wei dueta manjiek amen.
24 ௨௪ உபவாசத்தினால் என்னுடைய முழங்கால்கள் பலவீனமடைகிறது; என்னுடைய சரீரமும் பலமற்று உலர்ந்து போகிறது.
Na i kat luete kilar kaijejol, o uduk ai tikitikilar;
25 ௨௫ நான் அவர்களுக்கு நிந்தையானேன்; அவர்கள் என்னைப் பார்த்து, தங்களுடைய தலையை அசைக்கிறார்கள்.
O i wialar men lalaue re’rail; ni ar kilan ia, re kin due duailok!
26 ௨௬ என் தேவனாகிய யெகோவாவே எனக்கு உதவிசெய்யும்; உமது கிருபையின்படி என்னைக் காப்பாற்றும்.
Main Ieowa, ai Kot, kom kotin dore ia la duen omui kalanan!
27 ௨௭ இது உமது கரம் என்றும், யெகோவாவே, தேவனே நீர் இதைச் செய்தீர் என்றும், அவர்கள் அறிவார்களாக.
Pwe ren aja, mepukat tapi jan ni lim omui, me komui Ieowa kotin wiadar mepukat.
28 ௨௮ அவர்கள் சபித்தாலும், நீர் ஆசீர்வதியும்; அவர்கள் எழும்பினாலும் வெட்கப்பட்டுப்போகட்டும்; உமது அடியானோ மகிழ்சியாக இருப்பேன்.
Menda, ma re lalaue, kom kotin kapai ia da. Ma re palian ia, ren namenokala, pwe japwilim omui ladu en pereperen.
29 ௨௯ என்னுடைய விரோதிகள் அவமானத்தால் மூடப்பட்டு, தங்களுடைய வெட்கத்தைச் சால்வையைப்போல் அணிந்துக்கொள்வார்களாக.
Re kotin wiai on ai imwintiti, ren likau kida namenok, o ren purion nan me jued dueta likau pup.
30 ௩0 யெகோவாவை நான் என்னுடைய வாயினால் மிகவும் துதித்து, அநேகர் நடுவிலே அவரைப் புகழுவேன்.
I pan danke Ieowa melel ni au ai, o i pan kapina i nan pun en me toto.
31 ௩௧ தண்டனைக்குள்ளாகத் தீர்க்கிறவர்களிடம் ஒடுக்கப்பட்டவனுடைய ஆத்துமாவை காப்பாற்றும்படி அவர் அவனுடைய வலதுபக்கத்தில் நிற்பார்.
Pwe a kotikot ni pali maun en me jamama, pwen dorela i jan ir, me kadeikada i, en kamela.

< சங்கீதம் 109 >