< உபாகமம் 32 >

1 “வானங்களே, செவிகொடுங்கள், நான் பேசுவேன்; பூமியே, என் வாய்மொழிகளைக் கேட்பாயாக.
ఆకాశమా! నేను చెప్పేది విను! నన్ను మాట్లాడనియ్యి. భూగోళమా, నా నోటి మాటలు ఆలకించు.
2 மழையானது இளம்பயிரின்மேல் பொழிவதுபோல, என் உபதேசம் பொழியும்; பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல, என் வசனம் இறங்கும்.
నా ఉపదేశం వానలా కురుస్తుంది. నా మాటలు మంచు బిందువుల్లా, లేతగడ్డిపై పడే చినుకుల్లా, పచ్చికపై కురిసే చిరుజల్లులా, మొక్కలపై కురిసే జల్లులా ఉంటాయి.
3 யெகோவாவுடைய நாமத்தை பிரபலப்படுத்துவேன்; நம்முடைய தேவனுக்கு மகத்துவத்தைச் செலுத்துங்கள்.
నేను యెహోవా పేరును ప్రకటిస్తాను. మన దేవునికి ఘనత ఆపాదించండి.
4 “அவர் கன்மலை; அவருடைய செயல் உத்தமமானது; அவருடைய வழிகளெல்லாம் நியாயம், அவர் அநீதி இல்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்.
ఆయన మనకు ఆశ్రయ దుర్గం. ఆయన పని పరిపూర్ణం. ఆయన మార్గాలన్నీ న్యాయమైనవి. ఆయన నమ్మదగిన దేవుడు. ఆయన పక్షపాతం చూపని దేవుడు. ఆయన న్యాయవంతుడు, యథార్థవంతుడు.
5 அவர்களோ தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள், அவர்கள் அவருடைய பிள்ளைகள் அல்ல; இதுவே அவர்களுடைய காரியம்; அவர்கள் மாறுபாடும் தாறுமாறுமுள்ள சந்ததியார்.
వారు తమను తాము చెడగొట్టుకున్నారు. వారు ఆయన సంతానం కారు. వారు దోషులు, మూర్ఖులైన వక్రతరం.
6 விவேகமில்லாத மதிகெட்ட மக்களே, இப்படியா யெகோவாவுக்குப் பதிலளிக்கிறீர்கள், உன்னை ஆட்கொண்ட தகப்பன் அவரல்லவா? உன்னை உண்டாக்கி உன்னை நிலைப்படுத்தினவர் அவரல்லவா?
బుద్ధి, ఇంగితం లేని మనుషులారా, యెహోవాకు ఇదా మీరిచ్చే కానుక? ఆయన మీ తండ్రి కాడా? ఆయనే గదా మిమ్మల్ని పుట్టించి స్థిరపరచింది?
7 ஆரம்பநாட்களை நினை; தலைமுறை தலைமுறையாக கடந்துபோன வருடங்களைக் கவனித்துப்பார்; உன் தகப்பனைக் கேள், அவன் உனக்கு அறிவிப்பான்; உன் மூப்பர்களைக் கேள், அவர்கள் உனக்குச் சொல்லுவார்கள்.
గతించిన కాలాన్ని గుర్తుకు తెచ్చుకోండి. తరతరాల సంవత్సరాల సంగతులను తలపోయండి. మీ తండ్రిని అడుగు, అతడు నీకు చూపిస్తాడు. పెద్దలను అడుగు, వాళ్ళు నీకు చెబుతారు.
8 உன்னதமான தேவன் மக்களுக்குச் சொத்துக்களைப் பங்கிட்டு, ஆதாமின் பிள்ளைகளை வெவ்வேறாகப் பிரித்த காலத்தில், இஸ்ரவேல் மக்களுடைய எண்ணிக்கைக்குத்தக்கதாக, அனைத்து மக்களின் எல்லைகளைத் திட்டம்செய்தார்.
మహోన్నతుడు ప్రజలకు వారి వారి వారసత్వాలను పంచి ఇచ్చినప్పుడు, మానవ జాతులను వేరు పరచినపుడు, ఇశ్రాయేలు ప్రజల లెక్క ప్రకారం ప్రజలకు హద్దులు నియమించాడు.
9 யெகோவாவுடைய மக்களே அவருடைய பங்கு; யாக்கோபு அவருக்குச் சொந்தமானவர்கள்.
యెహోవా వంతు ఆయన ప్రజలే. ఆయన వారసత్వం యాకోబు సంతానమే.
10 ௧0 “பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான வெட்டவெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார், அவனை நடத்தினார், அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண்மணியைப் போலக் காத்தருளினார்.
౧౦ఆయన ఆ ప్రజను ఎడారి ప్రదేశంలో కనుగొన్నాడు. బీడు భూమిలో, భీకరమైన శబ్దాలు ఉన్న నిర్జన ప్రదేశంలో అతణ్ణి రక్షించి ఆదుకున్నాడు. తన కనుపాపలా అతణ్ణి కాపాడాడు.
11 ௧௧ கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் இறக்கைகளை விரித்து, குஞ்சுகளை எடுத்து, அவைகளைத் தன் இறக்கைகளின்மேல் சுமந்துகொண்டுபோகிறதுபோல,
౧౧గద్ద తన గూడు రేపి తన పిల్లలపై ఎగురుతూ రెక్కలు చాపుకుని ఆ పిల్లలను రెక్కల మీద మోసినట్టు యెహోవా చేశాడు.
12 ௧௨ யெகோவா ஒருவரே அவனை வழிநடத்தினார், அந்நிய தெய்வம் அவருடன் இருந்ததில்லை.
౧౨యెహోవా ఒక్కడే ఆ ప్రజలకు దారి చూపుతున్నాడు. వేరే దేవుళ్ళెవరూ ఆయనకు సాటిరారు.
13 ௧௩ பூமியிலுள்ள உயர்ந்த இடங்களின்மேல் அவனை ஏறிவரச்செய்தார்; வயலில் விளையும் பலனை அவனுக்குச் சாப்பிடக் கொடுத்தார்; கன்மலையிலுள்ள தேனையும் கற்பாறையிலிருந்து வடியும் எண்ணெயையும் அவன் சாப்பிடும்படி செய்தார்.
౧౩లోకంలో ఉన్నత స్థలాలపై ఆ ప్రజలను ఎక్కించాడు. పొలాల పంటలు వారికి తినిపించాడు. కొండబండల తేనెతో, చెకుముకి రాతిబండ నూనెతో వారిని తృప్తిపరిచాడు.
14 ௧௪ பசுவின் வெண்ணெயையும், ஆட்டின் பாலையும், பாசானில் மேயும் ஆட்டுக்குட்டிகள், ஆட்டுக்கடாக்கள், வெள்ளாட்டுக்கடாக்கள் இவைகளுடைய கொழுப்பையும், கொழுமையான கோதுமையையும், இரத்தம்போன்ற பொங்கிவழிகிற திராட்சைரசத்தையும் சாப்பிட்டாய்.
౧౪ఆవు మజ్జిగను, గొర్రెల, మేకల పాలనూ, గొర్రెపిల్లల కొవ్వునూ, బాషాను పొట్టేళ్లను, మేకపోతులనూ, శ్రేష్ఠమైన గోదుమ పిండినీ మీకిచ్చాడు. మంచి ద్రాక్షరసంతో చేసిన మద్యం మీరు తాగారు.
15 ௧௫ “யெஷூரன் கொழுத்துப்போய் உதைத்தான்; கொழுத்து, பருத்து, கொழுப்பு அதிகமானதால், தன்னை உண்டாக்கின தேவனைவிட்டு, தன் இரட்சிப்பின் கன்மலையை அசட்டைசெய்தான்.
౧౫యెషూరూను కొవ్వి కాలు దువ్వాడు, మీరు కొవ్వుతో బలిసి మొద్దులాగా అయ్యారు. యెషూరూను తనను పుట్టించిన దేవుణ్ణి వదిలేశాడు. తన రక్షణ శిలను నిరాకరించాడు.
16 ௧௬ அந்நிய தெய்வங்களால் அவருக்கு எரிச்சலை மூட்டினார்கள்; அருவருப்பானவைகளினால் அவரைக் கோபப்படுத்தினார்கள்.
౧౬వారు ఇతర దేవుళ్ళను అనుసరించి ఆయనకు రోషం పుట్టించారు. అసహ్యమైన విగ్రహాలు పెట్టుకుని ఆయనకు కోపం తెప్పించారు.
17 ௧௭ அவர்கள் தேவனுக்குப் பலியிடவில்லை; தாங்கள் அறியாதவைகளும், தங்கள் முற்பிதாக்கள் பயப்படாதவைகளும், புதுமையாகத் தோன்றிய புது தெய்வங்களுமாகிய பேய்களுக்கே பலியிட்டார்கள்.
౧౭వారు దేవత్వం లేని దయ్యాలకు బలులు అర్పించారు. తమకు తెలియని దేవుళ్ళకూ, కొత్తగా పుట్టుకొచ్చిన దేవుళ్ళకూ, మీ పితరులు భయపడని దేవుళ్ళకూ బలులర్పించారు.
18 ௧௮ உன்னை பிறக்கச் செய்த கன்மலையை நீ நினைக்காமற்போனாய்; உன்னைப் பெற்ற தேவனை மறந்தாய்.
౧౮నీకు తండ్రి లాంటి బండను వదిలేశావు, నిన్ను కన్న దేవుణ్ణి మరిచావు.
19 ௧௯ “யெகோவா அதைக்கண்டு, தமது மகன்களும், மகள்களும் தம்மைக் கோபப்படுத்தியதால் மனச்சோர்வடைந்து, அவர்களைப் புறக்கணித்து:
౧౯యెహోవా దీన్ని చూసి వాళ్ళని వదిలేశాడు, తన కొడుకులూ కూతుర్లూ ఆయన్నలా రేపారు.
20 ௨0 என் முகத்தை அவர்களுக்கு மறைப்பேன்; அவர்களுடைய முடிவு எப்படியிருக்கும் என்று பார்ப்பேன்; அவர்கள் மகா மாறுபாடுள்ள சந்ததி; உண்மையில்லாத பிள்ளைகள்.
౨౦ఆయనిలా అన్నాడు. “వారికి నా ముఖాన్ని దాచు కుంటాను. వాళ్ళ అంతం ఎలా ఉంటుందో చూస్తాను. వాళ్ళు మొండి తరం, విశ్వసనీయత లేని పిల్లలు.
21 ௨௧ தெய்வம் அல்லாதவைகளினால் எனக்கு எரிச்சலை மூட்டி, தங்களுடைய வீணான தீயசெயல்களினால் என்னைக் கோபப்படுத்தினார்கள்; ஆகையால் மதிக்கப்படாத மக்களினால் அவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கி, மதிகெட்ட மக்களால் அவர்களைப் கோபப்படுத்துவேன்.
౨౧దేవుడు కాని దానితో వాళ్ళు నాకు రోషం తెప్పించారు. తమ పనికిమాలిన విగ్రహాలతో నాకు కోపం తెప్పించారు. ప్రజలు కాని వారిని చూసి వారు అసూయ పడేలా చేస్తాను. తెలివిలేని రాజ్యాన్ని చూసి వారికి కోపం వచ్చేలా చేస్తాను.
22 ௨௨ என் கோபத்தினால் அக்கினி பற்றிக்கொண்டது, அது தாழ்ந்த நரகம்வரை எரியும்; அது பூமியையும், அதின் பலனையும் அழித்து, மலைகளின் அஸ்திபாரங்களை வேகச்செய்யும். (Sheol h7585)
౨౨నా కోపాగ్ని రగులుకుంది. పాతాళ అగాధం వరకూ అది మండుతుంది. భూమినీ దాని పంటనూ అది కాల్చేస్తుంది. పర్వతాల పునాదులను రగులబెడుతుంది. (Sheol h7585)
23 ௨௩ “தீமைகளை அவர்கள்மேல் குவிப்பேன்; என்னுடைய அம்புகளையெல்லாம் அவர்கள்மேல் பயன்படுத்துவேன்.
౨౩వారిపై విపత్తుల సమూహం తెప్పిస్తాను. వారి మీదికి నా బాణాలు వదులుతాను.
24 ௨௪ அவர்கள் பசியினால் வாடி, சுட்டெரிக்கும் வெப்பத்தினாலும், கொடிய தண்டனையினாலும் இறந்துபோவார்கள்; கொடிய மிருகங்களின் பற்களையும், தரையில் ஊரும் பாம்புகளின் விஷத்தையும் அவர்களுக்குள் அனுப்புவேன்.
౨౪వారు కరువుతో అల్లాడతారు. ఒళ్ళు కాలే మంటతో, పెను నాశనంతో క్షీణిస్తారు. దుమ్ములో పాకే వాటి విషాన్నీ అడివి జంతువుల కోరలనూ వారిమీదికి రప్పిస్తాను.
25 ௨௫ வெளியிலே பட்டயமும், உள்ளே பயங்கரமும், வாலிபனையும், இளம்பெண்ணையும், குழந்தையையும், நரைத்த கிழவனையும் அழிக்கும்.
౨౫బయట కత్తి చావు తెస్తుంది. పడక గదుల్లో భయం పీడిస్తుంది. యువకులూ, కన్యలూ, పసికందులూ, నెరిసిన వెంట్రుకలున్నవారూ నాశనం అవుతారు.
26 ௨௬ எங்கள் கை உயர்ந்ததென்றும், யெகோவா இதையெல்லாம் செய்யவில்லை என்றும் அவர்களுடைய பகைவர்கள் தவறான எண்ணம்கொண்டு சொல்லுவார்கள் என்று,
౨౬వాళ్ళను చాలా దూరం విసిరేస్తాను. వాళ్ళ జ్ఞాపకాలు మానవ జాతిలో లేకుండా తుడిచేస్తాను.
27 ௨௭ நான் எதிரியின் கோபத்திற்கு பயப்படாமல் இருந்தேன் என்றால், நான் அவர்களை மூலைக்குமூலை சிதறடித்து, மனிதர்களுக்குள் அவர்களுடைய பெயர் அழிந்துபோகச்செய்வேன் என்று சொல்லியிருப்பேன்.
౨౭కానీ అలా ఎందుకు చెయ్యలేదంటే, వాళ్ళ విరోధులు రెచ్చిపోతారేమో, వాళ్ళ విరోధులు అపార్థం చేసుకుని, ‘పైచెయ్యి మనదే, ఇది చేసింది యెహోవా కాదు’ అంటారేమో.”
28 ௨௮ “அவர்கள் யோசனை இல்லாத மக்கள், அவர்களுக்கு உணர்வு இல்லை.
౨౮ఇశ్రాయేలు తెలివిలేని ప్రజ. వాళ్ళలో వివేకమే లేదు.
29 ௨௯ அவர்கள் ஞானமடைந்து, இதை உணர்ந்து, தங்கள் முடிவைச் சிந்தித்துக்கொண்டால் நலமாயிருக்கும் என்றார்.
౨౯వారికి జ్ఞానముంటే, దీన్ని వాళ్ళు అర్థం చేసుకుంటే, వాళ్లకు రాబోయే ఆపద గమనించుకుంటే,
30 ௩0 அவர்களுடைய கன்மலை அவர்களை விற்காமலும், யெகோவா அவர்களை ஒப்புக்கொடாமலும் இருந்தாரானால், ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்தி, இரண்டுபேர் பத்தாயிரம்பேரைத் துரத்துவது எப்படி?
౩౦వారి ఆశ్రయదుర్గం వారిని అమ్మి వేయకపోతే, యెహోవా వారిపై మనకు విజయాన్నివ్వకపోతే, ఒకడు వేయి మందిని ఎలా తరుముతాడు? పదివేల మందిని ఇద్దరు ఎలా పారదోలతారు?
31 ௩௧ தங்கள் கன்மலை நம்முடைய கன்மலையைப்போல் அல்ல என்று நம்முடைய எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்.
౩౧మన శత్రువుల బండ మన ఆశ్రయదుర్గం లాంటిది కాదు. మన శత్రువులే దీనికి సాక్షులు.
32 ௩௨ அவர்களுடைய திராட்சைச்செடி, சோதோமிலும் கொமோரா நிலங்களிலும் பயிரான திராட்சைச்செடியிலும் குறைந்த தரமுள்ளதாக இருக்கிறது, அவைகளின் பழங்கள் விஷமும் அவைகளின் குலைகள் கசப்புமாக இருக்கிறது.
౩౨వారి ద్రాక్షచెట్టు సొదొమ ద్రాక్ష చెట్టు నుంచి వచ్చింది. అది గొమొర్రా పొలాల్లోనిది. వారి ద్రాక్షపళ్ళు విషపు ద్రాక్షపళ్ళు. వాటి గెలలు చేదు.
33 ௩௩ அவர்களுடைய திராட்சைரசம் வலுசர்ப்பங்களின் விஷமும், விரியன் பாம்புகளின் கொடிய விஷமுமானது.
౩౩వారి ద్రాక్షారసం పాము విషం. నాగుపాముల క్రూర విషం.
34 ௩௪ “இது என்னிடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, என் பொக்கிஷங்களில் இது முத்திரை போடப்பட்டு இருக்கிறதில்லையோ?
౩౪ఇది నా రహస్య ఆలోచన కాదా? నా ఖజానాల్లో భద్రంగా లేదా?
35 ௩௫ பழிவாங்குவதும் பதிலளிப்பதும் எனக்கு உரியது; ஏற்றகாலத்தில் அவர்களுடைய கால் தள்ளாடும்; அவர்களுடைய ஆபத்துநாள் நெருங்கியிருக்கிறது; அவர்களுக்கு சம்பவிக்கும் காரியங்கள் விரைவாக வரும்.
౩౫వారి కాలు జారే కాలంలో పగ తీర్చే పని నాదే. ప్రతిఫలమిచ్చేది నేనే. వారి ఆపద్దినం దగ్గర పడింది. వారి అంతం త్వరగా వస్తుంది.
36 ௩௬ யெகோவா தம்முடைய மக்களை நியாயந்தீர்த்து, அவர்கள் பெலன் போயிற்று என்றும், அடைக்கப்பட்டவர்களாவது விடுதலை பெற்றவர்களாவது ஒருவரும் இல்லையென்றும் காணும்போது, தம்முடைய ஊழியக்காரர்கள்மேல் பரிதாபப்படுவார்.
౩౬బానిస గానీ, స్వతంత్రుడు గానీ, మరెవరూ మిగలకపోతే, వారికి ఆధారం లేనప్పుడు చూసి, తన సేవకులకు జాలి చూపిస్తాడు, తన ప్రజలకు యెహోవా నిర్ణయం చేస్తాడు.
37 ௩௭ அப்பொழுது அவர்: அவர்கள் பலியிட்ட பலிகளின் கொழுப்பைச் சாப்பிட்டு, பானபலிகளின் திராட்சைரசத்தைக் குடித்த அவர்களுடைய தெய்வங்களும் அவர்கள் நம்பின கன்மலையும் எங்கே?
౩౭అప్పుడాయన వారి దేవుళ్ళు ఎక్కడ? వాళ్ళు నమ్ముకున్న బండ ఏది?
38 ௩௮ அவைகள் எழுந்து உங்களுக்கு உதவிசெய்து உங்களுக்கு மறைவிடமாயிருக்கட்டும்.
౩౮వారికి ఆధారం లేనప్పుడు చూసి, వారి నైవేద్యాల కొవ్వు తిని, వారి పానీయార్పణ ద్రాక్షారసాన్ని తాగిన వారి దేవుళ్ళు ఎక్కడ? వారు లేచి మీకు సాయపడనివ్వండి. వారినే మిమ్మల్ని కాపాడనివ్వండి.
39 ௩௯ “நான் நானே அவர், என்னுடன் வேறே தேவன் இல்லை என்பதை இப்பொழுது பாருங்கள்; நான் கொல்லுகிறேன், நான் உயிர்ப்பிக்கிறேன்; நான் காயப்படுத்துகிறேன், நான் குணமாக்குகிறேன்; என் கைக்குத் தப்புவிப்பவர் இல்லை.
౩౯చూడండి. నేనే, నేను మాత్రమే దేవుణ్ణి. నేను తప్ప మరో దేవుడు లేడు. చంపేది నేనే, బతికించేది నేనే. దెబ్బ కొట్టేది నేనే, బాగు చేసేది నేనే. నా చేతిలో నుంచి విడిపించేవాడెవడూ లేడు.
40 ௪0 நான் என் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி, நான் என்றென்றைக்கும் உயிரோடிருக்கிறவர் என்கிறேன்.
౪౦ఆకాశం వైపు నా చెయ్యెత్తి నేనెప్పటికీ జీవిస్తున్నట్టుగా పని చేస్తాను.
41 ௪௧ மின்னும் என் பட்டயத்தை நான் கூர்மையாக்கி, என் கையானது நியாயத்தைப் பிடித்துக்கொள்ளுமானால், என் எதிரிகளிடத்தில் பழிவாங்கி, என்னைப் பகைக்கிறவர்களுக்குப் பதில்கொடுப்பேன்.
౪౧నేను తళతళలాడే నా కత్తి నూరి, నా చెయ్యి న్యాయం తీర్చడం మొదలెడితే, నా శత్రువులకు ప్రతీకారం చేస్తాను. నన్ను ద్వేషించే వారికి ప్రతిఫలమిస్తాను.
42 ௪௨ கொலைசெய்யப்பட்டும், சிறைப்பட்டும் போனவர்களுடைய இரத்தத்தாலே என் அம்புகளை வெறிகொள்ளச்செய்வேன்; என் பட்டயம் தலைவர்கள் முதற்கொண்டு சகல எதிரிகளின் மாம்சத்தையும் அழிக்கும்.
౪౨నా బాణాలు రక్తంతో మత్తెక్కి పోయేలా చేస్తాను. నా కత్తి, మాంసం భక్షిస్తుంది! చచ్చిన వారి రక్తాన్నీ, బందీల రక్తాన్నీ, శత్రువు అధికారులనూ అవి తింటాయి.
43 ௪௩ “மக்களே, அவருடைய மக்களுடன் மகிழ்ச்சியாயிருங்கள்; அவர் தமது ஊழியக்காரர்களின் இரத்தத்திற்குப் பழிவாங்கி, தம்முடைய எதிரிகளுக்குப் பதில்கொடுத்து, தமது தேசத்தின்மேலும் தமது மக்களின்மேலும் கிருபையுள்ளவராக இருப்பார்”.
౪౩ఇతర రాజ్యాల ప్రజలారా, దేవుని ప్రజలతో ఆనందించండి. వధకు గురి అయిన తన సేవకుల రక్తానికి ఆయన పగ తీరుస్తాడు. తన విరోధులకు ప్రతీకారం చేస్తాడు. తన దేశం కోసం, తన ప్రజల కోసం ప్రాయశ్చిత్తం చేస్తాడు.
44 ௪௪ மோசேயும் நூனின் மகனாகிய யோசுவாவும் வந்து, இந்தப் பாட்டின் வார்த்தைகளையெல்லாம் மக்கள் கேட்கத்தக்கதாகச் சொன்னார்கள்.
౪౪మోషే, నూను కొడుకు యెహోషువ ఈ పాటలోని పదాలన్నీ ప్రజలకు పాడి వినిపించారు.
45 ௪௫ மோசே இந்த வார்த்தைகளையெல்லாம் இஸ்ரவேலர்கள் யாவருக்கும் சொல்லி முடித்தபின்பு,
౪౫మోషే ఈ పాట ఇశ్రాయేలు ప్రజల కోసం పాడి ముగించాడు.
46 ௪௬ அவர்களை நோக்கி: “இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் உங்கள் பிள்ளைகள் செய்யும்படி கவனமாயிருக்க, நீங்கள் அவர்களுக்குக் கற்பிக்கும்படி, நான் இன்று உங்களுக்குச் சாட்சியாக ஒப்புவிக்கிற வார்த்தைகளையெல்லாம் உங்கள் மனதிலே வையுங்கள்.
౪౬తరువాత అతడు వారితో ఇలా చెప్పాడు, దీనికి మీరే సాక్ష్యం. ఈ రోజు నేను పలికిన మాటలన్నీ మీ మనస్సుల్లో నింపుకుని, ఈ ధర్మశాస్త్ర ప్రమాణాలన్నీ అనుసరించి నడుచుకోవాలని మీ సంతానానికి ఆజ్ఞాపించాలి.
47 ௪௭ இது உங்களுக்கு பயனற்ற காரியம் அல்லவே; இது உங்கள் உயிராயிருக்கிறது, நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ள யோர்தானைக் கடந்துபோய்ச் சேரும் தேசத்தில் இதினால் உங்கள் நாட்களை நீடிக்கச்செய்வீர்கள்” என்றான்.
౪౭ఇవి మీకు నిష్ఫలమైన మాటలు కావు, ఇవి మీకు జీవదాయకమైనవి. మీరు యొర్దాను దాటి స్వాధీనం చేసుకోబోతున్న దేశంలో దీన్ని బట్టి మీరు దీర్ఘాయుష్మంతులవుతారు.
48 ௪௮ அந்த நாளிலேதானே யெகோவா மோசேயை நோக்கி:
౪౮అదే రోజు యెహోవా మోషేతో ఇలా చెప్పాడు, యెరికో ఎదుట ఉన్న మోయాబు దేశంలోని అబారీం అనే ఈ పర్వతం,
49 ௪௯ “நீ எரிகோவுக்கு எதிரேயுள்ள மோவாப் தேசத்திலுள்ள இந்த அபாரீம் என்னும் மலைகளிலிருக்கிற நேபோ மலையில் ஏறி, நான் இஸ்ரவேல் சந்ததியாருக்கு சொந்தமாகக் கொடுக்கும் கானான் தேசத்தைப் பார்;
౪౯అంటే నెబో కొండ ఎక్కు. నేను ఇశ్రాయేలీయులకు వారసత్వంగా ఇస్తున్న కనాను దేశాన్ని నువ్వు చూస్తావు.
50 ௫0 நீங்கள் சீன் வனாந்திரத்திலுள்ள காதேசிலே மேரிபாவின் தண்ணீரின் அருகில் இஸ்ரவேல் மக்களுக்குள்ளே என்னைப் பரிசுத்தம்செய்யாமல், அவர்கள் நடுவே என் கட்டளைகளை மீறினதினாலே,
౫౦నీ సోదరుడు అహరోను, హోరు కొండ మీద చనిపోయి తమ పితరుల దగ్గరికి చేరినట్టు, నువ్వు ఎక్కబోతున్న కొండ మీద చనిపోయి, నీ పితరుల దగ్గరికి వెళ్తావు.
51 ௫௧ உன் சகோதரனாகிய ஆரோன், ஓர் என்னும் மலையிலே மரணமடைந்து, தன் முன்னோர்களிடத்தில் சேர்க்கப்பட்டதுபோல நீயும் ஏறப்போகிற மலையிலே மரணமடைந்து, உன் முன்னோர்களிடத்தில் சேர்க்கப்படுவாய்.
౫౧ఎందుకంటే, మీరు సీను ఎడారిలో కాదేషు మెరీబా నీళ్ల దగ్గర ఇశ్రాయేలు ప్రజల మధ్య నన్ను ఘనపరచక ఇశ్రాయేలు ప్రజల మధ్య నా మీద తిరుగుబాటు చేశారు.
52 ௫௨ நான் இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுக்கப்போகிற எதிரேயுள்ள தேசத்தை நீ பார்ப்பாய்; ஆனாலும் அதற்குள் நீ நுழைவதில்லை” என்றார்.
౫౨నువ్వు ఆ దేశాన్ని దూరం నుంచి చూస్తావు. నేను ఇశ్రాయేలు ప్రజలకు ఇస్తున్న ఆ దేశంలో నువ్వు అడుగుపెట్టవు.

< உபாகமம் 32 >