< 2 நாளாகமம் 9 >

1 சேபாவின் அரசி, சாலொமோனின் புகழைக் கேள்விப்பட்டபோது, விடுகதைகளினாலே சாலொமோனை சோதிக்கிறதற்காக, திரளான கூட்டத்தினரோடும், கந்தவர்க்கங்களையும், மிகுதியான பொன்னையும் இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும் எருசலேமுக்கு வந்தாள்; அவள் சாலொமோனிடத்திற்கு வந்தபோது, தன் மனதிலிருந்த எல்லாவற்றையும் குறித்து அவனிடத்தில் உரையாடினாள்.
Царица же Савска услыша имя Соломоново и прииде искусити его гаданьми во Иерусалиме с силою тяжкою зело: и велблюды носящии ароматы и злата множество и камения драгаго: и прииде к Соломону и глагола ему вся, елика беша в сердцы ея.
2 அப்பொழுது சாலொமோன் அவள் கேட்டவைகளுக்கெல்லாம் பதில் கூறினான்; அவளுக்கு பதில் கூறமுடியாதபடி ஒன்றாகிலும் சாலொமோனுக்கு மறைபொருளாயிருக்கவில்லை.
И возвести ей Соломон вся словеса ея, и не прейде слово, егоже бы не возвестил ей.
3 சேபாவின் அரசி சாலொமோனுடைய பானபாத்திரக்காரர்களையும், அரண்மனையையும்,
И виде царица Савска премудрость Соломоню, и дом егоже созда,
4 பந்தியின் உணவு வகைகளையும், அவன் ஊழியக்காரரின் வீடுகளையும், உத்தியோகஸ்தரின் வரிசையையும், அவர்கள் உடைகளையும், அவனுடைய பானபாத்திரக்காரர்களையும், அவர்கள் உடைகளையும், யெகோவாவுடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கும் நடைமண்டபத்தையும் கண்டபோது அவள் ஆச்சரியத்தால் பிரமித்து,
и яди столов его, и седалища рабов его, и состояние служебников его и ризы их, и виночерпчия его и украшение их, и всесожжения, яже жряше в дому Господни, и вне себе бысть.
5 ராஜாவை நோக்கி: உம்முடைய செயல்களையும், உம்முடைய ஞானத்தையும்குறித்து, நான் என் தேசத்திலே கேட்ட செய்தி உண்மைதான்.
Рече же ко царю: истинно есть слово, еже слышах в земли моей о словесех твоих и о премудрости твоей:
6 நான் வந்து அதை என் கண்களால் பார்க்கும்வரை அவர்களுடைய வார்த்தைகளை நம்பவில்லை; உம்முடைய பெரிய ஞானத்தில் பாதியாகிலும் அவர்கள் எனக்கு அறிவிக்கவில்லை; நான் கேள்விப்பட்ட புகழ்ச்சியைவிட அதிகம் உண்டாயிருக்கிறது.
и не веровах словесем их, дондеже приидох, и видеста очи мои, и се, не возвестиша мне половины множества премудрости твоея: приложил еси ко слышанию яже слышах:
7 உம்முடைய மக்கள் பாக்கியவான்கள்; எப்போதும் உமக்கு முன்பாக நின்று, உம்முடைய ஞானத்தைக் கேட்கிற உம்முடைய ஊழியக்காரர்களும் பாக்கியவான்கள்.
блажени мужие твои и блажени раби твои сии, иже предстоят пред тобою на всяко время и слышат премудрость твою:
8 உம்முடைய தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக நீர் ராஜாவாயிருக்கும்படிக்கு, உம்மைத் தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கச் செய்ய, உம்மேல் பிரியங்கொண்ட உம்முடைய தேவனாகிய யெகோவா ஸ்தோத்திரிக்கப்படுவாராக; உம்முடைய தேவன் இஸ்ரவேலை என்றென்றைக்கும் நிலைநிறுத்தும்படிக்கு சிநேகிக்கிறதாலே, அவர் நியாயமும் நீதியும் செய்கிறதற்கு உம்மை அவர்கள்மேல் ராஜாவாக வைத்தார் என்றாள்.
да будет Господь Бог твой благословен, иже благоволи в тебе, еже дати тя на престол Свой царя Господу Богу твоему: зане возлюби Господь Бог твой Израиля, еже утвердити его во век, и постави тя над ними царя, да сотвориши суд и правду.
9 அவள் ராஜாவுக்கு நூற்றிருபது தாலந்து பொன்னையும், மிகுதியான கந்தவர்க்கங்களையும், இரத்தினங்களையும் கொடுத்தாள்; சேபாவின் அரசி ராஜாவாகிய சாலொமோனுக்குக் கொடுத்த அப்படிப்பட்ட கந்தவர்க்கங்களைப்போல ஒருபோதும் வரவில்லை.
Даде же царю сто двадесять талант злата и ароматы многи зело и камение драгое, и не быша ароматы таковы яко сия, яже даде царица Савска царю Соломону.
10 ௧0 ஓப்பீரிலிருந்து பொன்னைக் கொண்டுவருகிற ஈராமின் வேலைக்காரர்களும் சாலொமோனின் வேலைக்காரர்களும் வாசனை மரங்களையும் இரத்தினங்களையும் கொண்டுவந்தார்கள்.
Но и раби Хирамовы с рабы Соломоними приношаху злато Соломону драгое.
11 ௧௧ அந்த வாசனை மரங்களால் ராஜா யெகோவாவுடைய ஆலயத்திற்கும் ராஜ அரண்மனைக்கும் படிக்கட்டுகளையும், இசைக்கலைஞர்களுக்குச் சுரமண்டலங்களையும் தம்புருக்களையும் உண்டாக்கினான்; அப்படிப்பட்டவைகள் அதற்கு முன்னே யூதேயா தேசத்தில் ஒருக்காலும் காணப்படவில்லை.
И сотвори Соломон царь от древ певговых степени в дом Господень и в дом царев, и гусли и псалтири песней, и никогдаже видена быша в земли Иудине прежде такоая.
12 ௧௨ சேபாவின் அரசி ராஜாவுக்குக் கொண்டுவந்தவைகளைவிட அவள் ஆசைப்பட்டுக் கேட்ட எல்லாவற்றையும் ராஜாவாகிய சாலொமோன் அவளுக்கு அதிகமாகக் கொடுத்தான்; பின்பு அவள் தன் கூட்டத்தினரோடு தன் தேசத்திற்குத் திரும்பிப்போனாள்.
Царь же Соломон даде царице Савстей вся по желанию ея, ихже просила, кроме всех яже принесе царю Соломону, и возвратися в землю свою.
13 ௧௩ சிறிய மற்றும் பெரிய வியாபாரிகள் கொண்டுவரும் பொன்னைத்தவிர, சாலொமோனுக்கு ஒவ்வொரு வருடத்திலும் வந்த பொன் அறுநூற்று அறுபத்தாறு தாலந்து எடையுள்ளதாக இருந்தது.
Бе же вес злата приносимаго к Соломону на всяко лето шесть сот шестьдесят шесть талант злата,
14 ௧௪ அரபுதேசங்களின் அனைத்து ராஜாக்களும், ஆளுநர்களும் சாலொமோனுக்குப் பொன்னையும் வெள்ளியையும் கொண்டுவருவார்கள்.
кроме мужей подданных и купцов, иже приношаху, и всех царей Аравских и властелей земли, иже вси приношаху злато и сребро царю Соломону.
15 ௧௫ ராஜாவாகிய சாலொமோன் இருநூறு கேடகங்களை அடித்த பொன்தகட்டால் செய்வித்தான்; ஒவ்வொரு கேடகத்திற்கு அறுநூறு சேக்கல் எடை பொன் தகட்டைச் செலவழித்தான்.
Сотвори убо царь Соломон двести щитов златых тягненых, шесть сот златник чистых бяху во единем щите:
16 ௧௬ அடித்த பொன்தகட்டால் முந்நூறு கேடகங்களையும் உண்டாக்கினான்; ஒவ்வொரு கேடகத்திற்கு முந்நூறு சேக்கல் எடை பொன்னைச் செலவழித்தான்; அவைகளை ராஜா லீபனோன் வனம் என்னும் மாளிகையிலே வைத்தான்.
и триста щитов златых тягненых, по триста златник бяше во единем коемждо щите, и положи я царь в дому древа Ливанова.
17 ௧௭ ராஜா தந்தத்தால் ஒரு பெரிய சிங்காசனத்தையும் செய்வித்து, அதைப் பசும்பொன் தகட்டால் மூடினான்.
Сотвори же царь престол от слоновых зубов велик, и позлати его златом чистым,
18 ௧௮ அந்தச் சிங்காசனத்திற்குப் பொன்னினால் செய்யப்பட்ட ஆறு படிகளும், ஒரு பாதப்படியும், உட்காரும் இடத்திற்கு இருபுறத்திலும் கை சாய்மானங்களும் இருந்தன; இரண்டு சிங்கங்கள் கை சாய்மானங்கள் அருகே நின்றன.
и шесть степений у престола позлащени златом, и мышчицы две туду и сюду над престолом седалища, и два льва стояща близ мышчцей,
19 ௧௯ அந்த ஆறு படிகளின்மேலும், இரண்டு பக்கத்திலும் பன்னிரண்டு சிங்கங்கள் நின்றன; எந்த ராஜ்ஜியத்திலும் இப்படிச் செய்யப்படவில்லை.
и дванадесять львов стоящих тамо на шести степенех от обоих стран: и не бысть таков престол во всяцем царстве.
20 ௨0 ராஜாவாகிய சாலொமோனுக்கு இருந்த பானபாத்திரங்களெல்லாம் பொன்னும், லீபனோன் வனம் என்னும் மாளிகையின் பணிமுட்டுகளெல்லாம் பசும்பொன்னுமாயிருந்தது; ஒன்றும் வெள்ளியினால் செய்யப்படவில்லை; சாலொமோனின் நாட்களில் வெள்ளி ஒரு பொருட்டாகக் கருதப்படவில்லை.
Вси же сосуди царя Соломона бяху златы, и вси сосуди дому дубравы Ливанския златом окружены, сребро бо во днех Соломоних ни во что вменяшеся:
21 ௨௧ ராஜாவின் கப்பல்கள் ஈராமின் வேலைக்காரர்களுடன் தர்ஷீசுக்குப் போய்வரும்; தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை பொன்னையும், வெள்ளியையும், யானைத் தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டுவரும்.
зане корабль царев хождаше в Фарсис с рабы Хирамовыми, единицею в лета три прихождаше корабль от Фарсиса ко царю, полн злата и сребра и зубов слоновых и обезян.
22 ௨௨ பூமியின் அனைத்து ராஜாக்களையும்விட சாலொமோன் ராஜா ஐசுவரியத்திலும் ஞானத்திலும் சிறந்தவனாயிருந்தான்.
И возвеличися Соломон паче всех царей земных богатством и мудростию.
23 ௨௩ சாலொமோனின் இருதயத்திலே தேவன் அருளிய ஞானத்தைக் கேட்பதற்கு பூமியின் ராஜாக்கள் எல்லோரும் அவனுடைய முகதரிசனத்தைத் தேடினார்கள்.
Вси же царие земстии желаху видети лице Соломоне и слышати премудрость его, юже даде Бог в сердце его:
24 ௨௪ வருடந்தோறும் அவரவர் தங்கள் காணிக்கையாகிய வெள்ளிப்பாத்திரங்களையும், பொற்பாத்திரங்களையும், ஆடைகளையும், ஆயுதங்களையும், கந்தவர்க்கங்களையும், குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும் கொண்டுவருவார்கள்.
и приношаху ему кийждо дары своя, сосуды сребряны и златы, и одеяния и стакту, и сладости, кони и мски, на всякое лето.
25 ௨௫ சாலொமோனுக்கு நான்காயிரம் குதிரைலாயங்களும் இரதங்களும் இருந்தன, பனிரெண்டாயிரம் குதிரை வீரர்களும் இருந்தார்கள்; அவைகளை இரதங்கள் வைக்கும் பட்டணங்களிலும், அவர்களை எருசலேமில் தன்னிடத்திலும் ராஜா வைத்திருந்தான்.
И бяху царю Соломону четыредесять тысящ кобылиц к колесницы и дванадесять тысящ конник, и постави их во градех колесничных и со царем во Иерусалиме.
26 ௨௬ நதி துவங்கிப் பெலிஸ்தரின் தேசம்வரை எகிப்தின் எல்லைவரைக்கும் இருக்கிற அனைத்து ராஜாக்களையும் அவன் ஆண்டான்.
И быть вождь всех царей от реки (Евфрата) даже до земли иноплеменник и даже до предел Египетских.
27 ௨௭ எருசலேமிலே ராஜா வெள்ளியைக் கற்கள்போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்குகளில் இருக்கும் காட்டத்தி மரங்கள்போலவும் அதிகமாக்கினான்.
И даде царь злато и сребро во Иерусалиме яко камение, и кедры яко черничие, еже (раждается) в полях множество.
28 ௨௮ எகிப்திலும் மற்ற தேசங்களிலுமிருந்து சாலொமோனுக்குக் குதிரைகள் கொண்டுவரப்பட்டது.
И приводяху кони Соломону от Египта и от всея земли.
29 ௨௯ சாலொமோனுடைய ஆரம்பம்முதல் கடைசிவரையுள்ள மற்ற செயல்கள் தீர்க்கதரிசியாகிய நாத்தானின் புத்தகத்திலும், சீலோனியனாகிய அகியா எழுதின தீர்க்கதரிசனத்திலும், நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமைக்குறித்து தரிசனம் காண்கிறவனாகிய இத்தோ எழுதின தரிசனங்களிலும் அல்லவோ எழுதப்பட்டிருக்கிறது.
И прочая словеса Соломоня первая и последняя, се, сия писана суть в словесех Нафана пророка и в словесех Ахии Силониты и в видениих Иоиля видящаго, противу Иеровоама сына Наватова.
30 ௩0 சாலொமோன் எருசலேமிலே இஸ்ரவேல் முழுவதையும் நாற்பது வருடங்கள் ஆட்சிசெய்தான்.
И царствова Соломон во Иерусалиме над всем Израилем четыредесять лет.
31 ௩௧ பின்பு சாலொமோன் இறந்தான்; அவனை அவன் தகப்பனாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம்செய்தார்கள்; அவனுடைய இடத்தில் அவன் மகனாகிய ரெகொபெயாம் ராஜாவானான்.
И успе Соломон со отцы своими, и погребоша его во граде Давида отца его. И воцарися Ровоам сын его вместо его.

< 2 நாளாகமம் 9 >