< 1 சாமுவேல் 24 >

1 சவுல் பெலிஸ்தர்களைப் பின்தொடர்வதைவிட்டுத் திரும்பி வந்தபோது, இதோ, தாவீது என்கேதியின் வனாந்திரத்தில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது.
И бысть егда возвратися Саул вспять от иноплеменник, и возвестиша ему, глаголюще: се, Давид в пустыни Енгадстей.
2 அப்பொழுது சவுல்: இஸ்ரவேல் அனைத்திலும் தெரிந்துகொள்ளப்பட்ட 3,000 பேரைக் கூட்டிக்கொண்டு, தாவீதையும் அவனுடைய மனிதர்களையும் வரையாடுகளுள்ள கன்மலைகளின்மேல் தேடப்போனான்.
И взя Саул с собою три тысящы мужей избранных от всего Израиля и иде искати Давида и мужей его прямо лицу саддеем:
3 வழியோரத்திலிருக்கிற ஆட்டுத்தொழுவங்களிடத்தில் அவன் வந்தபோது, அங்கே ஒரு குகை இருந்தது; அதிலே சவுல் காலைக்கடன் கழிக்கப்போனான்; தாவீதும் அவனுடைய மனிதர்களும் அந்தக் குகையின் பக்கங்களில் உட்கார்ந்திருந்தார்கள்.
и прииде до стад пасомых на пути, и бе тамо вертеп: и Саул вниде испразднитися, Давид же и мужие его во внутренних вертепа седяху.
4 அப்பொழுது தாவீதின் மனிதர்கள் அவனை நோக்கி: இதோ, நான் உன்னுடைய எதிரியை உன்னுடைய கையில் ஒப்புக்கொடுப்பேன்; உன்னுடைய பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்வாயாக என்று யெகோவா உன்னோடு சொன்ன நாள் இதுவே என்றார்கள்; தாவீது எழுந்துபோய், சவுலுடைய சால்வையின் தொங்கலை மெதுவாக அறுத்துக்கொண்டான்.
И реша мужие Давидовы к нему: се, день сей, о немже рече Господь тебе предати врага твоего в руце твои, и сотвориши ему якоже угодно пред очима твоима. И воста Давид, и отреза воскрилие одежды Саули отай.
5 தாவீது சவுலின் சால்வைத் தொங்கலை அறுத்துக்கொண்டதினால் அவனுடைய மனது அடித்துக்கொண்டிருந்தது.
И бысть по сих, и вострепета Давиду сердце его, яко отреза воскрилие одежды Саули:
6 அவன் தன்னுடைய மனிதர்களைப் பார்த்து: யெகோவா அபிஷேகம்செய்த என்னுடைய ஆண்டவன்மேல் என்னுடைய கையைப் போடும்படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடி, யெகோவா என்னைக் காப்பாராக; அவர் யெகோவாவால் அபிஷேகம்செய்யப்பட்டவர் என்று சொல்லி,
и рече Давид к мужем своим: никакоже ми от Господа, аще сотворю глагол сей господину моему христу Господню, еже нанести руку мою нань, яко христос Господень есть сей.
7 தன்னுடைய மனிதர்களை சவுலின்மேல் எழும்ப விடாமல், இவ்வார்த்தைகளினால் அவர்களைத் தடை செய்தான்; சவுல் எழுந்து, குகையைவிட்டு, வழியே நடந்து போனான்.
И увеща Давид мужы своя словесы и не даде им воставшым убити Саула. И воста Саул, и сниде на путь.
8 அப்பொழுது தாவீதும் எழுந்து, கெபியிலிருந்து புறப்பட்டு, சவுலுக்குப் பின்னாகப் போய்: ராஜாவாகிய என் ஆண்டவனே என்று கூப்பிட்டான்; சவுல் திரும்பிப்பார்த்தபோது, தாவீது தரை வரை முகங்குனிந்து வணங்கி,
И изыде Давид вслед его из вертепа: и возопи Давид вслед Саула, глаголя: господине царю. И озреся Саул вслед себе, и преклонися Давид лицем своим до земли, и поклонися ему.
9 சவுலை நோக்கி: தாவீது உமக்கு தீங்கு செய்யப்பார்க்கிறான் என்று சொல்லுகிற மனிதர்களுடைய வார்த்தைகளை ஏன் கேட்கிறீர்?
И рече Давид к Саулу: почто слушаеши словес людий глаголющих: се, Давид ищет души твоея?
10 ௧0 இதோ, யெகோவா இன்று குகையில் உம்மை என்னுடைய கையில் ஒப்புக்கொடுத்தார் என்பதை இன்றையதினம் உம்முடைய கண்கள் கண்டதே, உம்மைக் கொன்றுபோடவேண்டும் என்று சிலர் சொன்னார்கள்; ஆனாலும் என்னுடைய கை உம்மைத் தப்பவிட்டது; என்னுடைய ஆண்டவன்மேல் என்னுடைய கையைப் போடேன்; அவர் யெகோவாவால் அபிஷேகம்செய்யப்பட்டவராமே என்றேன்.
Се, днесь видеста очи твои, яко предаде тя Господь днесь в руце мои в вертепе, и не восхотех убити тебе, и пощадех тя, и рех: не нанесу руки моея на господа моего, яко помазанник Господень сей есть:
11 ௧௧ என்னுடைய தகப்பனே பாரும்; என்னுடைய கையிலிருக்கிற உம்முடைய சால்வையின் தொங்கலைப் பாரும்; உம்மைக் கொன்று போடாமல், உம்முடைய சால்வையின் தொங்கலை அறுத்துக்கொண்டேன்; என்னுடைய கையிலே தீங்கும் துரோகமும் இல்லை என்றும், உமக்கு நான் குற்றம் செய்யவில்லை என்றும் அறிந்துகொள்ளும்; நீரோ என்னுடைய உயிரை வாங்க, அதை வேட்டையாடுகிறீர்.
и се, воскрилие одежды твоея в руце моей, аз отях воскрилие одежды твоея, и не убих тебе: и уразумей, и виждь днесь, яко несть злобы в руце моей, ниже нечестия и презорства, ниже согреших к тебе, а ты ищеши души моея изяти ю:
12 ௧௨ யெகோவா எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயம் விசாரித்து, யெகோவா தாமே என்னுடைய காரியத்தில் உமக்கு நீதியைச் சரிக்கட்டுவாராக; என்னுடைய கை உமக்கு விரோதமாக இருக்காது.
да судит Господь между мною и тобою, и да защитит мя Господь от тебе: рука же моя не будет на тя,
13 ௧௩ முதியோர் வாக்கின்படியே, தீயோரிடமிருந்து தீமை பிறக்கும்; எனவே, என்னுடைய கை உமக்கு விரோதமாக இருக்காது.
якоже глаголется притча древняя: от беззаконник изыдет преступление: рука же моя не будет на тя:
14 ௧௪ இஸ்ரவேலின் ராஜா யாரைத் தேடப் புறப்பட்டார்? ஒரு செத்த நாயையா, ஒரு தெள்ளுப்பூச்சியையா, நீர் யாரைப் பின்தொடருகிறீர்?
и ныне ты, царю Израилев, вслед кого исходиши? Кого ты гониши? Вслед ли пса умерша и вслед блохи единыя?
15 ௧௫ யெகோவா நியாயாதிபதியாயிருந்து, எனக்கும் உமக்கும் நியாயந்தீர்த்து, எனக்காக வாதாடி, நான் உம்முடைய கைக்குத் தப்ப என்னை விடுவிப்பாராக என்றான்.
Да будет Господь судия и отмститель между мною и тобою, да видит Господь и судит суд мой, и осудит мя от руки твоея.
16 ௧௬ தாவீது இந்த வார்த்தைகளைச் சவுலோடே சொல்லி முடிந்தபின்பு, சவுல்: என்னுடைய மகனான தாவீதே, இது உன்னுடைய சத்தமல்லவா என்று சொல்லி, சத்தமிட்டு அழுது,
И бысть, егда сконча Давид глаголы сия, глаголя к Саулу, и рече Саул: твой ли глас сей, чадо Давиде? И воздвиже Саул глас свой и восплакася.
17 ௧௭ தாவீதைப் பார்த்து: நீ என்னைவிட நீதிமான்; நீ எனக்கு நன்மை செய்தாய்; நானோ உனக்கு தீமை செய்தேன்.
И рече Саул к Давиду: праведен еси ты паче мене, яко ты воздал ми еси благая, аз же тебе воздах злая:
18 ௧௮ நீ எனக்கு நன்மை செய்ததை இன்று விளங்கச்செய்தாய்; யெகோவா என்னை உன்னுடைய கையில் ஒப்புக்கொடுத்திருந்தும், நீ என்னைக் கொன்று போடவில்லை.
и ты возвестил ми еси днесь, яже сотворил ми благая, яко заключи мя Господь в руки твоя днесь, и не убил мя еси:
19 ௧௯ ஒருவன் தன்னுடைய எதிரியைக் கண்டுபிடித்தால், அவனைச் சுகமாக போகவிடுவானோ? இன்று நீ எனக்குச் செய்த நன்மைக்காகக் யெகோவா உனக்கு நன்மை செய்வாராக.
и якоже аще кто обрел бы врага своего в печали, и отпустил бы его в путь благ, и Господь воздаст ему благая, якоже ты сотворил еси днесь:
20 ௨0 நீ நிச்சயமாக ராஜாவாக இருப்பாய் என்றும், இஸ்ரவேலின் ராஜ்ஜியம் உன்னுடைய கையில் நிலைக்கும் என்றும் அறிவேன்.
и ныне се, аз вем, яко царюя царствовати имаши, и стати имать в руце твоей царство Израилево:
21 ௨௧ இப்போதும் நீ எனக்குப் பின்னிருக்கும் என்னுடைய சந்ததியை வேரறுப்பதில்லை என்றும், என்னுடைய தகப்பன் வீட்டாரில் என்னுடைய பெயரை அழித்துப்போடுவதில்லை என்றும் யெகோவாமேல் எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்.
и ныне кленися ми Господем, яко не искорениши семене моего по мне и не погубиши имене моего от дому отца моего.
22 ௨௨ அப்பொழுது தாவீது சவுலுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான்; பின்பு, சவுல் தன்னுடைய வீட்டுக்குப் புறப்பட்டுப்போனான்; தாவீதும் அவனுடைய மனிதர்களும் பாதுகாப்பான இடத்திற்கு ஏறிப்போனார்கள்.
И клятся Давид Саулу. И отиде Саул на место свое, Давид же и мужие его взыдоша в мессеру тесную.

< 1 சாமுவேல் 24 >