< 1 நாளாகமம் 6 >

1 லேவியின் மகன்கள் கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.
בני לוי גרשון קהת ומררי
2 கோகாத்தின் மகன்கள் அம்ராம், இத்சேயார், எப்ரோன் ஊசியேல் என்பவர்கள்.
ובני קהת--עמרם יצהר וחברון ועזיאל
3 அம்ராமின் பிள்ளைகள், ஆரோன், மோசே, மிரியாம் என்பவர்கள்; ஆரோனின் மகன்கள் நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்கள்.
ובני עמרם אהרן ומשה ומרים ובני אהרן--נדב ואביהוא אלעזר ואיתמר
4 எலெயாசார் பினெகாசைப் பெற்றான்; பினெகாஸ் அபிசுவாவைப் பெற்றான்.
אלעזר הוליד את פינחס פינחס הליד את אבישוע
5 அபிசுவா புக்கியைப் பெற்றான்; புக்கி ஊசியைப் பெற்றான்.
ואבישוע הוליד את בקי ובקי הוליד את עזי
6 ஊசி செராகியாவைப் பெற்றான்; செராகியா மெராயோதைப் பெற்றான்.
ועזי הוליד את זרחיה וזרחיה הוליד את מריות
7 மெராயோத் அமரியாவைப் பெற்றான்; அமரியா அகிதூபைப் பெற்றான்.
מריות הוליד את אמריה ואמריה הוליד את אחיטוב
8 அகிதூப் சாதோக்கைப் பெற்றான்; சாதோக் அகிமாசைப் பெற்றான்.
ואחיטוב הוליד את צדוק וצדוק הוליד את אחימעץ
9 அகிமாஸ் அசரியாவைப் பெற்றான்; அசரியா யோகனானைப் பெற்றான்.
ואחימעץ הוליד את עזריה ועזריה הוליד את יוחנן
10 ௧0 யோகனான் அசரியாவைப் பெற்றான்; சாலொமோன் எருசலேமில் கட்டின ஆலயத்திலே ஆசாரிய பணியைச் செய்தவன் இவன்தான்.
ויוחנן הוליד את עזריה הוא אשר כהן בבית אשר בנה שלמה בירושלם
11 ௧௧ அசரியா அமரியாவைப் பெற்றான்; அமரியா அகிதூபைப் பெற்றான்.
ויולד עזריה את אמריה ואמריה הוליד את אחיטוב
12 ௧௨ அகிதூப் சாதோக்கைப் பெற்றான்; சாதோக் சல்லூமைப் பெற்றான்.
ואחיטוב הוליד את צדוק וצדוק הוליד את שלום
13 ௧௩ சல்லூம் இல்க்கியாவைப் பெற்றான்; இல்க்கியா அசரியாவைப் பெற்றான்.
ושלום הוליד את חלקיה וחלקיה הוליד את עזריה
14 ௧௪ அசரியா செராயாவைப் பெற்றான்; செராயா யோசதாக்கைப் பெற்றான்.
ועזריה הוליד את שריה ושריה הוליד את יהוצדק
15 ௧௫ யெகோவா நேபுகாத்நேச்சாரைக் கொண்டு யூதா மக்களையும் எருசலேமியர்களையும் சிறைபிடித்துக் கொண்டுபோகச்செய்தபோது யோசதாக்கும் சிறைப்பட்டுப்போனான்.
ויהוצדק הלך--בהגלות יהוה את יהודה וירושלם ביד נבכדנאצר
16 ௧௬ லேவியின் மகன்கள் கெர்சோம், கோகாத், மெராரி என்பவர்களே.
בני לוי גרשם קהת ומררי
17 ௧௭ கெர்சோமுடைய மகன்களின் பெயர்கள், லிப்னி, சீமேயி என்பவைகள்.
ואלה שמות בני גרשום לבני ושמעי
18 ௧௮ கோகாத்தின் மகன்கள் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்.
ובני קהת--עמרם ויצהר וחברון ועזיאל
19 ௧௯ மெராரியின் மகன்கள் மகேலி, மூசி என்பவர்கள். லேவியர்களுக்கு அவர்களுடைய பிதாக்களின் வழியாக உண்டான வம்சங்கள்:
בני מררי מחלי ומשי ואלה משפחות הלוי לאבתיהם
20 ௨0 கெர்சோமின் மகன் லிப்னி; இவனுடைய மகன் யாகாத்; இவனுடைய மகன் சிம்மா.
לגרשום--לבני בנו יחת בנו זמה בנו
21 ௨௧ இவனுடைய மகன் யோவா; இவனுடைய மகன் இத்தோ; இவனுடைய மகன் சேரா; இவனுடைய மகன் யாத்திராயி.
יואח בנו עדו בנו זרח בנו יאתרי בנו
22 ௨௨ கோகாத்தின் மகன்களில் ஒருவன் அம்மினதாப், இவனுடைய மகன் கோராகு; இவனுடைய மகன் ஆசீர்.
בני קהת--עמינדב בנו קרח בנו אסיר בנו
23 ௨௩ இவனுடைய மகன் எல்க்கானா; இவனுடைய மகன் அபியாசாப்; இவனுடைய மகன் ஆசீர்.
אלקנה בנו ואביסף בנו ואסיר בנו
24 ௨௪ இவனுடைய மகன் எல்க்கானா; இவனுடைய மகன் ஊரியேல்; இவனுடைய மகன் ஊசியா; இவனுடைய மகன் சவுல்.
תחת בנו אוריאל בנו עזיה בנו ושאול בנו
25 ௨௫ எல்க்கானாவின் மகன்கள் அமாசாயி, ஆகிமோத் என்பவர்கள்.
ובני אלקנה--עמשי ואחימות
26 ௨௬ எல்க்கானாவின் மகன்களில் ஒருவன் சோபாய்; இவனுடைய மகன் நாகாத்.
אלקנה--בנו (בני) אלקנה צופי בנו ונחת בנו
27 ௨௭ இவனுடைய மகன் எலியாப்; இவனுடைய மகன் எரோகாம்; இவனுடைய மகன் எல்க்கானா.
אליאב בנו ירחם בנו אלקנה בנו
28 ௨௮ சாமுவேலின் மகன்கள் அவனுக்கு முதலில் பிறந்த யோவேல், பிறகு அபியா என்பவர்கள்.
ובני שמואל הבכר ושני ואביה
29 ௨௯ மெராரியின் மகன்களில் ஒருவன் மகேலி; இவனுடைய மகன் லிப்னி; இவனுடைய மகன் சிமேயி; இவனுடைய மகன் ஊசா.
בני מררי מחלי לבני בנו שמעי בנו עזה בנו
30 ௩0 இவனுடைய மகன் சிமெயா; இவனுடைய மகன் அகியா; இவனுடைய மகன் அசாயா.
שמעא בנו חגיה בנו עשיה בנו
31 ௩௧ யெகோவாவுடைய பெட்டி தங்கினபோது, தாவீது யெகோவாவுடைய ஆலயத்தில் சங்கீத சேவையை நடத்துவற்கு ஏற்படுத்தியவர்களும்,
ואלה אשר העמיד דויד על ידי שיר--בית יהוה ממנוח הארון
32 ௩௨ சாலொமோன் எருசலேமிலே யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்டி முடியும்வரை ஆசரிப்புக்கூடாரம் இருந்த இடத்திற்கு முன்பாக சங்கீத சேவையுடன் தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டபடியே பணிவிடை செய்துவந்தவர்களுமாகிய மனிதர்களும் அவர்களுடைய மகன்களாவர்
ויהיו משרתים לפני משכן אהל מועד בשיר עד בנות שלמה את בית יהוה בירושלם ויעמדו כמשפטם על עבודתם
33 ௩௩ கோகாத்தியர்களின் மகன்களில் ஏமான் என்னும் பாடகன்; இவன் யோவேலின் மகன்; இவன் சாமுவேலின் மகன்.
ואלה העמדים ובניהם מבני הקהתי--הימן המשורר בן יואל בן שמואל
34 ௩௪ இவன் எல்க்கானாவின் மகன்; இவன் யெரொகாமின் மகன்; இவன் ஏலியேலின் மகன்; இவன் தோவாகின் மகன்.
בן אלקנה בן ירחם בן אליאל בן תוח
35 ௩௫ இவன் சூப்பின் மகன்; இவன் எல்க்கானாவின் மகன்; இவன் மாகாத்தின் மகன்; இவன் அமாசாயின் மகன்.
בן ציף (צוף) בן אלקנה בן מחת בן עמשי
36 ௩௬ இவன் எல்க்கானாவின் மகன்; இவன் யோவேலின் மகன்; இவன் அசரியாவின் மகன்; இவன் செப்பனியாவின் மகன்.
בן אלקנה בן יואל בן עזריה בן צפניה
37 ௩௭ இவன் தாகாதின் மகன்; இவன் ஆசீரின் மகன்; இவன் எபியாசாப்பின் மகன்; இவன் கோராகின் மகன்.
בן תחת בן אסיר בן אביסף בן קרח
38 ௩௮ இவன் இத்சேயாரின் மகன்; இவன் கோகாத்தின் மகன்; இவன் இஸ்ரவேலின் மகனாகிய லேவியின் மகன்.
בן יצהר בן קהת בן לוי בן ישראל
39 ௩௯ இவன் சகோதரனாகிய ஆசாப் இவன் வலது பக்கத்திலே நிற்பான்; ஆசாப் பெரகியாவின் மகன்; இவன் சிமேயாவின் மகன்.
ואחיו אסף העמד על ימינו--אסף בן ברכיהו בן שמעא
40 ௪0 இவன் மிகாவேலின் மகன்; இவன் பாசெயாவின் மகன்; இவன் மல்கியாவின் மகன்.
בן מיכאל בן בעשיה בן מלכיה
41 ௪௧ இவன் எத்னியின் மகன்; இவன் சேராவின் மகன்; இவன் அதாயாவின் மகன்.
בן אתני בן זרח בן עדיה
42 ௪௨ இவன் ஏத்தானின் மகன்; இவன் சிம்மாவின் மகன்; இவன் சீமேயின் மகன்.
בן איתן בן זמה בן שמעי
43 ௪௩ இவன் யாகாதின் மகன்; இவன் கெர்சோமின் மகன்; இவன் லேவியின் மகன்.
בן יחת בן גרשם בן לוי
44 ௪௪ மெராரியின் மகன்களாகிய இவர்களுடைய சகோதரர்கள் இடதுபக்கத்திலே நிற்பார்கள்; அவர்களில் ஏத்தான் என்பவன் கிஷியின் மகன்; இவன் அப்தியின் மகன்; இவன் மல்லூகின் மகன்.
ובני מררי אחיהם על השמאול--איתן בן קישי בן עבדי בן מלוך
45 ௪௫ இவன் அஸபியாவின் மகன்; இவன் அமத்சியாவின் மகன்; இவன் இல்க்கியாவின் மகன்.
בן חשביה בן אמציה בן חלקיה
46 ௪௬ இவன் அம்சியின் மகன்; இவன் பானியின் மகன்; இவன் சாமேரின் மகன்.
בן אמצי בן בני בן שמר
47 ௪௭ இவன் மகேலியின் மகன்; இவன் மூசியின் மகன்; இவன் மெராரியின் மகன்; இவன் லேவியின் மகன்.
בן מחלי בן מושי בן מררי בן לוי
48 ௪௮ அவர்களுடைய சகோதரர்களாகிய மற்ற லேவியர்கள் தேவனுடைய ஆலயமாகிய ஆசரிப்புக்கூடாரத்தின் பணிகளைச் செய்ய நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
ואחיהם הלוים נתונים--לכל עבודת משכן בית האלהים
49 ௪௯ ஆரோனும் அவனுடைய மகன்களும் சர்வாங்க தகனபலிபீடத்தின்மேல் பலியிட்டு தூபங்காட்டும் பீடத்தின்மேல் தூபங்காட்டி, மகா பரிசுத்த இடத்தின் எல்லா வேலைக்கும், தேவனுடைய தாசனாகிய மோசே கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேலுக்காகப் பாவநிவிர்த்தியுண்டாக்கவும் வைக்கப்பட்டிருந்தார்கள்.
ואהרן ובניו מקטירים על מזבח העולה ועל מזבח הקטרת לכל מלאכת קדש הקדשים ולכפר על ישראל ככל אשר צוה משה עבד האלהים
50 ௫0 ஆரோனின் மகன்களில் எலெயாசார் என்பவனுடைய மகன் பினேகாஸ்; இவனுடைய மகன் அபிசுவா.
ואלה בני אהרן--אלעזר בנו פינחס בנו אבישוע בנו
51 ௫௧ இவனுடைய மகன் புக்கி; இவனுடைய மகன் ஊசி; இவனுடைய மகன் செராகியா.
בקי בנו עזי בנו זרחיה בנו
52 ௫௨ இவனுடைய மகன் மெராயோத்; இவனுடைய மகன் அமரியா; இவனுடைய மகன் அகிதூப்.
מריות בנו אמריה בנו אחיטוב בנו
53 ௫௩ இவனுடைய மகன் சாதோக்; இவனுடைய மகன் அகிமாஸ்.
צדוק בנו אחימעץ בנו
54 ௫௪ அவர்களுடைய குடியிருப்புக்களின்படியே அவர்கள் எல்லைக்குள்ளான அவர்கள் தங்கும் இடங்களாவன: கோகாத்தியர்களின் வம்சமான ஆரோனின் சந்ததிக்கு விழுந்த சீட்டின்படியே,
ואלה מושבותם לטירותם בגבולם--לבני אהרן למשפחת הקהתי כי להם היה הגורל
55 ௫௫ யூதா தேசத்திலிருக்கிற எப்ரோனையும் அதைச் சுற்றியிருக்கிற வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்.
ויתנו להם את חברון בארץ יהודה ואת מגרשיה סביבתיה
56 ௫௬ அந்தப் பட்டணத்தின் வயல்களையும் அதின் கிராமங்களையும் எப்புன்னேயின் மகனாகிய காலேபுக்குக் கொடுத்தார்கள்.
ואת שדה העיר ואת חצריה--נתנו לכלב בן יפנה
57 ௫௭ இப்படியே ஆரோனின் சந்ததிக்கு எப்ரோன் என்னும் அடைக்கலப்பட்டணங்களில் ஒன்றையும் லிப்னாவையும் அதின் வெளிநிலங்களையும், யாத்தீரையும் எஸ்தெமோவையும் அவற்றின் வெளிநிலங்களையும்,
ולבני אהרן נתנו את ערי המקלט--את חברון ואת לבנה ואת מגרשיה ואת יתר ואת אשתמע ואת מגרשיה
58 ௫௮ ஈலேனையும் அதின் வெளிநிலங்களையும், தெபீரையும் அதின் வெளிநிலங்களையும்,
ואת חילז ואת מגרשיה את דביר ואת מגרשיה
59 ௫௯ ஆசானையும் அதின் வெளிநிலங்களையும், பெத்ஷிமேசையும் அதின் வெளிநிலங்களையும்,
ואת עשן ואת מגרשיה ואת בית שמש ואת מגרשיה
60 ௬0 பென்யமீன் கோத்திரத்திலே கேபாவையும் அதின் வெளிநிலங்களையும், அலெமேத்தையும் அதின் வெளிநிலங்களையும், ஆனதோத்தையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இவர்கள் வம்சங்களுக்குக் கொடுத்த இவர்கள் பட்டணங்களெல்லாம் பதின்மூன்று.
וממטה בנימן את גבע ואת מגרשיה ואת עלמת ואת מגרשיה ואת ענתות ואת מגרשיה כל עריהם שלש עשרה עיר במשפחותיהם
61 ௬௧ கோகாத்தின் மற்ற வம்சத்தினருக்கு வேறொரு கோத்திர வம்சத்திலும், பாதிக் கோத்திரமாகிய மனாசேயின் பாதியிலும் விழுந்த சீட்டின்படியே பத்துப் பட்டணங்கள் இருந்தது.
ולבני קהת הנותרים ממשפחת המטה ממחצית מטה חצי מנשה בגורל--ערים עשר
62 ௬௨ கெர்சோமின் சந்ததிக்கு அவர்கள் வம்சங்களின்படியே, இசக்கார் கோத்திரத்திலும் ஆசேர் கோத்திரத்திலும், நப்தலி கோத்திரத்திலும், பாசானிலிருக்கிற மனாசே கோத்திரத்திலும் பதின்மூன்று பட்டணங்கள் இருந்தது.
ולבני גרשום למשפחותם ממטה יששכר וממטה אשר וממטה נפתלי וממטה מנשה בבשן--ערים שלש עשרה
63 ௬௩ மெராரியின் சந்ததிக்கு அவர்கள் வம்சங்களின்படியே, ரூபன் கோத்திரத்திலும், காத் கோத்திரத்திலும், செபுலோன் கோத்திரத்திலும் விழுந்த சீட்டின்படி பன்னிரெண்டு பட்டணங்கள் இருந்தது.
לבני מררי למשפחותם ממטה ראובן וממטה גד וממטה זבלון בגורל--ערים שתים עשרה
64 ௬௪ அப்படியே இஸ்ரவேல் மக்கள் லேவியர்களுக்குக் கொடுத்த பட்டணங்களும் அவைகளின் வெளிநிலங்களும் என்னவென்றால்,
ויתנו בני ישראל ללוים את הערים ואת מגרשיהם
65 ௬௫ சீட்டுப்போட்டு, சிலருக்கு யூதா கோத்திரத்திலும், சிமியோன் கோத்திரத்திலும், பென்யமீன் கோத்திரத்திலும், பெயர் வரிசையில் சொல்லப்பட்ட அந்தப் பட்டணங்களைக் கொடுத்தார்கள்.
ויתנו בגורל ממטה בני יהודה וממטה בני שמעון וממטה בני בנימן--את הערים האלה אשר יקראו אתהם בשמות
66 ௬௬ கோகாத் சந்ததியில் மற்ற வம்சங்களுக்கு அவர்கள் எல்லையான பட்டணங்கள் அவர்களுக்கு எப்பிராயீம் கோத்திரத்திலே இருந்தது.
וממשפחות בני קהת--ויהי ערי גבולם ממטה אפרים
67 ௬௭ எவையெனில், அடைக்கலப்பட்டணங்களில் அவர்களுக்கு எப்பிராயீம் மலைத்தேசத்திலிருக்கிற சீகேமையும் அதின் வெளிநிலங்களையும், கேசேரையும் அதின் வெளிநிலங்களையும்,
ויתנו להם את ערי המקלט את שכם ואת מגרשיה--בהר אפרים ואת גזר ואת מגרשיה
68 ௬௮ யோக்மேயாமையும் அதின் வெளிநிலங்களையும், பெத்தொரோனையும் அதின் வெளிநிலங்களையும்,
ואת יקמעם ואת מגרשיה ואת בית חורון ואת מגרשיה
69 ௬௯ ஆயலோனையும் அதின் வெளிநிலங்களையும், காத்ரிம்மோனையும் அதின் வெளிநிலங்களையும்,
ואת אילון ואת מגרשיה ואת גת רמון ואת מגרשיה
70 ௭0 மனாசேயின் பாதிக்கோத்திரத்திலே ஆனேரையும் அதின் வெளிநிலங்களையும், பீலியாமையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இவைகள் கோகாத் சந்ததியில் மற்ற வம்சங்களுக்கு இருந்தது.
וממחצית מטה מנשה את ענר ואת מגרשיה ואת בלעם ואת מגרשיה--למשפחת לבני קהת הנותרים
71 ௭௧ கெர்சோம் சந்ததிகளுக்கு மனாசேயின் பாதிக்கோத்திர வம்சத்திலே பாசானில் இருக்கிற கோலானும் அதின் வெளிநிலங்களும், அஸ்தரோத்தும் அதின் வெளிநிலங்களும்,
לבני גרשום--ממשפחת חצי מטה מנשה את גולן בבשן ואת מגרשיה ואת עשתרות ואת מגרשיה
72 ௭௨ இசக்கார் கோத்திரத்திலே கேதேசும் அதின் வெளிநிலங்களும், தாபராத்தும் அதின் வெளிநிலங்களும்,
וממטה יששכר את קדש ואת מגרשיה את דברת ואת מגרשיה
73 ௭௩ ராமோத்தும் அதின் வெளிநிலங்களும், ஆனேமும் அதின் வெளிநிலங்களும்,
ואת ראמות ואת מגרשיה ואת ענם ואת מגרשיה
74 ௭௪ ஆசேர் கோத்திரத்திலே மாஷாலும் அதின் வெளிநிலங்களும், அப்தோனும் அதின் வெளிநிலங்களும்,
וממטה אשר את משל ואת מגרשיה ואת עבדון ואת מגרשיה
75 ௭௫ உக்கோக்கும் அதின் வெளிநிலங்களும், ரேகோபும் அதின் வெளிநிலங்களும்,
ואת חוקק ואת מגרשיה ואת רחב ואת מגרשיה
76 ௭௬ நப்தலி கோத்திரத்திலே கலிலேயாவில் இருக்கிற கேதேசும் அதின் வெளிநிலங்களும், அம்மோனும் அதின் வெளிநிலங்களும், கீரியாத்தாயிமும் அதின் வெளிநிலங்களும் இருந்தது.
וממטה נפתלי את קדש בגליל ואת מגרשיה ואת חמון ואת מגרשיה ואת קריתים ואת מגרשיה
77 ௭௭ மெராரியின் மற்ற சந்ததிகளுக்கு செபுலோன் கோத்திரத்திலே ரிம்மோனும் அதின் வெளிநிலங்களும், தாபோரும் அதின் வெளிநிலங்களும்,
לבני מררי הנותרים--ממטה זבלון את רמונו ואת מגרשיה את תבור ואת מגרשיה
78 ௭௮ எரிகோவுக்கு அப்புறமாயிருக்கிற யோர்தானுக்கு அடுத்து யோர்தானுக்குக் கிழக்கே இருக்கிற ரூபன் கோத்திரத்திலே வனாந்திரத்திலுள்ள பேசேரும் அதின் வெளிநிலங்களும், யாத்சாவும் அதின் வெளிநிலங்களும்,
ומעבר לירדן ירחו למזרח הירדן--ממטה ראובן את בצר במדבר ואת מגרשיה ואת יהצה ואת מגרשיה
79 ௭௯ கெதெமோத்தும் அதின் வெளிநிலங்களும், மெபாகாத்தும் அதின் வெளிநிலங்களும்,
ואת קדמות ואת מגרשיה ואת מיפעת ואת מגרשיה
80 ௮0 காத் கோத்திரத்திலே கீலேயாத்திலே உள்ள ராமோத்தும் அதின் வெளிநிலங்களும், மகனாயீமும் அதின் வெளிநிலங்களும்,
וממטה גד--את ראמות בגלעד ואת מגרשיה ואת מחנים ואת מגרשיה
81 ௮௧ எஸ்போனும் அதின் வெளிநிலங்களும், யாசேரும் அதின் வெளிநிலங்களும் இருந்தது.
ואת חשבון ואת מגרשיה ואת יעזיר ואת מגרשיה

< 1 நாளாகமம் 6 >