< 1 நாளாகமம் 11 >

1 இஸ்ரவேலர்கள் எல்லோரும் எப்ரோனிலிருக்கிற தாவீதிடம் கூடிவந்து: இதோ, நாங்கள் உம்முடைய எலும்பும் உம்முடைய சரீரமுமானவர்கள்.
तब सब इस्राईली हबरून में दाऊद के पास जमा' होकर कहने लगे, देख हम तेरी ही हड्डी और तेरा ही गोश्त हैं।
2 சவுல் இன்னும் ராஜாவாக இருக்கும்போதே, நீர் இஸ்ரவேலை நடத்திக்கொண்டுபோய் நடத்திக்கொண்டு வருவீர்; என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலை நீர் மேய்த்து, அவர்கள்மேல் தலைவனாக இருப்பீர் என்று உம்முடைய தேவனாகிய யெகோவா உமக்குச் சொல்லியும் இருக்கிறார் என்றார்கள்.
और गुज़रे ज़माने में उस वक़्त भी जब साऊल बादशाह था, तू ही ले जाने और ले आने में इस्राईलियों का रहबर था; और ख़ुदावन्द तेरे ख़ुदा ने तुझे फ़रमाया, “तू मेरी क़ौम इस्राईल की गल्लेबानी करेगा, और तू ही मेरी क़ौम इस्राईल का सरदार होगा।”
3 அப்படியே இஸ்ரவேலின் மூப்பர்கள் எல்லோரும் எப்ரோனிலே ராஜாவிடம் வந்தார்கள்; தாவீது எப்ரோனிலே யெகோவாவுக்கு முன்பாக அவர்களோடு உடன்படிக்கை செய்துகொண்டபின்பு, யெகோவா சாமுவேலைக்கொண்டு சொன்ன வார்த்தையின்படியே அவர்கள் தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்தார்கள்.
ग़रज़ इस्राईल के सब बुज़ुर्ग हबरून में बादशाह के पास आये, और दाऊद ने हबरून में उनके साथ ख़ुदावन्द के सामने 'अहद किया; और उन्होंने ख़ुदावन्द के कलाम के मुताबिक़ जो समुएल की ज़रिए' फ़रमाया था, दाऊद को मम्सूह किया ताकि इस्राईलियों का बादशाह हो।
4 பின்பு தாவீது இஸ்ரவேல் எல்லோரோடும் ஏபூசாகிய எருசலேமிற்குப் போனான்; எபூசியர்கள் அந்த தேசத்தின் குடிகளாக இருந்தார்கள்.
और दाऊद और तमाम इस्राईली येरूशलेम को गए यबूस यही है, और उस मुल्क के बाशिंदे यबूसी वहाँ थे।
5 அப்பொழுது ஏபூசின் குடிகள் தாவீதை நோக்கி: நீ இதற்குள் நுழைவதில்லை என்றார்கள்; ஆனாலும் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான்; அது தாவீதின் நகரமானது.
और यबूस के बाशिंदों ने दाऊद से कहा कि तू यहाँ आने न पाएगा तोभी दाऊद ने सिय्यून का क़िला' ले लिया, यही दाऊद का शहर है।
6 எபூசியர்களை முறியடிப்பதில் எவன் முந்தினவனாக இருக்கிறானோ, அவன் தலைவனும் தளபதியுமாக இருப்பானென்று தாவீது சொல்லியிருந்தான்; செருயாவின் மகனாகிய யோவாப் முந்தி அவர்களை முறியடித்து தலைவனாக்கப்பட்டான்.
और दाऊद ने कहा, “जो कोई पहले यबूसियों को मारे वह सरदार और सिपहसालार होगा।” और योआब बिन ज़रोयाह पहले चढ़ गया और सरदार बना।
7 தாவீது அந்தக் கோட்டையில் தங்கியிருந்ததால், அது தாவீதின் நகரம் என்னப்பட்டது.
और दाऊद क़िले' में रहने लगा, इसलिए उन्होंने उसका नाम दाऊद का शहर रख्खा।
8 பிற்பாடு அவன் நகரத்தை மில்லோ தொடங்கிச் சுற்றிலும் கட்டினான்; யோவாப் நகரத்தின் மற்ற இடங்களைப் பழுதுபார்த்தான்.
और उसने शहर को चारों तरफ़ या'नी मिल्लो से लेकर चारों तरफ़ बनाया और योआब ने बाक़ी शहर की मरम्मत की।
9 தாவீதின் பெயரும் புகழும் நாளுக்குநாள் வளர்ந்துவந்தது; ஏனென்றால், சேனைகளுடைய யெகோவா அவனோடு இருந்தார்.
और दाऊद तरक़्क़ी पर तरक़्क़ी करता गया, क्यूँकि रब्ब — उल — अफ़वाज उसके साथ था।
10 ௧0 யெகோவா இஸ்ரவேலுக்காகச் சொன்ன வார்த்தையின்படியே, தாவீதை ராஜாவாக்க அவனோடு இருந்து ராஜ்ஜியபாரம்செய்கிற அவனிடமும், எல்லா இஸ்ரவேலர்களிடமும், வீரர்களாக இருந்த முதன்மையான பெலசாலிகளும்,
और दाऊद के सूर्माओं के सरदार यह हैं, जिन्होंने उसकी हुकूमत में सारे इस्राईल के साथ उसे मज़बूती दी ताकि जैसा ख़ुदावन्द ने इस्राईल के हक़ में कहा था उसे बादशाह बनाएँ।
11 ௧௧ தாவீதுக்கு இருந்த அந்த பலசாலிகளின் எண்ணிக்கையாவது: அக்மோனியின் மகனாகிய யாஷோபியாம் என்னும் முப்பது பேர்களின் தலைவன்: இவன் முந்நூறுபேர்களின்மேல் தன்னுடைய ஈட்டியை ஓங்கி அவர்களை ஒன்றாகக் கொன்றுபோட்டான்.
दाऊद के सूर्माओं का शुमार यह है: यसुबि'आम बिन हकमूनी जो तीसों का सरदार था। उने तीन सौ पर अपना भाला चलाया और उनको एक ही वक़्त में क़त्ल किया।
12 ௧௨ இவனுக்கு இரண்டாவது அகோயின் மகனாகிய தோதோவின் மகன் எலெயாசார்; இவன் மூன்று பெலசாலிகளில் ஒருவன்.
उसके बाद अखूही दोदो का बेटा एलियाज़र था जो उन तीनों सूर्माओं में से एक था।
13 ௧௩ பெலிஸ்தர்கள் பாஸ்தம்மீமிலிருக்கிற வாற்கோதுமை நிறைந்த வயல்நிலத்தில் யுத்தத்திற்குக் கூடிவந்தபோதும், மக்கள் பெலிஸ்தர்களைக் கண்டு ஓடினபோதும் இவன் தாவீதோடு அங்கே இருந்தான்.
वह दाऊद के साथ फ़सदम्मीम में था जहाँ फ़िलिस्ती जंग करने को जमा' हुए थे। वहाँ ज़मीन का टुकड़ा जौ से भरा हुआ था, और लोग फ़िलिस्तियों के आगे से भागे।
14 ௧௪ அப்பொழுது அவர்கள் இந்த நிலத்தின் நடுவிலே நின்று அதைக் காப்பாற்றிப் பெலிஸ்தர்களை வெட்டிப்போட்டார்கள்; அதினாலே யெகோவா பெரிய இரட்சிப்பை நடப்பித்தார்.
तब उन्होंने उस ज़मीन क्व टुकड़े के बीच में खड़े हो कर उसे बचाया और फ़िलिस्तियों को क़त्ल किया और ख़ुदावन्द ने बड़ी फ़तह देकर उनको रिहा बख़्शी।
15 ௧௫ முப்பது தலைவர்களில் மூன்றுபேர் அதுல்லாம் என்னும் கன்மலைக் குகையில் இருக்கிற தாவீதிடம் போயிருந்தார்கள்; பெலிஸ்தர்களின் முகாம் ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் இறங்குகிறபோது,
और उन तीसों सरदारों में से तीन, दाऊद के साथ थे उस चट्टान पर या'नी 'अदूल्लाम के मुग़ारे में उतर गए, और फ़िलिस्तियों की फ़ौज रिफ़ाईम की वादी में ख़ेमाज़न थी।
16 ௧௬ தாவீது பாதுகாப்பான ஒரு இடத்தில் இருந்தான்; அப்பொழுது பெலிஸ்தர்களின் படை பெத்லெகேமில் இருந்தது.
और दाऊद उस वक़्त गढ़ी में था और फ़िलिस्तियों की चौकी उस वक़्त बैतलहम में थी।
17 ௧௭ தாவீது பெத்லெகேமின் நுழைவுவாயிலில் இருக்கிற கிணற்றின் தண்ணீர்மேல் ஆசைகொண்டு, என்னுடைய தாகத்திற்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவருகிறவன் யார் என்றான்.
और दाऊद ने तरस कर कहा, “ऐ काश कोई बैतलहम के उस कुँए का पानी जो फाटक के क़रीब है, मुझे पीने को देता!”
18 ௧௮ அப்பொழுது அந்த மூன்றுபேர்களும் பெலிஸ்தர்களின் முகாமிற்குள் துணிவுடன் நுழைந்துபோய், பெத்லெகேமின் நுழைவுவாயிலில் இருக்கிற கிணற்றிலிருந்து தண்ணீர் மொண்டு, தாவீதிடம் கொண்டுவந்தார்கள்; ஆனாலும் அவன் அதைக் குடிக்க மனமில்லாமல் அதைக் கர்த்தருக்கென்று ஊற்றிப்போட்டு:
तब वह तीनों फ़िलिस्तियों की सफ़ तोड़ कर निकल गए और बैतलहम के उस कुँए में से जो फाटक के क़रीब है पानी भर लिया और उसे दाऊद के पास लाये लेकिन दाऊद ने न चाहा कि उसे पिए बल्कि उसे ख़ुदावन्द के लिए तपाया।
19 ௧௯ நான் இதைச் செய்யாதபடி, என்னுடைய தேவன் என்னைக் காத்துக்கொள்வாராக; தங்களுடைய உயிரைப்பற்றி நினைக்காமல் போய் அதைக் கொண்டுவந்த இந்த மனிதர்களின் ரத்தத்தைக் குடிப்பேனோ என்று சொல்லி அதைக் குடிக்கமாட்டேன் என்றான். இப்படி இந்த மூன்று பெலசாலிகளும் செய்தார்கள்.
और कहने लगा कि ख़ुदा न करे कि मैं ऐसा करूँ। क्या मैं इन लोगों का ख़ून पियूँ जो अपनी जानों पर खेले हैं? क्यूँकि वह जानबाज़ी कर के उसको लाये हैं। तब उसने न पिया। वह तीनों सूर्मा ऐसे ऐसे काम करते थे।
20 ௨0 யோவாபின் சகோதரனாகிய அபிசாய் அந்த மூன்றுபேர்களில் முதன்மையானவன்; அவன் தன்னுடைய ஈட்டியை ஓங்கி, முந்நூறுபேரை கொன்றதால் இந்த மூன்றுபேர்களில் பெயர்பெற்றவனானான்.
और योआब का भाई अबीशै तीनों का सरदार था। उसने तीन सौ पर भाला चलाया और उनको मार डाला। वह इन तीनों में मशहूर था।
21 ௨௧ இந்த மூன்றுபேர்களில் அவன் மற்ற இரண்டுபேர்களிலும் மேன்மையுள்ளவனானதால், அவர்களில் தலைவனானான்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேர்களுக்கு அவன் சமமானவன் இல்லை.
यह तीनों में उन दोनों से ज़्यादा ख़ास था और उनका सरदार बना, लेकिन उन पहले तीनों के दर्जे को न पहुँचा।
22 ௨௨ பெலசாலியாகிய யோய்தாவின் மகனும், கப்சேயேல் ஊரைச்சேர்ந்தவனுமாகிய பெனாயாவும் செய்கைகளில் வல்லவனாக இருந்தான்; அவன் மோவாப் தேசத்தின் இரண்டு வலிமையான சிங்கங்களைக் கொன்றதுமட்டுமல்லாமல், உறைந்த மழைபெய்த நாளில் அவன் ஒரு குகைக்குள்ளே இறங்கிப்போய், ஒரு சிங்கத்தைக் கொன்றான்.
और बिनायाह बिन यहूयदा' एक क़बज़िएली सूर्मा था जिसने बड़ी बहादुरी के काम किये थे; उसने मोआब के अरिएल के दोनों बेटों को क़त्ल किया, और जाकर बर्फ़ के मौसम में एक गढ़े के बीच एक शेर को मारा।
23 ௨௩ ஐந்து முழ உயரமான ஒரு எகிப்தியனையும் அவன் கொன்றுபோட்டான்; அந்த எகிப்தியனுடைய கையில் நெய்கிறவர்களின் படைமரத்திற்கு இணையான ஒரு ஈட்டி இருக்கும்போது, இவன் ஒரு தடியைப் பிடித்து, அவனிடம் போய், அந்த எகிப்தியனுடைய கையிலிருந்த ஈட்டியைப் பறித்து, அவனுடைய ஈட்டியால் அவனைக் கொன்றுபோட்டான்.
और उसने पाँच हाथ के एक क़दआवर मिस्री को क़त्ल किया हालाँकि उस मिस्री के हाथ में जुलाहे के शहतीर के बराबर एक भाला था, लेकिन वह एक लाठी लिए हुए उसके पास गया और भाले को उस मिस्री के हाथ से छीन कर उसी के भाले से उसको क़त्ल किया।
24 ௨௪ இவைகளை யோய்தாவின் மகனான பெனாயா செய்ததால், மூன்று பெலசாலிகளுக்குள்ளே பெயர்பெற்றவனாக இருந்தான்.
यहुयदा के बेटे बिनायाह ने ऐसे ऐसे काम किये और वह उन तीनों सूर्माओं में नामी था।
25 ௨௫ முப்பதுபேர்களிலும் இவன் மேன்மையுள்ளவன்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேர்களுக்கும் இவன் சமமானவன் இல்லை; அவனை தாவீது தன்னுடைய மெய்க்காவலர்களுக்குத் தலைவனாக வைத்தான்.
वह उन तीसों से मु'अज़्ज़िज़ था, लेकिन पहले तीनों के दर्जे को न पहुँचा। और दाऊद ने उसे मुहाफ़िज़ सिपाहियों का सरदार बनाया।
26 ௨௬ இராணுவத்திலிருந்த மற்ற பெலசாலிகள்: யோவாபின் தம்பி ஆசகேல், பெத்லகேம் ஊரைச்சேர்ந்த தோதோவின் மகன் எல்க்கானான்,
और लश्करों में सूर्मा यह थे: योआब का भाई 'असाहेल और बैतलहमी दोदो का बेटा इल्हनान,
27 ௨௭ ஆரோதியனாகிய சம்மோத், பெலோனியனாகிய ஏலெஸ்,
और सम्मोत हरूरी, ख़लिसफ़लूनी,
28 ௨௮ தெக்கோவியனாகிய இக்கேசின் மகன் ஈரா, ஆனதோத்தியனான அபியேசர்,
तक़ू'अ, 'इक़्क़ीस, का बेटा 'ईरा, अबी'अज़र 'अन्तोती,
29 ௨௯ ஊசாத்தியனாகிய சிப்பெக்காய், அகோகியனாகிய ஈலாய்,
सिब्बकी हुसाती, 'एली अखूही,
30 ௩0 நெத்தோபாத்தியனாகிய மகராயி, நெத்தோபாத்தியனாகிய பானாவின் மகன் ஏலேத்,
महरी नतूफ़ाती, हलिद बिन बा'ना नतूफ़ाती,
31 ௩௧ பென்யமீன் சந்ததியில் கிபேயா ஊரைச்சேர்ந்த ரிபாயின் மகன் இத்தாயி, பிரத்தோனியனாகிய பெனாயா,
बनी बिनयमीन के जिब'आ के रीबी का बेटा इत्ती, बिनायाह फ़िर'आतोनी,
32 ௩௨ காகாஸ் நீரோடைத் தேசத்தானாகிய ஊராயி, அர்பாத்தியனாகிய அபியேல்,
जा'स की नदियों का बाशिंदा हूरी, अबीएल 'अरबाती,
33 ௩௩ பகரூமியனாகிய அஸ்மாவேத், சால்போனியனாகிய ஏலியாபா,
'अज़मावत बहरूमी, इलीयाब सा'लबूनी,
34 ௩௪ கீசோனியனாகிய ஆசேமின் மகன்கள், ஆராரியனாகிய சாகியின் மகன் யோனத்தான்.
बनी हशीम जिज़ूनी, हरारी शजी का बेटा यूनतन,
35 ௩௫ ஆராரியனாகிய சாக்காரின் மகன் அகியாம், ஊரின் மகன் ஏலிபால்,
और हरारी सक्कार का बेटा अख़ीआम, इलिफ़ाल बिन ऊर,
36 ௩௬ மெகராத்தியனாகிய எப்பேர், பெலோனியனாகிய அகியா,
हिफ़्र मकीराती, अखि़याह फ़लूनी,
37 ௩௭ கர்மேலியனாகிய ஏஸ்ரோ, ஏஸ்பாயின் மகன் நாராயி,
हसरू कर्मिली, नग़री बिन अज़बी,
38 ௩௮ நாத்தானின் சகோதரன் யோவேல், அகரியின் மகன் மிப்கார்,
नातन कला भाई यूएल, मिबख़ार बिन हाजिरी,
39 ௩௯ அம்மோனியனாகிய சேலேக், செருயாவின் மகனாகிய யோவாபின் ஆயுததாரியான பெரோத்தியனாகிய நாராய்,
सिलक़ 'अम्मूनी, नहरी बैरोती जो योआब बिन ज़रोयाह का सिलाहबरदार था,
40 ௪0 இத்ரியனாகிய ஈரா, இத்தரியனாகிய காரேப்,
'ईरा ईत्री, जरीब इतरी,
41 ௪௧ ஏத்தியனான உரியா, அக்லாயின் மகன் சாபாத்,
ऊरिय्याह हित्ती, ज़बद बिन अख़ली,
42 ௪௨ ரூபனியர்களின் தலைவனாகிய சீசாவின் மகன் அதினா என்னும் ரூபனியன்; அவனோடு முப்பது பேர் இருந்தார்கள்.
सीज़ा रुबीनी का बेटा 'अदीना रूबीनियों का एक सरदार जिसके साथ तीस जवान थे,
43 ௪௩ மாகாவின் மகன் ஆனான், மிதினியனாகிய யோசபாத்,
हनान बिन मा'का, यहूसफ़त मितनी,
44 ௪௪ அஸ்தரேத்தியனாகிய உசியா, ஆரோவேரியனாகிய ஓதாமின் மகன்கள் சமாவும், யேகியேலும்,
'उज़्ज़ियाह 'इस्ताराती, ख़ूताम 'अरो'ईरी के बेटे समा'अ और य'ईएल,
45 ௪௫ சிம்ரியின் மகன் யெதியாயேல், தித்சியனாகிய அவனுடைய சகோதரன் யோகா,
यदी'एलबिन सिमरी और उसका भाई यूख़ा तीसी,
46 ௪௬ மாகாவியர்களான ஏலியேல், ஏல்நாமின் மகன்கள் ஏரிபாயும், யொசவியாவும், மோவாபியனான இத்மாவும்,
इलीएल महावी, और इलनाम के बेटे यरीबी और यूसावियाह, और यितमा मोआबी,
47 ௪௭ மெசோபாயா ஊரைச்சேர்ந்தவர்களாகிய ஏலியேலும், ஓபேதும், யாசீயேலுமே.
इलीएल, और 'ओबेद, और या'सीएल मज़ूबाई।

< 1 நாளாகமம் 11 >