< சங்கீதம் 87 >

1 கோராகின் மகன்களின் பாட்டாகிய சங்கீதம். யெகோவா தமது அஸ்திபாரத்தைப் பரிசுத்த மலையில் அமைத்திருக்கிறார்.
可拉后裔的诗歌。 耶和华所立的根基在圣山上。
2 யெகோவா யாக்கோபிலுள்ள எல்லா வாழ்விடங்களைப் பார்க்கிலும், சீயோனின் வாசல்களை நேசிக்கிறார்.
他爱锡安的门, 胜于爱雅各一切的住处。
3 இறைவனின் நகரமே, உன்னைக்குறித்து மகிமையான காரியங்கள் சொல்லப்படுகின்றன:
神的城啊, 有荣耀的事乃指着你说的。 (细拉)
4 “என்னை ஏற்றுக்கொள்ளுகிறவர்களோடு நான் ராகாபையும் பாபிலோனையும் குறித்து, ‘இவர்கள் சீயோனிலே பிறந்தவர்கள்’ என்று சொல்வேன்; பெலிஸ்தியாவையும் தீருவையும் எத்தியோப்பியாவையும் குறித்தும் அப்படியே சொல்வேன்.”
我要提起拉哈伯和巴比伦人, 是在认识我之中的; 看哪,非利士和泰尔并古实人, 个个生在那里。
5 உண்மையாகவே சீயோனைக் குறித்து, “இன்னார் இன்னார் அங்கே பிறந்தார்கள் என்றும், மகா உன்னதமானவர் தாமே அதை நிலைநிறுத்துவார்” என்றும் சொல்லப்படும்.
论到锡安,必说: 这一个、那一个都生在其中, 而且至高者必亲自坚立这城。
6 “இன்னார் சீயோனிலே பிறந்தார்” என்பதாக யெகோவா மக்களின் பதிவேட்டில் எழுதுவார்.
当耶和华记录万民的时候, 他要点出这一个生在那里。 (细拉)
7 அவர்கள் இசை மீட்டும்பொழுது, “எங்கள் ஊற்றுகள் எல்லாம் உம்மிலேயே இருக்கிறது” என்று பாடுவார்கள்.
歌唱的,跳舞的,都要说: 我的泉源都在你里面。

< சங்கீதம் 87 >