< நெகேமியா 11 >

1 இஸ்ரயேல் மக்களின் தலைவர்கள் எருசலேமில் குடியிருந்தனர். மிகுதியான மக்களில் பத்துப் பேருக்கு ஒருவரை பரிசுத்த நகரமாகிய எருசலேமில் போய் குடியிருக்கப்பண்ண சீட்டுப்போட்டார்கள். மிகுதியான ஒன்பதுபேரும் தங்கள் பட்டணங்களில் தங்கி இருந்தனர்.
И населише се кнезови народни у Јерусалиму, а остали народ мета жреб да узму једног од десет да седи у јерусалиму светом граду, и осталих девет делова по другим градовима.
2 எருசலேமில் போய்த் தங்குவதற்கு முன்வந்தவர்களை எல்லா மக்களும் வாழ்த்தினார்கள்.
И благослови народ све људе који сами од своје воље присташе да седе у Јерусалиму.
3 எருசலேமில் குடியமர்ந்த மாகாணத் தலைவர்களின் பெயர்கள்: ஆயினும் இஸ்ரயேலரிலும், ஆசாரியர்களிலும், லேவியர்களிலும், ஆலய பணியாட்களிலும், சாலொமோனின் வேலையாட்களின் வழித்தோன்றல்களிலும் உள்ள பலர் யூதாவிலுள்ள பல்வேறுபட்ட பட்டணங்களிலுள்ள தங்களுக்குச் சொந்தமான இடங்களில் தொடர்ந்து வாழ்ந்தார்கள்.
Ово су главари земаљски који се населише у Јерусалиму, а по осталим градовима јудејским настанише се сваки на свом наследству по градовима својим Израиљци свештеници и Левити, Нетинеји и синови слуга Соломунових:
4 ஆனால் யூதாவையும், பென்யமீனையும் சேர்ந்த மற்ற மக்களில் சிலர் எருசலேமில் வாழ்ந்தார்கள். எருசலேமில் குடியமர்ந்த யூதாவின் வழிவந்த தலைவர்கள் யாரெனில், அத்தாயா உசியாவின் மகன், உசியா சகரியாவின் மகன், சகரியா அமரியாவின் மகன், அமரியா செபதியாவின் மகன், செபதியா மகலாலெயேலின் மகன், மகலாலேல் பேரேஸின் சந்ததிகளுள் ஒருவன்.
У Јерусалиму, дакле, населише се неки од синова Јудиних и Венијаминових: од синова Јудиних: Атаја син Озије, сина Захарије, сина Амарије, сина Сефатије, сина Малелеиловог, од синова Фаресових;
5 அடுத்து மாசெயா பாரூக்கின் மகன், பாரூக் கொல்லோசேயின் மகன், கொல்லோசே அசாயாவின் மகன், அசாயா அதாயாவின் மகன், அதாயா யோயாரிபின் மகன், யோயாரிபு சகரியாவின் மகன், சகரியா சீலோனின் வழித்தோன்றலில் ஒருவன்.
И Масија, син Варуха сина Холозе сина Азаје, сина Адаје, сина Јојарива сина Захрије, сина Силонијевог;
6 எருசலேமில் வாழ்ந்த பேரேஸின் சந்ததிகள் யாவரும் மொத்தமாக நானூற்று அறுபத்தெட்டு பலசாலிகளாயிருந்தனர்.
Свега синова Фаресових што се населише у Јерусалиму, четири стотине и шездесет и осам храбрих људи;
7 பென்யமீன் வழித்தோன்றலில் வந்த தலைவர்கள்: சல்லு மெசுல்லாமின் மகன், மெசுல்லாம் யோயேதின் மகன், யோயேது பெதாயாவின் மகன், பெதாயா கோலாயாவின் மகன், கோலாயா மாசெயாவின் மகன், மாசெயா இதியேலின் மகன், இதியேல் எஷாயாவின் மகன்,
А између синова Венијаминових: Салуј син Месулама, сина Јоада, сина Федаје, сина Колаје, сина Масија, сина Итила, сина Исаијиног,
8 அவனைப் பின்பற்றியவர்களான கப்பாய், சல்லாய் என்போருடன் மொத்தம் தொளாயிரத்து இருபத்தெட்டுப்பேர்.
И за њим Гава, Салај девет стотина и двадесет и осам;
9 சிக்ரியின் மகனான யோயேல் அவர்களின் தலைமை அதிகாரியாய் இருந்தான். அசெனுவாவின் மகன் யூதா பட்டணத்தின் இரண்டாவது மாவட்டத்திற்குப் பொறுப்பாயிருந்தான்.
А Јоило, син Захријев беше над њима, а Јуда син Сенујин беше други над градом;
10 ஆசாரியர்களை சேர்ந்தவர்கள்: யெதாயா யோயாரிபின் மகன், யாகின்,
Од свештеника: Једаја син Јојавов, Јахин,
11 இறைவனுடைய ஆலயத்தின் மேற்பார்வையாளனான செராயா இல்க்கியாவின் மகன், இல்க்கியா மெசுல்லாமின் மகன், மெசுல்லாம் சாதோக்கின் மகன், சாதோக்கு மெராயோத்தின் மகன், மெராயோத் அகிதூபின் மகன்.
Сераја син Хелкије, сина Месулама, сина Садока, сина Мерајота, сина Ахитововог, старешина у дому Божјем,
12 ஆலய வேலையைச் செய்ய இவர்களது உடன்வேலையாட்களுடன் எல்லாமாக எண்ணூற்று இருபத்திரண்டுபேர் இருந்தனர். அதாயா இவன் எரோகாமின் மகன், எரோகாம் பெலலியாவின் மகன், பெல்லியா அம்சியின் மகன், அம்சி சகரியாவின் மகன், சகரியா பஸ்கூரின் மகன், பஸ்கூர் மல்கியாவின் மகன்.
А браће њихове што служаху у дому осам стотина и двадесет и два; и Адаја, син Јероама, сина Фелалије, сина Амсија, сина Захарије, сина Пасхора, сина Малхијиног,
13 குடும்பத் தலைவர்களான அவனுடைய உடன்வேலையாட்களுடன் எல்லாமாக இருநூற்று நாற்பத்திரண்டுபேர் இருந்தார்கள்; அமாசாய் அசரெயேலின் மகன், அசரெயேல் அகசாயின் மகன், அகசாய் மெசில்லேமோத்தின் மகன், மெசில்லேமோத் இம்மேரின் மகன்.
И браће његове главара у домовима отачким двеста и четрдесет и два; и Амасај, син Азреила, сина Азаја; сина Месилемота, сина Имировог,
14 வலிய மனிதர்களான அவனுடைய உடன்வேலையாட்களுடன் எல்லாமாக நூற்று இருபத்தெட்டுப்பேர் இருந்தார்கள். அவர்களுடைய தலைமை அதிகாரியாக அகெதோலிமின் மகன் சப்தியேல் இருந்தான்.
И браће њихове храбрих људи сто и двадесет и осам, а над њима беше Завдило, син Гедолимов;
15 லேவியரைச் சேர்ந்தவர்கள்: செமாயா அசூபின் மகன், அசூபு அஸ்ரீகாமின் மகன், அஸ்ரீகாம் அசபியாவின் மகன், அசபியா புன்னியின் மகன்.
И од Левита: Семаја сина Асува сина Азрикама, сина Асавије, сина Вунијевог;
16 இறைவனுடைய ஆலயத்தின் வெளிப்புற வேலைகளுக்கு லேவியர்களுக்குத் தலைவர்களான சபெதாயும், யோசபாத்தும் பொறுப்பாயிருந்தார்கள்.
И Саветај, и Јозавад беху над послом спољашњим за дом Божји између главара левитских,
17 மத்தனியா இவன் மீகாவின் மகன், மீகா சப்தியின் மகன், சப்தி ஆசாபின் மகன். இவன் துதி செலுத்துதலையும், மன்றாட்டையும் நடத்துவதற்குப் பொறுப்பாயிருந்தான். பக்பூக்கியா தனது உடன்வேலையாட்களுள் இரண்டாவது பொறுப்பாளனாயிருந்தான்; அப்தா இவன் சம்மூவாவின் மகன், சம்மூவா காலாலின் மகன், காலால் எதுத்தூனின் மகன்.
А Матанија, син Михе сина Завдија сина Асафовог беше поглавар који почињаше хвалу у молитви, и Ваквукија други између браће своје, и Авда син Салије сина Галала сина Једутуновог;
18 பரிசுத்த நகரத்தில் இருந்த மொத்த லேவியர்கள் இருநூற்று எண்பத்து நான்குபேர்.
Свега Левита у светом граду беше две стотине и осамдесет и четири;
19 வாசல் காவலர் யாரெனில்: வாசல்களில் காவல்காத்த அக்கூப், தல்மோன் ஆகியோருடன் அவர்கள் கூட்டாளிகளும் மொத்தம் நூற்று எழுபத்திரண்டுபேர்.
А од вратара: Акув, Талмон, и браћа њихова што чуваху стражу на вратима, сто и седамдесет и два;
20 மீதியான இஸ்ரயேலர் ஆசாரியருடனும், லேவியருடனும் தங்களுடைய முற்பிதாக்களின் சொத்துரிமை இடங்களில் யூதாவிலுள்ள எல்லா நகரங்களிலும் வாழ்ந்தார்கள்.
А остатак народа Израиљевог, свештеника и Левита беше по свим градовима Јудиним, свак на свом наследству;
21 ஆலய பணியாட்கள் ஓபேல் குன்றில் வாழ்ந்தார்கள். சீகாவும் கிஸ்பாவும் இவர்களுக்குப் பொறுப்பாயிருந்தார்கள்.
А Нетинеји населише се у Офилду, и Сиха и Гиспа беху над Нетинејима.
22 எருசலேமிலிருந்த லேவியருக்கு மேற்பார்வையாளனாக ஊசி இருந்தான். ஊசி பானியின் மகன், பானி அசபியாவின் மகன், அசபியா மதனியாவின் மகன், மத்தனியா மீகாவின் மகன். ஊசி ஆசாபின் சந்ததிகளில் ஒருவன், ஆசாபின் சந்ததிகளே இறைவனுடைய ஆலய ஆராதனைக்குப் பொறுப்பான பாடகர்களாக இருந்தார்கள்.
А над Левитима у јерусалиму беше Озија, син Ванија, сина Асавије, сина Матаније, сина Мишиног. Између синова Асафових, певачи беху у служби за дом Божји.
23 இந்த பாடகர்கள் அரசனுடைய உத்தரவுக்குக் கீழ்ப்பட்டிருந்து, தங்களுடைய அன்றாட நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தினார்கள்.
Јер беше царева заповест за њих и беше одређена плата певачима за сваки дан.
24 யூதாவின் மகன் சேராவின் வழித்தோன்றலான மெஷெசாபெயேலின் மகன் பெத்தகியா, மக்களுடன் சம்பந்தப்பட்ட எல்லா விவகாரங்களுக்கும் பொறுப்பான அரசனுடைய பிரதிநிதியாய் இருந்தான்.
И Петаја, син Месизавеилов од синова Заре сина Јудиног беше место цара за сваки посао с народом.
25 கிராமங்களையும், அதனுடைய வயல்களையும் பொறுத்தமட்டில், யூதா மக்களில் சிலர் கீரியாத் அர்பாவிலும் அதைச் சுற்றியுள்ள குடியிருப்புகளிலும், தீபோனிலும், அதன் குடியிருப்புகளிலும், எகாப்செயேலிலும் அதைச் சேர்ந்த கிராமங்களிலும் வாழ்ந்தார்கள்.
А по селима и пољима њиховим неко од синова Јудиних настани се у Киријат-Арви и засеоцима њеним, и у Дивону и засеоцима његовим, и у Јекавсеилу и селима његовим,
26 அத்துடன் யெசுவா, மொலாதா, பெத்பெலேத்,
И у Јесуји и Молади и Вет-Фелету,
27 ஆத்சார்சூவால், பெயெர்செபா, அதன் குடியிருப்புகள்,
И у Асар-Суалу и Вирсавеји и засеоцима њеним,
28 சிக்லாக், மேகோனா, அதன் குடியிருப்புகள்,
И у Сиклагу и у Мекони и засеоцима њеним,
29 என்ரிம்மோன், சோரா, யர்மூத்,
И у Ен-Римону и у Сареји и у Јармоту,
30 சனோவா, அதுல்லாம், அவற்றின் கிராமங்கள், லாகீசு, அதன் வயல்கள், அசேக்கா அதன் குடியிருப்புகள் ஆகியவற்றில் வாழ்ந்தார்கள். ஆகவே இவர்கள் பெயெர்செபாவிலிருந்து இன்னோம் பள்ளத்தாக்கு வரையுள்ள பிரதேசங்களில் வாழ்ந்தார்கள்.
У Заноји, у Одоламу и селима њиховим, у Лахису с пољем његовим, у Азици и засеоцима њеним. И тако се населише од Вирсавеје до долине Емона.
31 கேபாவைச் சேர்ந்த பென்யமீனியரின் சந்ததிகள் மிக்மாஸ், ஆயா, பெத்தேலும், அதைச் சுற்றியுள்ள குடியிருப்புகளிலும் வாழ்ந்தார்கள்.
А синови Венијаминови населише се од Гаваје у Михамасу и Аји и Ветиљу и засеоцима његовим,
32 அத்துடன் ஆனதோத், நோப், அனனியா
У Анатоту, у Нову, Ананији,
33 ஆத்சோர், ராமா, கித்தாயிம்,
У Асору, у Рами, у Гитајиму,
34 ஆதித், செபோயிம், நெபலாத்,
У Адиду, у Севојиму, у Невалату,
35 லோத், ஓனோ ஆகிய இடங்களிலும், கைவினைஞரின் பள்ளத்தாக்கிலும் வாழ்ந்தார்கள்.
У Лоду, у Онону, и у долини дрводељској.
36 யூதாவைச் சேர்ந்த லேவியர்களில் சில பிரிவினர் பென்யமீனில் குடியிருந்தார்கள்.
А Левити поделише се међу Јудом и Венијамином.

< நெகேமியா 11 >