< மத்தேயு 26 >

1 இயேசு இவற்றையெல்லாம் சொல்லி முடித்தபின்பு, அவர் தமது சீடருக்குச் சொன்னதாவது:
І сталось, як скінчив Ісус, усї цї слова, рече до ученикїв своїх:
2 “நீங்கள் அறிந்திருக்கிறபடி, பஸ்கா என்ற பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கிறது. அப்பொழுது மானிடமகனாகிய நான் சிலுவையில் அறையப்படும்படி ஒப்புக்கொடுக்கப்படுவேன்” என்றார்.
Ви знаєте, що через два днї буде пасха, й Сина чоловічого видадуть на розпяттє.
3 அவ்வேளையில் தலைமை ஆசாரியர்களும், யூதரின் தலைவர்களும், காய்பா என்னும் பெயருடைய பிரதான ஆசாரியனின் அரண்மனையில் ஒன்றுகூடினார்கள்.
Тодї зібрались архиєреї, та письменники, та старші людські у двір до архиєрея, на прізвище Каяфи,
4 அவர்கள் ஏதாவது தந்திரமான முறையில் இயேசுவைக் கைதுசெய்து, கொலைசெய்வதற்குச் சூழ்ச்சி செய்தார்கள்.
і радились, щоб узяти Ісуса підступом і вбити.
5 ஆனாலும் பண்டிகைக் காலத்தில் அப்படிச் செய்யக்கூடாது, அப்படிச் செய்தால் மக்கள் மத்தியில் கலகம் ஏற்படலாம் என்று சொல்லிக்கொண்டார்கள்.
Та казали: Тільки не в сьвято, щоб не було бучі між народом.
6 இயேசு பெத்தானியாவில் குஷ்டவியாதியாயிருந்த சீமோனுடைய வீட்டில் இருந்தபோது,
Як же був Ісус у Витанїї в господї в Симона прокаженого,
7 ஒரு பெண் மிகவும் விலை உயர்ந்த நறுமணத்தைலம் உள்ள, வெள்ளைக்கல் குடுவையுடன் அவரிடத்தில் வந்தாள். அவர் சாப்பாட்டுப் பந்தியில் இருக்கையில், அவள் அந்த நறுமணத் தைலத்தை அவருடைய தலையின்மேல் ஊற்றினாள்.
приступила да Него жінка, маючи посудинку предорогого мира, та й злила на голову Йому, як сидїв за столом.
8 சீடர்கள் இதைக் கண்டபோது ஆத்திரமடைந்து, “ஏன் இந்த வீண்செலவு?
Побачивши ж ученики Його, сердились, кажучи: На що така втрата?
9 இந்த நறுமணத் தைலத்தை நல்ல விலைக்கு விற்று, அந்தப் பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே” என்றார்கள்.
Можна бо було се миро продати дорого та дати вбогим.
10 இயேசு இதை அறிந்து அவர்களிடம், “ஏன் இந்தப் பெண்ணுக்குத் தொல்லை கொடுக்கிறீர்கள்? அவள் ஒரு சிறந்த நோக்கத்துடனேயே இந்தக் காரியத்தை எனக்கு செய்திருக்கிறாள்.
Зрозумівши ж Ісус, рече до них: що ви смутите жінку? дїло бо добре вчинила на менї.
11 ஏழைகள் எப்பொழுதும் உங்களுடன் இருப்பார்கள், ஆனால் நான் எப்பொழுதும் உங்களுடன் இருக்கமாட்டேன்.
Всякого бо часу маєте вбогих із собою, мене ж не всякого часу маєте.
12 இவள் இந்த நறுமணத் தைலத்தை என் உடலின்மேல் ஊற்றி, என் அடக்கத்திற்கு ஆயத்தமாகவே இதைச் செய்தாள்.
Зливши бо вона миро се на тїло моє на погребеннє моє зробила.
13 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், உலகம் முழுவதும் எங்கெல்லாம் இந்த நற்செய்தி அறிவிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் இவள் செய்ததும், இவளுடைய நினைவாகச் சொல்லப்படும்” என்றார்.
Істино глаголю вам: Де б нї проповідувалась євангелия ся по всьому сьвіту, казати меть ся й те, що зробила оця, на спомин її.
14 பின்னர் யூதாஸ்காரியோத்து என அழைக்கப்படும் பன்னிரண்டு சீடர்களில் ஒருவன் தலைமை ஆசாரியர்களிடம் போய்,
Тодї, пійшовши один з дванайцятьох, на ймя Юда Іскариоцький, до архиєреїв,
15 “நான் இயேசுவை உங்களிடம் ஒப்புக்கொடுத்தால், நீங்கள் எனக்கு என்ன கொடுப்பீர்கள்?” என்று கேட்டான். அவர்கள் முப்பது வெள்ளிக்காசை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள்.
каже: Що хочете дати менї, а я вам видам Його? Вони ж поставили йому трийцять срібняків.
16 அவ்வேளையிலிருந்து யூதாஸ், இயேசுவைக் காட்டிக்கொடுப்பதற்கான வாய்ப்பைத் தேடிக்கொண்டிருந்தான்.
І з того часу шукав нагоди, щоб Його видати.
17 புளிப்பில்லாத அப்பப் பண்டிகையின் முதலாம் நாளிலே, சீடர்கள் இயேசுவிடம் வந்து, “பஸ்கா உணவைச் சாப்பிடும்படி, நாங்கள் எங்கே உமக்காக ஆயத்தம் பண்ணவேண்டும் என்று விரும்புகிறீர்?” என்று கேட்டார்கள்.
У первий же день опрісночний приступили ученики до Ісуса, кажучи Йому: Де хочеш, щоб приготовили Тобі їсти пасху?
18 அதற்கு இயேசு, “பட்டணத்திற்குள்ளே நான் குறிப்பிடும் மனிதனிடம் போய், ‘போதகர் உமக்குச் சொல்கிறதாவது: நியமிக்கப்பட்ட எனது வேளை நெருங்கிவிட்டது. நான் உமது வீட்டில், எனது சீடர்களுடன் பஸ்காவைக் கொண்டாடப் போகிறேன்’ என்று சொல்லுங்கள்” என்றார்.
Він же рече: Йдїть у город до оттакого, та скажіть йому: Учитель рече: Час мій близько; у тебе зроблю пасху з учениками моїми.
19 இயேசுவின் சீடர்கள் தங்களுக்கு அவர் சொன்னபடியே செய்து, பஸ்காவை ஆயத்தம் செய்தார்கள்.
І зробили ученики, як повелїв їм Ісус; і приготовили пасху.
20 மாலை வேளையானபோது, இயேசு பன்னிரண்டு சீடர்களோடு பந்தியில் அமர்ந்திருந்தார்.
Як же настав вечір, сїв Він за столом із дванайцятьма.
21 அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்” என்றார்.
І, як вони їли, рече: Істино глаголю вам, що один з вас зрадить мене.
22 அப்பொழுது அவர்கள் மிகவும் துக்கமடைந்து, ஒருவன்பின் ஒருவனாக அவரிடம், “ஆண்டவரே, நிச்சயமாக அது நான் இல்லை அல்லவா?” என்று கேட்கத் தொடங்கினார்கள்.
І, засумівши тяжко, почали говорити до Него кожен з них: Аже ж не я, Господи?
23 அதற்குப் பதிலாக இயேசு அவர்களிடம், “பாத்திரத்தில் என்னோடுகூட கை போட்டவனே, என்னைக் காட்டிக்கொடுப்பான்.
Він же, озвавшись, рече: Хто вмочає зо мною руку в миску, той зрадить мене.
24 மானிடமகனாகிய என்னைக்குறித்து எழுதியிருக்கிறபடியே நான் போகிறேன். ஆனால் மானிடமகனாகிய என்னைக் காட்டிக்கொடுக்கிறவனுக்கு ஐயோ! அவன் பிறக்காமலே இருந்திருந்தால் அது அவனுக்கு நலமாய் இருந்திருக்கும்” என்றார்.
Син чоловічий іде, як писано про Него; горе ж чоловікові тому, що Сина чоловічого зрадить! Добре було б йому, коли б не родив ся чоловік той.
25 அப்பொழுது இயேசுவைக் காட்டிக்கொடுக்கப் போகிறவனான யூதாஸ், “போதகரே, நிச்சயமாக நீர் என்னைக் குறிக்கவில்லை அல்லவா?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “நீயே அதை சொல்லிவிட்டாயே!” என்று பதிலளித்தார்.
Озвав ся ж Юда, зрадник Його, й каже: Аже ж не я, учителю? Рече до него: Ти сказав єси.
26 அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், இயேசு அப்பத்தை எடுத்து இறைவனுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு தம்முடைய சீடர்களுக்குக் கொடுத்து அவர்களிடம், “இதை வாங்கிச் சாப்பிடுங்கள்; இது எனது உடல்” என்றார்.
Як же вони їли, взявши Ісус хлїб і поблагословивши, ламав, і давав ученикам, і рече: Прийміть, їжте: се єсть тїло моє.
27 பின்பு அவர் பாத்திரத்தையும் எடுத்து, இறைவனுக்கு நன்றி செலுத்தி, அதை அவர்களுக்குக் கொடுத்தார். அவர் அவர்களிடம், “நீங்கள் எல்லோரும் இதிலிருந்து குடியுங்கள்.
І, взявши чашу, й оддавши хвалу, подав їм, глаголючи: Пийте з неї всї;
28 இது என்னுடைய உடன்படிக்கையின் இரத்தமாயிருக்கிறது, அநேகருடைய பாவங்களின் மன்னிப்புக்காக இது சிந்தப்படுகிறது” என்று சொன்னார்.
се бо єсть кров моя нового завіту, що за многих проливаєть ся на оставленнє гріхів.
29 “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், இவ்வேளையிலிருந்து, என் பிதாவின் அரசில் இதைப் புதியதாக உங்களோடு நான் குடிக்கும் நாள்வரைக்கும், இந்த திராட்சைப்பழ இரசத்தைக் குடிக்கமாட்டேன்” என்றார்.
Глаголю ж вам: Що не пити му від нинї з сього плоду винограднього аж до дня того, коли його пити му з вами новим у царстві Отця мого.
30 அவர்கள் ஒரு துதிப்பாடலைப் பாடிய பின்பு, ஒலிவமலைக்குச் சென்றார்கள்.
І засьпівавши вони, вийшли на гору Оливну.
31 அப்பொழுது இயேசு அவர்களிடம், “இந்த இரவிலேயே நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு ஓடிப்போவீர்கள். ஏனெனில், “‘நான் மேய்ப்பனை அடித்து வீழ்த்துவேன். அப்பொழுது மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும்,’ என்று எழுதியிருக்கிறது.
Тодї рече до них Ісус: Всї ви поблазнитись мною сієї ночи. Писано бо: Поражу пастиря, і розсиплють ся. вівцї стада.
32 “ஆனால் நான் உயிர்த்தெழுந்த பின்பு, உங்களுக்கு முன்னதாகவே கலிலேயாவுக்குப் போவேன்” என்றார்.
По воскресенню ж моїм попереджу вас у Галилею.
33 அதற்குப் பேதுரு, “மற்ற எல்லோரும் உம்மைவிட்டு ஓடிப்போனாலும் நான் ஒருபோதும் ஓடிப் போகமாட்டேன்” என்றான்.
Озвав ся ж Петр і каже до Него: Хоч усї поблазнять ся Тобою, я нїколи не зблазнюсь.
34 இயேசு அதற்கு அவனிடம், “நான் உனக்கு உண்மையைச் சொல்கிறேன், இந்த இரவிலே சேவல் கூவுவதற்கு முன்பே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய்” என்று பதிலளித்தார்.
Рече до него Ісус: Істино глаголю тобі: Що сієї ночі, перше нїж півень запіє, тричі відречеш ся мене.
35 ஆனால் பேதுருவோ, “நான் உம்முடன் சாகவேண்டிய நிலைமை ஏற்பட்டாலும், உம்மை ஒருபோதும் மறுதலிக்கமாட்டேன்” என்றான். சீடர்கள் எல்லோரும் அவ்விதமாகவே சொன்னார்கள்.
Каже йому Петр: Хоч би менї з Тобою і вмерти, не відречусь Тебе. Так і всі ученики казали.
36 பின்பு இயேசு தமது சீடர்களுடன் கெத்செமனே என்னும் ஒரு இடத்திற்குச் சென்றார். அங்கே அவர் அவர்களிடம், “நான் அங்குபோய் மன்றாடும்வரை இங்கே உட்கார்ந்திருங்கள்” என்றார்.
Тодї приходить з ними Ісус на врочище (місце) Гетсиман, і рече до учеників: Сидїть тут, поки, пійшовши, помолюсь оттам.
37 இயேசு பேதுருவையும், செபெதேயுவின் மகன்கள் இருவரையும் தன்னுடன் கூட்டிக்கொண்டு சென்றார். பின்பு அவர் மிகவும் துயரமுற்றுக் கலங்கத் தொடங்கினார்.
І взяв із собою Петра та двох синів Зеведєвих, і почав скорбіти та вдаватись у тугу.
38 இயேசு அவர்களிடம், “என் ஆத்துமா மரணத்திற்கேதுவான துக்கத்தால் நிறைந்திருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி, என்னுடன் விழித்துக் காத்திருங்கள்” என்றார்.
Тодї рече до них: Тяжко сумна, душа моя аж до смертї. Підождіть тут, і не спїте зо мною.
39 இயேசு சற்றுத் தூரமாய்ப் போய்த் தரையில் முகங்குப்புற விழுந்து, “என் பிதாவே, முடியுமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படிச் செய்யும்; ஆனாலும் என் விருப்பத்தின்படியல்ல, உம்முடைய விருப்பத்தின்படியே ஆகக்கடவது” என்று மன்றாடினார்.
І пройшовши трохи далїй, припав лицем своїм, молячись і глаголючи: Отче мій, коли можна, нехай мимо йде від мене чаша ся; тільки ж не як я хочу, а як Ти.
40 பின்பு இயேசு தமது சீடர்களிடம் திரும்பிவந்தபோது, அவர்கள் நித்திரையாயிருப்பதைக் கண்டார். அவர் பேதுருவிடம், “ஒருமணி நேரமாவது என்னுடன் விழித்திருக்க உங்களால் முடியவில்லையா?” என்று கேட்டார்.
І приходить до учеників, і знаходить їх сплячих, і рече до Петра: Так не змогли ви однієї години попильнувати зо мною?
41 “விழித்திருந்து மன்றாடுங்கள், அப்பொழுது நீங்கள் சோதனைக்குள் விழமாட்டீர்கள். ஆவி ஆர்வமாயிருக்கிறது, ஆனால் உடலோ பலவீனமுள்ளது” என்றார்.
Пильнуйте та молїть ся, щоб не ввійшли в спокусу. Дух то охочий, тїло ж немошне.
42 இயேசு இரண்டாவது முறையும் போய், “என் பிதாவே, இந்தப் பாத்திரத்திலிருந்து நான் குடித்தாலொழிய இது என்னைவிட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய விருப்பத்தின்படி ஆகக்கடவது” என்று மன்றாடினார்.
Знов, удруге відійшовши, молив ся, глаголючи: Отче мій, як не може ся чаша мимо йти від мене, коли не пити му її, нехай станеть ся воля твоя.
43 இயேசு திரும்பவும் வந்தபோது சீடர்கள் மீண்டும் நித்திரையாயிருப்பதை அவர் கண்டார்; ஏனெனில் அவர்களுடைய கண்கள் தூக்க மயக்கத்தில் இருந்தன.
І, прийшовши, знаходить їх знов сплячих, були бо очі в них важкі.
44 எனவே இயேசு அவர்களைவிட்டு விலகிப்போய், திரும்பவும் மூன்றாவது முறையாக அதே வார்த்தைகளைச் சொல்லி மன்றாடினார்.
І, зоставивши їх, пійшов ізнов, і моливсь утретє, промовляючи те ж саме слово.
45 பின்பு இயேசு தமது சீடர்களிடம் திரும்பிவந்து, அவர்களைப் பார்த்து, “நீங்கள் இன்னும் நித்திரை செய்து இளைப்பாறுகிறீர்களோ? இதோ பாருங்கள், வேளை வந்துவிட்டது. மானிடமகனாகிய நான் பாவிகளின் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிறேன்.
Тодї приходить до учеників своїх, і рече їм: Спіть уже й спочивайте ось настиг час, і Син чоловічий буде виданий у руки грішникам.
46 எழுந்திருங்கள், நாம் போவோம்! என்னைக் காட்டிக்கொடுப்பவன் இதோ வருகிறான்!” என்றார்.
Уставайте, ходімо: ось наближуєть ся зрадник мій.
47 இயேசு இவ்வாறு பேசிக்கொண்டிருக்கையில், பன்னிரண்டு சீடர்களில் ஒருவனாகிய யூதாஸ் அங்கே வந்தான். அவனுடன் ஒரு பெருங்கூட்டம் வாள்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு வந்தது. இவர்கள் தலைமை ஆசாரியர்களாலும் யூதரின் தலைவர்களாலும் அனுப்பப்பட்டிருந்தார்கள்.
Ще він говорив, коли се Юда, один з дванаицяти, приходить, а з ним багато народу з мечами й дручем, од архиєреїв та старших людських.
48 இயேசுவைக் காட்டிக்கொடுப்பவன், தான் அவர்களுக்கு ஒரு சைகையைக் காண்பிப்பதாகச் சொல்லியிருந்தான்: “நான் முத்தமிடுகிறவனே, அந்த மனிதர்; அவரைக் கைதுசெய்யுங்கள்” என்று சொல்லியிருந்தான்.
Зрадник же Його дав знак їм, кажучи: Кого я поцїлую, той і єсть він: беріть його.
49 யூதாஸ் இயேசுவுக்குச் சமீபமாக வந்து, “போதகரே வாழ்க!” என்று சொல்லி, அவரை முத்தமிட்டான்.
І, зараз приступивши до Ісуса, каже; Радуй ся, учителю; та й поцілував Його.
50 இயேசு யூதாஸிடம், “நண்பனே, நீ எதற்காக வந்தாயோ, அதைச் செய்!” என்றார். அப்பொழுது அவனுடன் வந்தவர்கள் முன்னேவந்து, இயேசுவைப் பிடித்து அவரைக் கைது செய்தார்கள்.
Ісус же рече йому: Друже, чого прийшов єси? Тодї, приступивши, наложили руки на Ісуса, та й узяли Його.
51 அவ்வேளையில் இயேசுவுடன் இருந்தவர்களில் ஒருவன் தனது வாளை உருவி பிரதான ஆசாரியனின் வேலைக்காரனின் காதை வெட்டினான்.
І ось один з тих, що з Ісусом, простягти руку, вихопив меча свого, й, вдаривши слугу архиєрейського, відтяв йому вухо.
52 இயேசு அவனிடம், “உன் வாளை அதன் உறையிலே போடு, ஏனெனில் வாளை எடுக்கிற அனைவரும் வாளினாலேயே சாவார்கள்.
Тоді рече до него Ісус: Верни меч твій в місце його: всі бо, що візьмуть ся за меч, од меча погинуть.
53 என் பிதாவை நோக்கி, என்னால் கூப்பிட முடியாது என்று நீ நினைக்கிறாயா? நான் கேட்டால் அவர் உடனே எனக்காக பன்னிரண்டுக்கும் அதிகமான தூதர் சேனையை அனுப்புவார் அல்லவா?
Або думаєш, що не міг би нинї вблагати Отця мого, й приставив би мені більш дванайцяти легионів ангелів?
54 ஆனால் நான் அப்படிச் செய்தால், இவ்விதமாக நிகழவேண்டும் என்று சொல்கிற வேதவசனம், எப்படி நிறைவேறும்?” என்றார்.
Як же тоді справдились би писаня, що так мусить статись?
55 அவ்வேளையில் இயேசு அந்தப் பெருங்கூட்டத்தைப் பார்த்து, “நான் ஆபத்தான புரட்சியை உண்டாக்குகிறேனா, அதனாலேயா என்னைப் பிடிப்பதற்கு நீங்கள் வாள்களுடனும் தடிகளுடனும், வந்திருக்கிறீர்கள்? நான் ஒவ்வொரு நாளும் ஆலய முற்றத்தில் உட்கார்ந்து போதித்துக் கொண்டிருந்தேனே; அப்பொழுது நீங்கள் என்னைக் கைதுசெய்யவில்லை.
Тієї ж години рече Ісус до народу: Чи се як на розбійника вийшли ви з мечами та киями, брати мене? Щодня сидів я в вас, навчаючи в церкві, і не брали мене.
56 ஆனால் இறைவாக்கினர் எழுதி வைத்தவை நிறைவேறும்படியே இவையெல்லாம் நிகழ்கின்றன” என்றார். அப்பொழுது சீடர்கள் எல்லோரும் இயேசுவைத் தனியே விட்டுவிட்டு ஓடிப்போனார்கள்.
Се ж усе стало ся, щоб справдились писання пророчі. Тодї всі ученики, покинувши. Його, повтікали.
57 இயேசுவைக் கைது செய்தவர்கள், அவரைப் பிரதான ஆசாரியன் காய்பாவிடம் கூட்டிச்சென்றார்கள். அங்கே மோசேயின் சட்ட ஆசிரியர்களும் யூதரின் தலைவர்களும் கூடியிருந்தார்கள்.
Вони ж, узявши Ісуса, повели Його до Каяфи архиєрея, де письменники та старші зібрались.
58 பேதுரு சிறிது தூரத்தில் இயேசுவைப் பின்தொடர்ந்து போய், பிரதான ஆசாரியனுடைய முற்றம் வரைக்கும் போனான். அவன் உள்ளேப் போய் நடக்கப்போவதை அறியும்படி காவலருடன் உட்கார்ந்திருந்தான்.
Петр же йшов слїдом за Ним оддалеки до двору архиєрейського, і, ввійшовши в двір, сїв із слугами, щоб бачити конець.
59 தலைமை ஆசாரியர்களும், ஆலோசனைச் சங்கத்தில் இருந்த அனைவரும் இயேசுவுக்கு மரண தண்டனை கொடுப்பதற்காக, அவருக்கு எதிரான சாட்சியைத் தேடிக்கொண்டிருந்தார்கள்; ஆனால் அவர்களுக்கு கிடைக்கவில்லை.
Архиєреї ж, і старші, і вся рада шукали кривого сьвідчення на Ісуса, щоб Його вбити.
60 பல பொய் சாட்சிகள் முன்வந்தார்கள். ஆனால், அவர்களுக்கு ஏற்ற சாட்சியம் கிடைக்கவில்லை. கடைசியாக இரண்டு பொய் சாட்சிகள் முன்வந்தார்கள்.
І не знайшли. І коли багато лжесьвідків поприходило, не знайшли. Опісляж, приступивши два лжесьвідки
61 அவர்களோ, “இவன் இறைவனுடைய ஆலயத்தை இடித்துப்போடவும், அதை மூன்று நாட்களில் திரும்பக் கட்டவும் தன்னால் முடியும் என்று சொன்னான்” என்றார்கள்.
говорили: Сей казав: Я можу зруйнувати церкву Божу, й за три дні збудувати її.
62 அப்பொழுது பிரதான ஆசாரியன் எழுந்து நின்று இயேசுவிடம், “பதில் சொல்லமாட்டாயோ? இவர்கள் உனக்கு எதிராய் கொடுக்கிற சாட்சி என்ன?” கேட்டான்.
І, вставши архиєрей, каже до Него: Нїчого не відказуєш, що сї проти Тебе сьвідкують?
63 ஆனால் இயேசுவோ ஒன்றும் பேசாதிருந்தார். பிரதான ஆசாரியன் அவரிடம், “உயிருள்ள இறைவன் பெயரில் ஆணையிட்டுக் கேட்கிறேன்: நீ இறைவனின் மகனான கிறிஸ்து என்றால், அதை எங்களுக்குச் சொல்” என்றான்.
Ісус же мовчав. І, озвавшись архиєрей, каже до Него: Заклинаю Тебе Богом живим, щоб сказав нам, чи Ти єси Христос, Син Божий?
64 இயேசு அதற்குப் பதிலாக, “ஆம், நீர் சொல்கிறபடிதான்; ஆனால் நான் உங்கள் எல்லோருக்கும் சொல்கிறேன்: இதுமுதல் மானிடமகனாகிய நான் வல்லமையுள்ள இறைவனுடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்திருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள்” என்றார்.
Рече йому Ісус: Ти сказав єси. Тільки ж глаголю вам: Від нині побачите Сина чоловічого, по правицї сили, й грядущого на хмарах небесних.
65 அப்பொழுது பிரதான ஆசாரியன் தன்னுடைய உடைகளைக் கிழித்துக்கொண்டு, “இவன் இறைவனை நிந்தித்துப் பேசுகிறான்! இனியும் நமக்குச் சாட்சிகள் வேண்டுமோ? பாருங்கள், இவன் இறைவனை நிந்தித்துப் பேசியதை நீங்கள் இப்பொழுது கேட்டீர்களே.
Тоді архиєрей роздер одежу свого, кажучи: Ось сказав хулу; на що нам, іще сьвідків? Ось тепер чули хулу Його;
66 நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “இவன் சாக வேண்டியவன்” என்றார்கள்.
як вам здаєть ся? Вони ж, озвавшись, сказали: Винен єсть смерти.
67 பின்பு அவர்கள் அவருடைய முகத்தில் துப்பி, அவரைக் குட்டினார்கள். மற்றவர்கள் அவரை முகத்தில் அறைந்து,
Тоді плювали в лице Йому, й били по щоках Його, і знущались із Него,
68 “கிறிஸ்துவே, உம்மை அடித்தது யார் என்று இறைவாக்குச் சொல்லும்” என்றார்கள்.
кажучи: Проречи нам, Христе, хто се вдарив Тебе?
69 பேதுரு வெளியே முற்றத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தான், அப்பொழுது ஒரு வேலைக்காரப் பெண் அவனிடம் வந்து, “நீயும் கலிலேயாவைச் சேர்ந்த இயேசுவுடன் இருந்தாயே” என்றாள்.
Петр же знадвору сидів у дворі, І приступила до него одна дівчина, кажучи: І ти був з Ісусом Галилейським.
70 அதற்கு அவன், “நீ என்ன பேசுகிறாய் என்றே எனக்குத் தெரியாது” என்று சொல்லி எல்லோருக்கும் முன்பாக அவரை மறுதலித்தான்.
Він же відрік ся перед усіма, кажучи: Не знаю, що говориш.
71 பின்பு பேதுரு வெளியே முற்ற வாசலுக்குச் சென்றான்; அங்கே வேறொரு வேலைக்காரி அவனைக் கண்டு, அங்கிருந்த மக்களிடம், “இவன் நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவோடு இருந்தவன்” என்றாள்.
Як же вийшов він до воріт, побачила його друга, та й каже до тих, що там були: І сей був з Ісусом Назарейським.
72 அதற்கு அவன், “அந்த மனிதனை எனக்குத் தெரியாது” என்று சத்தியம் செய்து மீண்டும் மறுதலித்தான்.
І знов одрік ся він, кленучись: Що не знаю чоловіка.
73 சிறிது நேரத்திற்குப் பின்பு அங்கு நின்றவர்கள் பேதுருவிடம் போய், “நிச்சயமாகவே நீ அவர்களில் ஒருவன். நீ பேசும் விதம் உன்னைக் காட்டிக்கொடுக்கிறது” என்றார்கள்.
Трохи ж згодом, приступивши ті, що стояли, кажуть Петрові: Справді й ти єси з них, бо й твоя говірка виявляє тебе.
74 அப்பொழுது பேதுரு, “அந்த மனிதனை எனக்குத் தெரியாது” என்று சபிக்கவும் சத்தியம் பண்ணவும் தொடங்கினான். உடனே சேவல் கூவியது.
Тодї почав він проклинатись та, клястись: Що не знаю чоловіка. І зараз півень запіяв.
75 “சேவல் கூவுவதற்கு முன்னே, நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய்” என்று இயேசு சொன்ன வார்த்தைகளைப் பேதுரு நினைவுகூர்ந்தான். அவன் வெளியே போய் மனங்கசந்து அழுதான்.
І згадав Петр слово Ісуса, промовлене до него: Що перше ніж півень запіе, тричі відречеш ся мене. І, вийшовши геть, плакав гірко.

< மத்தேயு 26 >