< யோவான் 11 >

1 லாசரு என்னும் ஒருவன் வியாதியாயிருந்தான். அவன் பெத்தானியா ஊரைச் சேர்ந்தவன். அவன் அங்கே தனது சகோதரிகளான மரியாளுடனும் மார்த்தாளுடனும் வாழ்ந்து வந்தான்.
Lazaru ak mingnaak thlang pynoet taw tlo hy. Anih taw Meri ingkaw a naa Martha a awmnaak Bethani khaw awhkaw thlang na awm hy.
2 வியாதியாய் இருக்கிற லாசருவின் சகோதரியான இந்த மரியாளே, பின்பு கர்த்தர்மேல் நறுமண தைலத்தை ஊற்றி அவருடைய பாதங்களைத் தன்னுடைய தலைமுடியினால் துடைத்தவள்.
Vawhkaw Meri vetaw ak tlo Lazaru a nanu, bawktui ing Bawipa ce syp nawh a Lusam ing a khaw ak thut peekkung ce ni.
3 லாசருவின் சகோதரிகள், “ஆண்டவரே, நீர் நேசிக்கிறவன் வியாதியாக இருக்கிறான்” என்ற செய்தியை அனுப்பினார்கள்.
Cedawngawh cekqawi cingna ing Jesu ce awi cah hy nih, “Bawipa, nang ing na lungnaak thlang ce tlo hy,” tina hy nih.
4 இயேசு இதைக் கேட்டபோது அவர், “இந்த வியாதி மரணத்தில் முடிவடையாது. இது இறைவனுடைய மகிமைக்காகவும், இதன் மூலமாக மானிடமகனும் மகிமைப்படுவார்” என்றார்.
Ce ak awi ce Jesu ing ang zaak awh, “Vawhkaw tlawhnaak ve thihnaak hly kawi am ni. Ve a tlohnaak ak caming Khawsa Capa taw kyihcahna awm kaw,” tina qawi hy.
5 இயேசு மார்த்தாளிடமும், அவளுடைய சகோதரியிடமும், லாசருவிடமும் அன்பாயிருந்தார்.
Jesu ing Martha cingna ingkaw a napa ce lungna hy.
6 ஆனால் லாசரு வியாதியாயிருக்கிறான் என்று அவர் கேள்விப்பட்டபோது, தாம் இருந்த இடத்தில் இன்னும் இரண்டு நாள் தங்கியிருந்தார்.
Cehlai Lazaru ce tlo hy ti ang zaak awh, ce a hun awh khaw hih voei awmtaak hun hy.
7 பின்பு இயேசு தமது சீடர்களிடம், “மீண்டும் நாம் யூதேயாவுக்குப் போவோம் வாருங்கள்” என்றார்.
Cekcoengawh a hubatkhqi venawh, “Jerusalem na cet tlaih hlah u sih nyng,” tinak khqi hy.
8 ஆனால் அவர்களோ, “போதகரே, சற்று முன்னதாகத் தான் யூதர்கள் உம்மேல் கல்லெறிய முயன்றார்கள். மீண்டும் அங்குப் போகிறீரா?” என்று கேட்டார்கள்.
Cekkhqi ing, “Ikawmyihna cawngpyikung, tihhin ca awh ni Judahkhqi ing lung ing khawng aham ami ni teng ka ti, ceh ham nang cai bai nawh nu?” tina uhy.
9 இயேசு அதற்கு மறுமொழியாக, “பகலுக்குப் பன்னிரண்டு மணிநேரம் இருக்கின்றதல்லவா? பகல் வேளையில் நடக்கிறவன் உலகத்தின் வெளிச்சத்தைக் காண்கிறதால், அவன் இடறிவிழமாட்டான்.
Jesu ing, “Khawnghi hypoet awh khawnoek pahqa hlaihih awm hy ka ti my? Ve khawmdek vang na ce awm nawh khaw a huh thai dawngawh, khawdai awh ak cet thlang taw am bah kaw.
10 அவன் இரவில் நடக்கிறபோது அவனுக்கு வெளிச்சம் இல்லாதபடியால், அவன் இடறிவிழுகிறான்” என்றார்.
Khaw amang dang dawngawh, khawmthan awh ni thlang ang bah hy,” tinak khqi hy.
11 இயேசு அவர்களுக்கு மேலும் சொன்னதாவது: “நம்முடைய சிநேகிதன் லாசரு நித்திரையாயிருக்கிறான்; நான் அங்கேபோய் அவனை எழுப்பப்போகிறேன்” என்றார்.
Ve ak awi ak kqawn boeih coengawh cekkhqi venawh, “Ni pyi Lazaru taw ip hawh hy; cehlai cet nyngsaw thawh tlaih kawng nyng,” tinak khqi hy.
12 சீடர்கள் அதற்கு மறுமொழியாக, “போதகரே, அவன் நித்திரையாயிருந்தால் அவன் சுகமடைவான்” என்றார்கள்.
A hubatkhqi ing, “Bawipa, anih ce a ih awhtaw leek lawt bit kaw,” tina uhy.
13 இயேசு அவனுடைய மரணத்தைக் குறித்துப் பேசினார். அவருடைய சீடர்களோ இயல்பான நித்திரையைக் குறித்தே அவர் சொன்னார் என்று நினைத்தார்கள்.
Jesu ing a thihnaak akawng ni ak kqawn hlai hy, a hubatkhqi ing taw ih mailai ni ak kqawn namih hy, tina poek uhy.
14 அப்பொழுது இயேசு, “லாசரு இறந்துவிட்டான்” என்று வெளிப்படையாக அவர்களுக்குச் சொல்லி,
Cedawngawh cekkhqi venawh ak zoei cana kqawn pek khqi tlaih hy, “Lazaru taw thi hawh hy.
15 “நான் அங்கே இல்லாததைக் குறித்து, உங்கள் நிமித்தம் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் நீங்கள் விசுவாசிப்பதற்கு அது உதவியாயிருக்கும். நாம் அவனிடம் போவோம் வாருங்கள்” என்றார்.
Cawh am ka awm nangmih aham zeel nyng, cawh ni nangmih ing namik cangnaak hly,” tinak khqi hy.
16 அப்பொழுது திதிமு எனப்பட்ட தோமா மற்றச் சீடர்களைப் பார்த்து, “நாமும் சாகும்படி அவருடன் போவோம், வாருங்கள்” என்றான்.
Cawh Thomas ing hubat ak changkhqi venawh, “Anih ing thih haih aham, ningnih awm cet lawt u sih cet uh,” tinak khqi hy.
17 இயேசு வந்து சேர்ந்தபோது, லாசரு கல்லறையில் வைக்கப்பட்டு ஏற்கெனவே நான்கு நாட்களாகிவிட்டன என்று கண்டார்.
Ami pha awhtaw, Lazaru ce phyi khuiawh khaw phlinyn awm hawh hy, tice Jesu ing sim hy.
18 பெத்தானியா எருசலேமில் இருந்து இரண்டு மைல்களுக்கும் குறைவான தூரத்திலேயே இருந்தது.
Bethani khaw taw Jerusalem khaw awhkawng meng hih am hla hy.
19 இறந்துபோன அவர்களுடைய சகோதரனின் நிமித்தம், மார்த்தாளுக்கும் மரியாளுக்கும் ஆறுதல் சொல்வதற்கு அநேக யூதர்கள் அங்கே வந்திருந்தார்கள்.
A napa a thih dawngawh Meri ingkaw Martha ce hloep aham thlang khawzah law uhy.
20 இயேசு வருகிறார் என்று மார்த்தாள் கேள்விப்பட்டபோது, அவரைச் சந்திப்பதற்கு அவள் புறப்பட்டுப் போனாள். ஆனால் மரியாளோ வீட்டிலேயே இருந்துவிட்டாள்.
Jesu law hy tice Martha ing ang zaak awh, ak do na ce cet hy, Meri taw im awh awm hy.
21 மார்த்தாள் இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால், எனது சகோதரன் மரித்திருக்கமாட்டான்.
Martha ing Jesu a venawh, “Bawipa, nang mah na awm mantaw, ka napa am thi voei.
22 இப்பொழுதும்கூட நீர் கேட்பது எதுவோ அதை இறைவன் உமக்குக் கொடுப்பார் என்று நான் அறிந்திருக்கிறேன்” என்றாள்.
Cehlai tuh awm Khawsa avenawh na thoeh a saqui ce ni pe kaw, tice sim nyng,” tina hy.
23 அப்பொழுது இயேசு அவளைப் பார்த்து, “உன்னுடைய சகோதரன் மீண்டும் உயிருடன் எழுந்திருப்பான்” என்றார்.
Jesu ing a venawh, “Na napa ce tho tlaih kaw,” tina hy.
24 அதற்கு மார்த்தாள், “கடைசி நாளில் நடைபெறும் உயிர்த்தெழுதலில் அவன் உயிரோடு எழுந்திருப்பான் என்று எனக்குத் தெரியும்” என்றாள்.
Martha ing, khawnghi dyt nawh thawh tlaihnaak tym a pha awhtaw, tho tlaih kaw, tice sim nyng,” tina hy.
25 அப்பொழுது இயேசு அவளிடம், “உயிரும், உயிர்த்தெழுதலும் நானே. என்னில் விசுவாசமாயிருக்கிறவன், மரித்தாலும் உயிர்வாழ்வான்.
Jesu ing a venawh, “Kai taw thawhtlaihnaak ingkaw hqingnaak na awm nyng. Kai anik cangnaak thlang taw thi seiawm hqing kaw.
26 உயிரோடிருந்து என்னில் விசுவாசிக்கிறவன் எவனும் ஒருநாளும் மரிக்கமாட்டான். நீ இதை விசுவாசிக்கிறாயா?” என்று கேட்டார். (aiōn g165)
U awm hqing nawh kai anik cangnaak taw ityk awm am thi voel kaw. Ve ve nak cangnaak aw?” tina hy. (aiōn g165)
27 அதற்கு அவள், “ஆம் ஆண்டவரே, நீர் இறைவனின் மகன், உலகத்திற்கு வருகிற கிறிஸ்து. நான் இதை விசுவாசிக்கிறேன்” என்றாள்.
Anih ing, “Oeih, Bawipa, nang taw Khrih, khawmdek awh ak law hly kawi Khawsa Capa ni, tice nik cangna nyng,” tina hy.
28 அவள் இதைச் சொன்னபின்பு திரும்பிப்போய். தன்னுடைய சகோதரி மரியாளை இரகசியமாகக் கூட்டிக்கொண்டுபோய், “போதகர் வந்து இருக்கிறார். அவர் உன்னைக் கூப்பிடுகிறார்” என்றாள்.
Ce ak awi ce ak kqawn coengawh, cet nawh a naa Meri ce a venna khy hy. “Cawngpyikung law hawh hy, nang nik thoem hy,” tina hy.
29 மரியாள் இதைக் கேட்டபோது, விரைவாய் எழுந்து அவரிடம் போனாள்.
Meri ing ce ak awi ce ang zaak awh, ang tawnna tho nawh a venna cet hy.
30 இயேசு இன்னும் கிராமத்திற்குள் வராமல், தான் மார்த்தாளைச் சந்தித்த இடத்திலேயே இருந்தார்.
Cawh Jesu ce khawk khuina lut hlan hy, Martha ing ang hqumnaak a hun awh ni a awm hyn hy.
31 வீட்டிலே மரியாளுடன் இருந்து அவளுக்கு ஆறுதல் கூறிய யூதர்கள், அவள் விரைவாய் எழுந்து புறப்பட்டுப் போகிறதைக் கண்டபோது, அவர்களும் அவள் பின்னே சென்றார்கள். அவள் அழுவதற்காக கல்லறைக்குப் போகிறாள் என்றே அவர்கள் நினைத்தார்கள்.
Im awh Meri amik hloep Judakhqi ing, tho hqoet nawh a ceh ce ami huh awh hquut uhy, phyi na ak kqah na cet vang, tina mih hy tina poek uhy.
32 இயேசு இருந்த இடத்திற்கு மரியாள் போய்ச் சேர்ந்தபோது, அவள் அவரைக்கண்டு, அவருடைய பாதத்தில் விழுந்து, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால், என்னுடைய சகோதரன் மரித்திருக்கமாட்டான்” என்றாள்.
Meri ing Jesu a awmnaak hun ce pha nawh anih ce a huh awh, a khawkung awh koep nawh, “Bawipa, nang na awm mantaw ka napa amak thi hly,” tina hy.
33 அவள் அழுவதையும், அவளுடன் வந்திருந்த யூதர்கள் அழுவதையும் இயேசு கண்டபோது, அவர் ஆவியில் கலங்கி, துயரமடைந்து,
Anih ang kqang ingkaw anih mi amik law haih Judahkhqi ang kqang ce a huh awh, ak khuina kqang nawh kawsee hy.
34 “அவனை எங்கே வைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஆண்டவரே வாரும், வந்துபாரும்” என்றார்கள்.
“Hana nami soei?” tinak khqi hy. Cekkhqi ing, “Bawipa, law nawhtaw toek lah,” tina uhy.
35 இயேசு கண்ணீர்விட்டார்.
Jesu kqang hy.
36 அதைக்கண்ட யூதர்கள், “பாருங்கள், இவர் லாசருமீது எவ்வளவு அன்பாயிருந்தார்!” என்றார்கள்.
Judahkhqi ing, “Toek lah uh, i ikawmyih aih na nu a lungnaak ce!” ti uhy.
37 ஆனால் அவர்களில் சிலரோ, “பார்வையற்றவனுடைய கண்களைத் திறந்த இவர், அவனைச் சாகாமல் காத்திருக்கலாமே?” என்றார்கள்.
Cehlai thlang vang ing, “Mikhyp ak qoei sakkung ve ak thlang ing anih ve ama thihnaak aham am sai hly thai nawh hy voei nu?” ti uhy.
38 இயேசு மீண்டும் துயரமுடையவராய் கல்லறைக்கு வந்தார். அது ஒரு குகையாய் இருந்தது. அதன் வாசலிலே ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது.
Jesu taw ak kawkhuiawh ak kawseet doena phyi ce pha hy. Ce a phyi taw luk kawk na awm nawh lungpei ing tleng uhy.
39 இயேசு அங்கு நின்றவர்களைப் பார்த்து, “அந்தக் கல்லை அகற்றுங்கள்” என்றார். அப்பொழுது இறந்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள், “ஆண்டவரே, இப்பொழுது அது நாற்றம் வீசுமே. அங்கே, அவனை வைத்து நான்கு நாட்கள் ஆயிற்றே” என்றாள்.
“Lungpei ce thoeng uh, tinak khqi hy. Cehlai thlak thi a nanu Martha ing, “Bawipa, tuhtaw a baw khqim hawh hy voei, phlinyn di hawh nawh,” tina hy.
40 அப்பொழுது இயேசு, “நீ விசுவாசித்தால், இறைவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா?” என்று கேட்டார்.
Jesu ing, “Nak cangnaak awhtaw Khawsa a boeimangnaak hu kawp tinawh am ka ti nawh aw?” tina hy.
41 எனவே அவர்கள் அந்தக் கல்லை அகற்றினார்கள். இயேசு அண்ணார்ந்து பார்த்து, “பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்துக் கேட்டபடியால் உமக்கு நன்றி செலுத்துகிறேன்.
Cedawngawh lungpei ce thoeng pe uhy. Cawh Jesu ing hak toek nawh, “Ka Pa, kak awi ning ngaih pe tik saw zeel nyng.
42 நீர் எப்பொழுதும் எனக்கு செவிகொடுக்கிறீர் என்பதை நான் அறிவேன். ஆனால் இங்கு நிற்கிற மக்கள் நீரே என்னை அனுப்பினீர் என்று விசுவாசிக்கும்படி இதைச் சொன்னேன்” என்றார்.
Kak awi ning ngai pe poepa hyk ti tice sim nyng. Nang ing kai ni tyi hyk ti tice vawhkaw ak dyi thlangkhqi ing amik cangnaak thai aham ve ak awi ve kqawn nyng,” tina hy.
43 இயேசு இதைச் சொன்னபின்பு, அவனை உரத்த குரலில், “லாசருவே, வெளியே வா!” என்று கூப்பிட்டார்.
Ve ak awi ak kqawn boet coengawh, Jesu ing khawteh na, “Lazaru cawn law hlah,” tina hy.
44 மரித்துபோனவன் வெளியே வந்தான். அவனுடைய கைகளும் கால்களும் மென்பட்டு துணிகளால் சுற்றப்பட்டிருந்தன. அவனுடைய முகத்தைச் சுற்றியும் ஒரு துணி கட்டப்பட்டிருந்தது. இயேசு அவர்களைப் பார்த்து, “பிரேதத் துணிகளை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்” என்றார்.
Cawh thlak thi taw a kut a khaw hi ing a zeen doena cawn law nawh, a haai awm hi ing a zeen khoep na awm saw, Jesu ing, “Hi ce hlam pe unawh ceh sak uh,” tinak khqi hy.
45 மரியாளைச் சந்திக்க வந்திருந்த பல யூதர்கள் இயேசு செய்ததைக் கண்டு அவரில் விசுவாசம் வைத்தார்கள்.
Meri ak hqip law Juda thlang khawzah ing, Jesu a them sai ce ami huh awh, ak khanawh cangnaak ce ta uhy.
46 ஆனால் அவர்களில் சிலர் பரிசேயரிடத்தில் போய், இயேசு செய்ததைக் குறித்துச் சொன்னார்கள்.
Cehlai thlang vang tloek ce Farasikhqi venna cet unawh Jesu ing them a sai ce kqawn pe uhy.
47 அப்பொழுது தலைமை ஆசாரியர்களும் பரிசேயரும் ஆலோசனைச் சங்கத்தைக் கூட்டினார்கள். அவர்கள், “நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்? இதோ இவன் பல அடையாளங்களைச் செய்கிறானே.
Cawh khawsoeih boeikhqi ingkaw Farasikhqi ing Sanhedrin ngawihcunnaak ce sai uhy. “Ikaw ni sai lah voei uh? Ve ak thlang ing kawpoek kyi ik-oeih khawzah sai hawh hy.
48 நாம் இப்படியே இவனைப் போகவிட்டால், எல்லோரும் இவனில் விசுவாசம் வைப்பார்கள். அப்பொழுது ரோமர்கள் வந்து நமது ஆலயத்தையும், நமது ஜனத்தையும் அழித்துப்போடுவார்களே” என்றார்கள்.
Vemyihna ni hlah mantaw, thlang boeih ing cangna hawh kawm uh, cawh Rom thlangkhqi law kawm usaw ni tui ni khaw ve lo law hawh kawm uh,” ti uhy.
49 அப்பொழுது அந்த வருடத்துப் பிரதான ஆசாரியனான காய்பா எனப்பட்ட ஒருவன் அவர்களிடம், “நீங்கள் எதுவுமே தெரியாதவர்களாய் இருக்கிறீர்களே.
Cawh, a mingmih anglakawh Kaiapha ak mingnaak thlang pynoet, ce a kum awh khawsoeih boei khyt na ak awm ing, “Ikaw awm am sim uhyk ti!
50 மக்கள் அழிவதைப் பார்க்கிலும், மக்களுக்காக ஒருவன் சாவது நல்லது என்று நீங்கள் புரிந்துகொள்ளாமல் இருக்கிறீர்கள்” என்றான்.
Rampum thlang a plawci naak anglakawhtaw thlang pynoet a thih nep bet hy tice am sim uhyk ti,” tinak khqi hy.
51 இதை அவன் தன்னுடைய சுயமாகச் சிந்தித்துச் சொல்லவில்லை. அந்த வருடத்துப் பிரதான ஆசாரியன் என்ற வகையில் யூத மக்களுக்காக இயேசு மரிக்கப்போகிறார் என்று இறைவாக்காகவே இதைச் சொன்னான்.
Ve ak awi ve amah poek awh ap kqawn hy, ce a kum awh khawsoeih boei khyt na a awm amyihna Juda thlangkhqi ham Jesu thi kaw tice lamnaa na ak kqawn hawh ni,
52 இஸ்ரயேல் மக்களுக்காக மாத்திரமல்ல, சிதறி இருக்கும் இறைவனுடைய பிள்ளைகளை ஒன்றுச் சேர்க்கும்படியும் மரிக்கப்போகிறார் என்பதை அவன் சொன்னான்.
ce a qam doeng ham am nawh ak plam Khawsa cakhqi ce cawi boeih nawh pynoet na a taaknaak ahamni.
53 எனவே அன்றிலிருந்து அவர்கள் அவரைக் கொலைசெய்வதற்குச் சூழ்ச்சி செய்தார்கள்.
Cedawngawh ce a nyn awhkawng him aham teng hawh uhy.
54 ஆகவே இயேசு தொடர்ந்து யூதர்கள் மத்தியிலே வெளிப்படையாக நடமாடவில்லை. அவர் பாலைவனத்தின் அருகே உள்ள பகுதிக்குப் போய், அங்கே எப்பிராயீம் எனப்பட்ட ஒரு கிராமத்தில் தம்முடைய சீடர்களுடனே தங்கினார்.
Cedawngawh Jesu taw Juda thlang kqeng anglakawh ang dang qoeng na am cet voel hy. Qamkoh a venawh kaw ak awm Ephraim khaw a venawh cet nawh, cawh ce a hubatkhqi mi awm uhy.
55 யூதர்களுடைய பஸ்கா என்ற பண்டிகைக் காலம் நெருங்கி வந்தது. அப்பொழுது பஸ்கா என்ற பண்டிகைக்கு முன்னதாகவே தங்களுடைய சுத்திகரிப்பைச் செய்துகொள்ளும்படி, அநேகர் நாட்டுப் புறத்திலிருந்து எருசலேமுக்குச் சென்றார்கள்.
Judahkhqi a Loentak Poei a pha tawm awhtaw cehtaak Poei hlanawh silh qu aham thlang khawzah ing khaw a qam awhkawng Jerusalem na ce cet uhy.
56 அவர்கள் இயேசுவைப் பார்க்க விரும்பித்தேடினார்கள். அவர்கள் ஆலயப் பகுதியில் நின்றுகொண்டு ஒருவரையொருவர் பார்த்து, “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இந்தப் பண்டிகைக்கு அவர் வருவாரா?” என்று கேட்டார்கள்.
Cawh Jesu ce sui unawh, bawkim khuiawh dyih unawh doet qu uhy, “Ikawmyihna nak poek? Poei awh am law hly nawh nu?” ti uhy.
57 ஆனால் தலைமை ஆசாரியர்களும் பரிசேயர்களும் யாராவது இயேசு இருக்கும் இடத்தை அறிந்தால், அவரைக் கைதுசெய்யும்படி அதைத் தங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்கள்.
Cehlai khawsoeih boeikhqi ingkaw Farasikhqi ing, u ingawm Jesu ce a huh awhtaw, a mingmih a venawh kqawn pe nawh, tu aham awi pe hyt uhy.

< யோவான் 11 >