< Псалтирь 135 >

1 Хвалите имя Господне, хвалите, раби Господа,
அல்லேலூயா, யெகோவாவுடைய பெயரைத் துதியுங்கள்; யெகோவாவின் ஊழியக்காரர்களே, துதியுங்கள்.
2 стоящии во храме Господни, во дворех дому Бога нашего.
யெகோவாவுடைய வீட்டிலும், நமது தேவனுடைய ஆலயமுற்றங்களிலும் நிற்கிறவர்களே, யெகோவாவை துதியுங்கள்.
3 Хвалите Господа, яко благ Господь: пойте имени Его, яко добро:
யெகோவா நல்லவர்; அவருடைய பெயரைப் புகழ்ந்து பாடுங்கள்; அது இன்பமானது.
4 яко Иакова избра Себе Господь, Израиля в достояние Себе:
யெகோவா யாக்கோபைத் தமக்காகவும், இஸ்ரவேலைத் தமக்குச் சொந்தமாகவும் தெரிந்துகொண்டார்.
5 яко аз познах, яко велий Господь, и Господь наш над всеми боги:
யெகோவா பெரியவர் என்றும், நம்முடைய ஆண்டவர் எல்லா தெய்வங்களுக்கும் மேலானவர் என்றும் நான் அறிவேன்.
6 вся, елика восхоте Господь, сотвори на небеси и на земли, в морях и во всех безднах.
வானத்திலும் பூமியிலும், கடல்களிலும், எல்லா ஆழங்களிலும், யெகோவா தமக்கு விருப்பமானதையெல்லாம் செய்கிறார்.
7 Возводя облаки от последних земли, молнии в дождь сотвори, изводяй ветры от сокровищ Своих.
அவர் பூமியின் கடைசியிலிருந்து மேகங்களை எழும்பச்செய்து, மழையுடன் மின்னலையும் உண்டாக்கி, காற்றைத் தமது சேமிப்புக்கிடங்கிலிருந்து புறப்படச்செய்கிறார்.
8 Иже порази первенцы Египетския от человека до скота:
அவர் எகிப்திலே மனிதருடைய தலைப்பிள்ளைகளையும் மிருகத்தின் தலையீற்றுகளையும் அடித்தார்.
9 посла знамения и чудеса посреде тебе, Египте, на фараона и на вся рабы его.
எகிப்துதேசமே, உன் நடுவில் பார்வோன்மேலும் அவனுடைய எல்லா ஊழியக்காரர்கள் மேலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் அனுப்பினார்.
10 Иже порази языки многи и изби цари крепки:
௧0அவர் அநேகம் தேசங்களை அடித்து, வலிமைமிக்க ராஜாக்களைக் கொன்று;
11 Сиона царя Аморрейска и Ога царя Васанска, и вся царствия Ханаанска:
௧௧எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனையும், பாசானின் ராஜாவாகிய ஓகையும், கானானின் எல்லா ராஜ்ஜியங்களையும் அழித்து,
12 и даде землю их достояние, достояние Израилю людем Своим.
௧௨அவர்கள் தேசத்தைத் தம்முடைய மக்களுமாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தார்.
13 Господи, имя Твое в век, и память Твоя в род и род:
௧௩யெகோவாவே, உம்முடைய பெயர் என்றைக்குமுள்ளது; யெகோவாவே, உம்முடைய புகழ் தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும்.
14 яко судити имать Господь людем Своим, и о рабех Своих умолится.
௧௪யெகோவா தம்முடைய மக்களின் நியாயத்தை விசாரித்து, தம்முடைய ஊழியக்காரர்கள்மேல் பரிதாபப்படுவார்.
15 Идоли язык сребро и злато, дела рук человеческих:
௧௫அஞ்ஞானிகளுடைய சிலைகள் வெள்ளியும் பொன்னும், மனிதர்களுடைய கைவேலையுமாக இருக்கிறது.
16 уста имут, и не возглаголют: очи имут, и не узрят:
௧௬அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது, அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
17 уши имут, и не услышат: ниже бо есть дух во устех их.
௧௭அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது, அவைகளுடைய வாயிலே சுவாசமுமில்லை.
18 Подобни им да будут творящии я и вси надеющиися на ня.
௧௮அவைகளைச் செய்கிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் அனைவரும், அவைகளைப்போல் இருக்கிறார்கள்.
19 Доме Израилев, благословите Господа: доме Ааронь, благословите Господа: доме Левиин, благословите Господа:
௧௯இஸ்ரவேல் குடும்பத்தாரே, யெகோவாவுக்கு நன்றிசொல்லுங்கள்; ஆரோன் குடும்பத்தாரே, யெகோவாவுக்கு நன்றிசொல்லுங்கள்.
20 боящиися Господа, благословите Господа.
௨0லேவி குடும்பத்தாரே, யெகோவாவுக்கு நன்றிசொல்லுங்கள்; யெகோவாவுக்குப் பயந்தவர்களே, யெகோவாவுக்கு நன்றிசொல்லுங்கள்.
21 Благословен Господь от Сиона, живый во Иерусалиме.
௨௧எருசலேமில் குடியிருக்கிற யெகோவாவுக்கு சீயோனிலிருந்து நன்றிஉண்டாகட்டும். அல்லேலூயா.

< Псалтирь 135 >