< Книга Иисуса Навина 9 >

1 Егда же услышаша вси царие Аморрейстии, иже об ону страну Иордана, иже в горней и иже в равней, и иже во всем примории моря великаго и иже при Антиливане, и Хеттеи и Аморреи, и Гергесеи и Хананеи, и Ферезеи и Евеи и Иевусеи,
யோர்தான் நதிக்கு மேற்கு திசையிலுள்ள மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் லீபனோனுக்கு எதிரான மத்திய தரை சமுத்திரத்தின் கரையோரமெங்குமுள்ள ஏத்தியர்களும், எமோரியர்களும், கானானியர்களும், பெரிசியர்களும், ஏவியர்களும், எபூசியர்களும் அவர்களுடைய எல்லா ராஜாக்களும் அதைக் கேள்விப்பட்டபோது,
2 снидошася вкупе сещися со Иисусом и со Израилем единомысленно.
அவர்கள் ஒருமனப்பட்டு, யோசுவாவோடும் இஸ்ரவேலர்களோடும் யுத்தம்செய்ய ஒன்றாகக் கூடினார்கள்.
3 И живущии в холме в Гаваоне слышаша вся, елика сотвори Господь Иерихону и Гаю,
எரிகோவுக்கும் ஆயீக்கும் யோசுவா செய்ததைக் கிபியோனின் குடிகள் கேள்விப்பட்டபோது,
4 и сотвориша и сии с лукавством, и шедше уготоваша брашна и уготовашася: и вземше вретища ветха на ослы своя, и мехи вина ветхи и разседшыяся завязаны:
ஒரு தந்திரமான யோசனைசெய்து, தங்களைப் தேச பிரதிநிதிகளைப் போலக்காண்பித்து, பழைய சாக்குப் பைகளையும், பீறலும் பொத்தலுமான பழைய திராட்சைரசத் தோல்பைகளையும் தங்களுடைய கழுதைகள்மேல் வைத்து,
5 и сапоги ветхи и заплачены на ногу их, и ризы обветшаны на них, и хлебы брашна их беша пресохли и сплеснели и сдроблени.
பழுதுபார்க்கப்பட்ட பழைய காலணிகளைத் தங்களுடைய கால்களில் அணிந்து, பழைய உடைகளை உடுத்திக்கொண்டார்கள்; வழிக்கு அவர்கள் கொண்டுபோன அப்பங்களெல்லாம் உலர்ந்ததும் பூசணம் பூத்ததுமாக இருந்தது.
6 И приидоша ко Иисусу в полк Израилев в Галгалы, и рекоша ко Иисусу и всему Израилю: от земли дальния приидохом, и ныне завещайте нам завет.
அவர்கள் கில்காலில் இருக்கிற கூடாரத்திற்கு யோசுவாவிடம் போய், அவனையும் இஸ்ரவேல் மனிதர்களையும் நோக்கி: நாங்கள் தூரதேசத்திலிருந்து வந்தவர்கள், எங்களோடு உடன்படிக்கைசெய்யுங்கள் என்றார்கள்.
7 И рекоша сынове Израилевы к Хоррею: виждь, не посреде ли нас живеши, и како тебе завещаю завет?
அப்பொழுது இஸ்ரவேல் மனிதர்கள் அந்த ஏவியர்களை நோக்கி: நீங்கள் எங்கள் நடுவிலே குடியிருக்கிறவர்கள்; நாங்கள் எப்படி உங்களுடன் உடன்படிக்கை செய்யமுடியும் என்றார்கள்.
8 И рекоша ко Иисусу: раби есмы твои. И рече к ним Иисус: откуду есте? И откуду приидосте?
அவர்கள் யோசுவாவை நோக்கி: நாங்கள் உமக்கு அடிமைகள் என்றார்கள்; அதற்கு யோசுவா: நீங்கள் யார், எங்கேயிருந்து வந்தீர்கள் என்று கேட்டான்.
9 И рекоша к нему: от дальния земли зело приидохом раби твои во имя Господа Бога твоего: слышахом бо имя Его и вся, елика сотвори во Египте,
அதற்கு அவர்கள்: உம்முடைய தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தைக் கேள்விப்பட்டு, உமது அடியார்களாகிய நாங்கள் வெகு தூரதேசத்திலிருந்து வந்தோம்; அவருடைய புகழ்ச்சியையும், அவர் எகிப்திலே செய்த எல்லாவற்றையும்,
10 и вся, елика сотвори двоим царем Аморрейским, иже быша об ону страну Иордана, Сиону царю Есевонску и Огу царю Васанску, иже живяше во Астарофе и во Едраине.
௧0அவர் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனும் அஸ்தரோத்திலிருந்த பாசானின் ராஜாவாகிய ஓகும் என்கிற யோர்தானுக்கு மறுபுறத்திலிருந்த எமோரியர்களின் இரண்டு ராஜாக்களுக்கும் செய்த எல்லாவற்றையும் கேள்விப்பட்டோம்.
11 И слышавше рекоша к нам старцы наши и вси живущии на земли нашей, глаголюще: возмите себе брашно на путь и идите противу им, и рцыте к ним: раби есмы ваши, и ныне завещайте нам завет:
௧௧ஆகவே, எங்கள் மூப்பர்களும் எங்கள் தேசத்தின் குடிகளெல்லோரும் எங்களை நோக்கி: உங்களுடைய கைகளில் வழிக்கு ஆகாரம் எடுத்துக்கொண்டு, அவர்களுக்கு எதிர்கொண்டுபோய், அவர்களிடம்: நாங்கள் உங்களுடைய அடியார்கள், எங்களோடு உடன்படிக்கை செய்யவேண்டும் என்று சொல்லச்சொன்னார்கள்.
12 сии хлебы наши, теплыя на путь взяхом их от домов наших, в оньже день изыдохом приити к вам: ныне же пресхоша и быша содроблени:
௧௨உங்களிடம் வர நாங்கள் புறப்படுகிற அன்றே, எங்களுடைய வழிப்பிரயாணத்திற்கு இந்த அப்பத்தைச் சுடச்சுட எங்கள் வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டு வந்தோம்; இப்பொழுது, இதோ, உலர்ந்து பூசணம் பூத்திருக்கிறது.
13 и сии меси вина, ихже налияхом новы, и сии разседошася: и ризы нашя сия и обувища наша обетшаша от долгаго пути зело.
௧௩நாங்கள் இந்தத் திராட்சைரசத் தோல்பைகளை நிரப்பும்போது புதிதாக இருந்தது; ஆனாலும், இதோ, கிழிந்துபோனது; எங்கள் உடைகளும், காலணிகளும் நெடுந்தூர பிரயாணத்தினாலே பழையதாகப்போனது என்றார்கள்.
14 И взяша князи брашно их, а Господа не вопросиша.
௧௪அப்பொழுது இஸ்ரவேலர்கள்: யெகோவாவுடைய வார்த்தையைக் கேட்காமல் அவர்களுடைய உணவுப்பதார்த்தங்களிலே சிறிது வாங்கிக்கொண்டார்கள்.
15 И сотвори Иисус с ними мир, и устави к ним завет, еже снабдети их: и кляшася им князи сонма.
௧௫யோசுவா அவர்களோடு சமாதானம்செய்து, அவர்களை உயிரோடு காப்பாற்றும் உடன்படிக்கையை அவர்களோடு செய்தான்; அதற்காக சபையின் பிரபுக்கள் அவர்களுக்கு வாக்குக்கொடுத்தார்கள்.
16 И бысть по триех днех по завещании к ним завета, услышаша, яко близ их суть и яко посреде их живут.
௧௬அவர்களோடு உடன்படிக்கைசெய்து, மூன்று நாட்கள் சென்றபின்பு, அவர்கள் தங்களுடைய அயலகத்தார்கள் என்றும் தங்கள் நடுவில் குடியிருக்கிறவர்கள் என்றும் கேள்விப்பட்டார்கள்.
17 И восташа сынове Израилевы и внидоша во грады их в третий день: гради же их (бяху) Гаваон и Кефира, и Вирот и град Иарим.
௧௭இஸ்ரவேல் மக்கள் பிரயாணம்செய்யும்போது, மூன்றாம் நாளில் அவர்கள் பட்டணங்களுக்கு வந்தார்கள்; அந்தப் பட்டணங்கள் கிபியோன், கெபிரா, பேரோத், கீரியாத்யெயாரீம் என்பவைகள்.
18 И не сотвориша с ними рати (Иисус и) сынове Израилевы, яко кляшася им вси князи сонма Господем Богом Израилевым. И ропташа весь сонм Израилев на князей.
௧௮சபையின் பிரபுக்கள் அவர்களுக்கு இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தில் ஆணையிட்டிருந்தபடியால், இஸ்ரவேல் மக்கள் அவர்களைத் தாக்கவில்லை; ஆனாலும் சபையார்கள் எல்லோரும் பிரபுக்களுக்கு எதிராக முறுமுறுத்தார்கள்.
19 И рекоша вси князи всему сонму: мы кляхомся им Господем Богом Израилевым, и ныне не возможем коснутися их:
௧௯அப்பொழுது எல்லா பிரபுக்களும், சபையார்கள் அனைவரையும் நோக்கி: நாங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தில் அவர்களுக்கு வாக்குக்கொடுத்தோம்; ஆகவே அவர்களை நாம் தொடக்கூடாது.
20 сие сотворим им, еже живити их, и снабдим их, и не будет на нас гнева клятвы ради, еюже кляхомся им.
௨0கடுங்கோபம் நம்மேல் வராதபடிக்கு, நாம் அவர்களுக்குக் கொடுத்த வாக்கின்படி நாம் அவர்களை உயிரோடு வைத்து, அவர்களுக்கு ஒன்று செய்வோம்.
21 И рекоша им князи: да живут сии, и будут древосечцы и водоносцы всему сонму. И сотвори весь сонм, якоже рекоша им князи.
௨௧பிரபுக்களாகிய நாங்கள் அவர்களுக்குச் சொன்னபடி அவர்கள் உயிரோடிருந்து, சபையார்கள் எல்லோருக்கும் விறகு வெட்டுகிறவர்களாகவும், தண்ணீர் எடுக்கிறவர்களாகவும் இருங்கள் என்று பிரபுக்கள் அவர்களிடம் சொன்னார்கள்.
22 И созва их Иисус и рече им, глаголя: почто прельстисте мя, глаголюще: далече есмы от тебе зело? Вы же населницы есте от живущих в нас:
௨௨பின்பு யோசுவா அவர்களை அழைத்து: நீங்கள் எங்கள் நடுவில் குடியிருக்கும்போது: நாங்கள் உங்களுக்கு வெகுதூரமாக இருக்கிறவர்கள் என்று சொல்லி, எங்களை ஏமாற்றியது ஏன்?
23 и ныне прокляти есте: и не оскудеет от вас раб, ниже древосечец, ниже водоносец мне и Богу моему.
௨௩இப்பொழுதும் நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; என் தேவனுடைய ஆலயத்திற்கு விறகு வெட்டுகிறவர்களும், தண்ணீர் எடுக்கிறவர்களுமான வேலைக்காரர்களாக இருப்பீர்கள்; இந்த வேலை உங்களைவிட்டு நீங்காது என்றான்.
24 И отвещаша Иисусу, глаголюще: понеже возвестися нам (рабом твоим), елика заповеда Господь Бог твой Моисею рабу Своему, дати вам землю сию и потребити нас и вся живущыя на ней от лица вашего, сего ради убояхомся зело от душах наших от лица вашего, и сотворихом дело сие:
௨௪அவர்கள் யோசுவாவுக்கு மறுமொழியாக: தேசத்தையெல்லாம் உங்களுக்கு ஒப்புக்கொடுக்கவும், தேசத்தின் குடிகளையெல்லாம் உங்களுக்கு முன்பாக அழிக்கவும் உம்முடைய தேவனாகிய யெகோவா தமது ஊழியக்காரனாகிய மோசேக்குக் கட்டளையிட்டது உமது அடியார்களுக்கு நிச்சயமாகவே அறிவிக்கப்பட்டதினால், நாங்கள் எங்களுடைய ஜீவனுக்காக உங்களுக்கு மிகவும் பயந்து, இந்தக் காரியத்தைச் செய்தோம்.
25 и ныне, се, мы подручни вам, якоже угодно есть вам, и якоже вам мнится, творите нам.
௨௫இப்போதும், இதோ, உமது கைகளில் இருக்கிறோம், உம்முடைய பார்வைக்கு நன்மையும் நியாயமுமாகத் தோன்றுகிறபடி எங்களுக்குச் செய்யும் என்றார்கள்.
26 И сотвориша им сице: и избави я Иисус в той день от руку сынов Израилевых, и не убиша их.
௨௬அப்படியே யோசுவா அவர்களுக்குச் செய்து, இஸ்ரவேல் மக்கள் அவர்களைக் கொன்றுபோடாதபடி, அவர்களை இவர்கள் கைகளிலிருந்து தப்புவித்தான்.
27 И постави я Иисус в той день древосечцы и водоносцы всему сонму и олтарю Божию. Сего ради быша живущии в Гаваоне древосечцы и водоносцы олтарю Божию, даже до днешняго дне, и на месте еже аще изберет Господь.
௨௭இந்தநாள்வரை இருக்கிறபடியே, அந்தநாளில் அவர்களைச் சபைக்கும், யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்திலிருக்கும் அவருடைய பலிபீடத்திற்கும் விறகு வெட்டுகிறவர்களாகவும், தண்ணீர் எடுக்கிறவர்களாகவும் வைத்தான்.

< Книга Иисуса Навина 9 >