< Книга пророка Исаии 39 >

1 В то время посла Меродах Валадан сын Валаданов, царь Вавилонский, писания и послы и дары Езекии: слыша бо, яко болел есть до смерти и воста.
அக்காலத்திலே பலாதானின் மகனாகிய மெரோதாக்பலாதான் என்னும் பாபிலோனின் ராஜா, எசேக்கியா வியாதிப்பட்டிருந்து ஆரோக்கியமானதைக் கேள்விப்பட்டு, அவனிடத்திற்கு கடிதங்களையும் வெகுமானத்தையும் அனுப்பினான்.
2 И обрадовася о них Езекиа радостию великою, и показа им дом ароматов и мира, и стакти и фимиама, и сребра и злата, и вся домы сосудов сокровищных, и вся елика бяху во сокровищих его: и не оста ничтоже, егоже не показа им Езекиа в дому своем и во всей области своей.
எசேக்கியா அவர்களைக் கண்டு சந்தோஷப்பட்டு, தன் பொக்கிஷசாலையையும், வெள்ளியையும், பொன்னையும், கந்தவர்க்கங்களையும், நல்ல பரிமள தைலத்தையும், தன் ஆயுதசாலை அனைத்தையும், தன் பொக்கிஷசாலைகளில் உள்ளதெல்லாவற்றையும் அவர்களுக்குக் காண்பித்தான்; எசேக்கியா தன் அரண்மனையிலும், தன் ராஜ்யத்தில் எங்கும் அவர்களுக்குக் காண்பிக்காத பொருள் ஒன்றும் இல்லை.
3 И прииде Исаиа пророк ко Езекии царю и рече к нему: что глаголют сии мужие, и откуду приидоша к тебе? И рече Езекиа: от земли далекия приидоша ко мне, от Вавилона.
அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசி எசேக்கியா ராஜாவினிடத்தில் வந்து: அந்த மனிதர்கள் என்ன சொன்னார்கள் எங்கேயிருந்து உம்மிடத்தில் வந்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: பாபிலோன் என்னும் தூரதேசத்திலிருந்து என்னிடத்திற்கு வந்தார்கள் என்றான்.
4 И рече Исаиа: что видеша в дому твоем? И рече Езекиа: вся, елика в дому моем, видеша, и несть в дому моем, егоже бы не видели, но и яже в сокровищих моих.
அப்பொழுது அவன்: உம்முடைய வீட்டில் எவைகளைப் பார்த்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: என் வீட்டிலுள்ள எல்லாவற்றையும் பார்த்தார்கள்; என் பொக்கிஷங்களில் நான் அவர்களுக்குக் காண்பிக்காத பொருள் ஒன்றும் இல்லை என்றான்.
5 И рече ему Исаиа: послушай словесе Господа Саваофа:
அப்பொழுது ஏசாயா எசேக்கியாவை நோக்கி: சேனைகளுடைய யெகோவாவின் வார்த்தையைக் கேளும்.
6 се, дние грядут, глаголет Господь, и возмут вся, яже в дому твоем, и елика собраша отцы твои даже до дне сего, в Вавилон прейдут, и ничесоже оставят:
இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது உன் வீட்டில் உள்ளதிலும், உன் முன்னோர்கள் இந்நாள் வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாக வைக்கப்படாமல் அனைத்தும் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும்.
7 рече Господь, яко и от чад твоих, ихже родил еси, поймут и сотворят каженики в дому царя Вавилонска.
நீ பெறப்போகிற உன் சந்ததியாகிய உன் மகன்களிலும் சிலர் பாபிலோன் ராஜாவின் அரண்மனையிலே அரண்மனை வேலைக்காரராயிருப்பார்கள் என்று யெகோவா சொல்கிறார் என்றான்.
8 И рече Езекиа ко Исаии: благо слово Господне, еже глагола: да будет ныне мир и правда бо дни моя.
அப்பொழுது எசேக்கியா ஏசாயாவை நோக்கி: நீர் சொன்ன யெகோவாவுடைய வார்த்தை நல்லதுதான் என்று சொல்லி, என் நாட்களிலாவது சமாதானமும் உண்மையும் இருக்குமே என்றான்.

< Книга пророка Исаии 39 >