< 2-я Паралипоменон 23 >

1 Но в седьмой год ободрился Иодай и принял в союз с собою начальников сотен: Азарию, сына Иерохамова, и Исмаила, сына Иегохананова, и Азарию, сына Оведова, и Маасею, сына Адаии, и Елишафата, сына Зихри.
ஏழாம் வருடத்திலே யோய்தா திடன்கொண்டு, நூறுபேருக்கு அதிபதிகளாகிய எரோகாமின் மகன் அசரியாவையும், யோகனானின் மகன் இஸ்மவேலையும், ஓபேதின் மகன் அசரியாவையும், அதாயாவின் மகன் மாசெயாவையும், சிக்ரியின் மகன் எலிஷாபாத்தையும் தன் உடன்படிக்கைக்கு உட்படுத்தினான்.
2 И они прошли по Иудее и собрали левитов из всех городов Иудеи и глав поколений Израилевых, и пришли в Иерусалим.
அவர்கள் யூதாவிலே சுற்றித்திரிந்து, யூதாவின் பட்டணங்களிலெல்லாம் இருக்கிற லேவியர்களையும், இஸ்ரவேலுடைய முன்னோர்களின் வம்சத்தலைவர்களையும் கூட்டிக்கொண்டு எருசலேமுக்கு வந்தார்கள்.
3 И заключило все собрание союз в доме Божием с царем. И сказал им Иодай: вот сын царя должен быть царем, как изрек Господь о сыновьях Давидовых.
அந்த சபையார் எல்லோரும் தேவனுடைய ஆலயத்தில் ராஜாவோடு உடன்படிக்கை செய்தார்கள்; யோய்தா அவர்களை நோக்கி: இதோ, யெகோவா தாவீதின் மகன்களைக்குறித்து சொன்னபடியே ராஜாவின் மகன் ராஜாவாக வேண்டும்.
4 Вот что вы сделайте: треть вас, приходящих в субботу, из священников и левитов, будет привратниками у порогов,
நீங்கள் செய்யவேண்டிய காரியம் என்னவென்றால், இந்தவாரத்தில், முறைப்படி வருகிற ஆசாரியர்களும் லேவியருமான உங்களில் மூன்றில் ஒரு பங்கு நுழைவாயில்களையும்,
5 и треть при доме царском, и треть у ворот Иесод, а весь народ на дворах дома Господня.
மூன்றில் ஒரு பங்கு ராஜாவின் அரண்மனையையும், மூன்றில் ஒரு பங்கு அஸ்திபாரவாசலையும் காக்கவும், மக்களெல்லாம் யெகோவாவுடைய ஆலயப் பிராகாரங்களில் இருக்கவும் வேண்டும்.
6 И никто пусть не входит в дом Господень, кроме священников и служащих из левитов. Они могут войти, потому что освящены; весь же народ пусть стоит на страже Господней.
ஆசாரியர்களும் லேவியர்களில் ஊழியம் செய்கிறவர்களும் தவிர, ஒருவரும் யெகோவாவுடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கவேண்டாம்; அவர்களே உட்பிரவேசிப்பார்களாக; அவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டவர்கள்; மக்களெல்லோரும் யெகோவாவுடைய கட்டளைகளைக் கைக்கொள்வார்களாக.
7 И пусть левиты окружат царя со всех сторон, всякий с оружием своим в руке своей, и кто будет входить в храм, да будет умерщвлен. И будьте вы при царе, когда он будет входить и выходить.
லேவியர்கள் அவரவர் தங்கள் ஆயுதங்களைத் தங்கள் கையிலே பிடித்துக்கொண்டவர்களாக, ராஜாவைச் சுற்றிலும் வரிசையாக நின்றுகொண்டிருக்கவேண்டும்; ஆலயத்திற்குள் வருகிற எவனும் கொலைசெய்யப்பட வேண்டும்; ராஜா உட்பிரவேசிக்கிறபோதும் வெளியே புறப்படுகிறபோதும் நீங்கள் அவரோடு இருங்கள் என்றான்.
8 И сделали левиты и все Иудеи, что приказал Иодай священник; и взяли каждый людей своих, приходящих в субботу с отходящими в субботу, потому что не отпустил священник Иодай сменившихся черед.
ஆசாரியனாகிய யோய்தா கட்டளையிட்டபடியெல்லாம் லேவியர்களும் யூதா மக்கள் அனைவரும் செய்து, அவரவர் அந்த வாரத்தின் முறைப்படி வருகிறவர்களும், முறை முடிந்து போகிறவர்களுமான தம்தம் மனிதர்களைக் கூட்டிக்கொண்டு போனார்கள்; குழுக்கள் பிரிந்துபோக ஆசாரியனாகிய யோய்தா அனுமதி கொடுக்கவில்லை.
9 И раздал Иодай священник начальникам сотен копья и малые и большие щиты царя Давида, которые были в доме Божием;
தாவீது ராஜா தேவனுடைய ஆலயத்தில் வைத்திருந்த ஈட்டிகளையும் சிறிய மற்றும் பெரிய கேடகங்களையும் ஆசாரியனாகிய யோய்தா நூறுபேருக்கு அதிபதியினிடத்தில் கொடுத்து,
10 и поставил весь народ, каждого с оружием его в руке его, от правой стороны храма до левой стороны храма, у жертвенника и у дома, вокруг царя.
௧0அவரவர் தங்கள் ஆயுதங்களைக் கையிலே பிடித்துக்கொண்டவர்களாக ஆலயத்தின் வலதுபக்கம்துவங்கி, ஆலயத்தின் இடதுபக்கம்வரை, பலிபீடத்திற்கும் ஆலயத்திற்கும் எதிரே ராஜாவைச் சுற்றிலும் நிற்க மக்களையெல்லாம் நிறுத்தினான்.
11 И вывели сына царя, и возложили на него венец и украшения, и поставили его царем; и помазали его Иодай и сыновья его и сказали: да живет царь!
௧௧பின்பு ராஜகுமாரனை வெளியே கொண்டுவந்து, கிரீடத்தை அவன்மேல் வைத்து, சாட்சியின் ஆகமத்தை அவன் கையிலே கொடுத்து, அவனை ராஜாவாக்கினார்கள்; யோய்தாவும் அவன் மகன்களும் அவனை அபிஷேகம்செய்து, ராஜா வாழ்க என்றார்கள்.
12 И услышала Гофолия голос народа, бегущего и провозглашающего о царе, и вышла к народу в дом Господень,
௧௨மக்கள் ஓடிவந்து, ராஜாவைப் புகழுகிற சத்தத்தை அத்தாலியாள் கேட்டபோது, அவள் யெகோவாவுடைய ஆலயத்திலுள்ள மக்களிடம் வந்து,
13 и увидела: и вот царь стоит на возвышении своем при входе, и князья и трубы подле царя, и весь народ земли веселится, и трубят трубами, и певцы с орудиями музыкальными и искусные в славословии. И разодрала Гофолия одежды свои и закричала: заговор! заговор!
௧௩இதோ, நுழைவாயிலில் உள்ள தன்னுடைய தூண் அருகில் ராஜா நிற்கிறதையும், ராஜாவின் அருகில் நிற்கிற பிரபுக்களையும், எக்காளம் ஊதுகிறவர்களையும், தேசத்து மக்களெல்லோரும் சந்தோஷப்பட்டு எக்காளங்கள் ஊதுகிறதையும், கீதவாத்தியங்களைப் பிடித்துக்கொண்டு பாடகர்களும் இசைத்தலைவர்களும் துதிக்கிறதையும் கண்டாள்; அப்பொழுது அத்தாலியாள் தன் உடைகளைக் கிழித்துக்கொண்டு: துரோகம் துரோகம் என்று சத்தமிட்டாள்.
14 И вызвал Иодай священник начальников сотен, начальствующих над войском, и сказал им: выведите ее вон из храма, и кто последует за нею, да будет умерщвлен мечом. Потому что священник сказал: не умертвите ее в доме Господнем.
௧௪ஆசாரியனாகிய யோய்தா படைத்தலைவர்களாகிய நூறுபேருக்கு அதிபதிகளானவர்களை வெளியே அழைத்து, அவர்களை நோக்கி: இவளை வரிசைக்கு வெளியே கொண்டுபோங்கள்; இவளைப் பின்பற்றுகிறவனைப் பட்டயத்தால் வெட்டிப்போடுங்கள் என்றான். யெகோவாவின் ஆலயத்திலே அவளைக் கொன்றுபோடவேண்டாம் என்று ஆசாரியன் சொல்லியிருந்தான்.
15 И дали ей место, и когда она пришла ко входу конских ворот царского дома, там умертвили ее.
௧௫அவர்கள் அவளுக்கு இடமுண்டாக்கினபோது, அவள் ராஜாவின் அரண்மனையிலிருக்கிற குதிரைகளின் வாசலுக்குள் பிரவேசிக்கும் இடம்வரை போனாள்; அங்கே அவளைக் கொன்றுபோட்டார்கள்.
16 И заключил Иодай завет между собою и между всем народом и царем, чтобы быть им народом Господним.
௧௬அப்பொழுது யோய்தா தாங்கள் யெகோவாவுடைய மக்களாயிருக்க, தானும் அனைத்து மக்களும் ராஜாவும் உடன்படிக்கை செய்துகொள்ளும்படி செய்தான்.
17 И пошел весь народ в капище Ваала, и разрушили его, и жертвенники его и истуканов его сокрушили; и Матфана, жреца Ваалова, умертвили пред жертвенниками.
௧௭அப்பொழுது மக்களெல்லோரும் பாகாலின் கோவிலுக்குப் போய், அதை இடித்து, அதின் பலிபீடங்களையும், அதின் விக்கிரகங்களையும் தகர்த்து, பாகாலின் பூசாரியாகிய மாத்தானைப் பலிபீடங்களுக்கு முன்பாகக் கொன்றுபோட்டார்கள்.
18 И поручил Иодай дела дома Господня священникам и левитам, и восстановил дневные череды священников и левитов, как распределил Давид в доме Господнем, для возношения всесожжений Господу, как написано в законе Моисеевом, с радостью и пением, по уставу Давидову.
௧௮தாவீது கட்டளையிட்டபிரகாரம் சந்தோஷத்தோடும், பாடல்களோடும் யெகோவாவின் சர்வாங்க தகனபலிகளை, மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே செலுத்தத்தக்கதாக, யோய்தா யெகோவாவுடைய ஆலயத்தை விசாரிக்கும் பதவிகளை தாவீது யெகோவாவுடைய ஆலயத்துக்கென்று ஏற்படுத்திவைத்த லேவியரான ஆசாரியர்களின் கைகளில் ஒப்படைத்து,
19 И поставил он привратников у ворот дома Господня, чтобы не мог входить нечистый почему-нибудь.
௧௯யாதொரு காரியத்தினால் தீட்டுப்பட்டவன் யெகோவாவுடைய ஆலயத்திற்குள் நுழையாமலிருக்க, அதின் வாசல்களுக்குக் காவலாளரை நிறுத்தினான்.
20 И взял начальников сотен, и вельмож, и начальствующих в народе, и весь народ земли, и проводил царя из дома Господня, и прошли чрез верхние ворота в дом царский, и посадили царя на царский престол.
௨0நூறுபேருக்கு அதிபதிகளையும், பெரியவர்களையும், மக்களை ஆளுகிறவர்களையும், தேசத்தின் அனைத்து மக்களையும் கூட்டிக்கொண்டு, ராஜாவைக் யெகோவாவுடைய ஆலயத்திலிருந்து இறங்கச்செய்து, உயர்ந்த வாசல்வழியாக ராஜ அரண்மனைக்குள் அழைத்து வந்து அரசாளும் சிங்காசனத்தின்மேல் ராஜாவை உட்காரச்செய்தார்கள்.
21 И веселился весь народ земли, и город успокоился. А Гофолию умертвили мечом.
௨௧தேசத்து மக்களெல்லோரும் மகிழ்ந்தார்கள்; அத்தாலியாளைப் பட்டயத்தால் கொன்றபின்பு நகரம் அமைதலானது.

< 2-я Паралипоменон 23 >