< داوران 18 >

و در آن ایام در اسرائیل پادشاهی نبود، و در آن روزها سبط دان، ملکی برای سکونت خود طلب می‌کردند، زیرا تا در آن روزملک ایشان در میان اسباط اسرائیل به ایشان نرسیده بود. ۱ 1
அந்த நாட்களில் இஸ்ரவேலிலே ராஜாவே இல்லை; தாண் கோத்திரத்தார்கள் குடியிருக்கிறதற்கு, தங்களுக்குப் பங்கு தேடினார்கள்; அந்த நாள்வரைக்கும் அவர்களுக்கு இஸ்ரவேல் கோத்திரங்கள் நடுவே போதிய பங்கு கிடைக்கவில்லை.
و پسران دان از قبیله خویش پنج نفر از جماعت خود که مردان جنگی بودند ازصرعه و اشتاول فرستادند تا زمین را جاسوسی وتفحص نمایند، و به ایشان گفتند: «بروید و زمین را تفحص کنید.» پس ایشان به کوهستان افرایم به خانه میخا آمده، در آنجا منزل گرفتند. ۲ 2
ஆகையால் தேசத்தை உளவுபார்த்து வரும்படி, தாண் மக்கள் தங்கள் கோத்திரத்திலே பலத்த மனிதர்களாகிய ஐந்து பேரைத் தங்கள் எல்லைகளில் இருக்கிற சோராவிலும் எஸ்தாவோலிலும் இருந்து அனுப்பி: நீங்கள் போய், தேசத்தை ஆராய்ந்துபார்த்து வாருங்கள் என்று அவர்களோடே சொன்னார்கள்; அவர்கள் எப்பிராயீம் மலைத்தேசத்தில் இருக்கிற மீகாவின் வீடுவரை போய், அங்கே இரவு தங்கினார்கள்.
و چون ایشان نزد خانه میخا رسیدند، آواز جوان لاوی راشناختند و به آنجا برگشته، او را گفتند: «کیست که تو را به اینجا آورده است و در این مکان چه می‌کنی و در اینجا چه داری؟» ۳ 3
அவர்கள் மீகாவின் வீட்டின் அருகில் இருக்கும்போது லேவியனான வாலிபனுடைய சத்தத்தை அறிந்து, அங்கே அவனிடத்தில் போய்: உன்னை இங்கே அழைத்து வந்தது யார்? இவ்விடத்தில் என்ன செய்கிறாய்? உனக்கு இங்கே என்ன இருக்கிறது என்று அவனிடத்தில் கேட்டார்கள்.
او به ایشان گفت: «میخا با من چنین و چنان رفتار نموده است، و مرااجیر گرفته، کاهن او شده‌ام.» ۴ 4
அதற்கு அவன்: இன்ன இன்னபடி மீகா எனக்குச் செய்தான்; என்னை சம்பளத்திற்கு பணியமர்த்தினான்; அவனுக்கு ஆசாரியனானேன் என்றான்.
وی را گفتند: «ازخدا سوال کن تا بدانیم آیا راهی که در آن می‌رویم خیر خواهد بود.» ۵ 5
அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: எங்கள் பயணம் வெற்றியாக முடியுமா என்று நாங்கள் அறியும்படி தேவனிடத்தில் கேள் என்றார்கள்.
کاهن به ایشان گفت: «به سلامتی بروید. راهی که شما می‌روید منظورخداوند است.» ۶ 6
அவர்களுக்கு அந்த ஆசாரியன்: சமாதானத்தோடு போங்கள்; உங்கள் பயணம் யெகோவாவுக்கு ஏற்றது என்றான்.
پس آن پنج مرد روانه شده، به لایش رسیدند. و خلقی را که در آن بودند، دیدند که درامنیت و به رسم صیدونیان در اطمینان و امنیت ساکن بودند. و در آن زمین صاحب اقتداری نبودکه اذیت رساند و از صیدونیان دور بوده، با کسی کار نداشتند. ۷ 7
அப்பொழுது அந்த ஐந்து மனிதர்களும் புறப்பட்டு, லாயீசுக்குப் போய், அதில் குடியிருக்கிற மக்கள் சீதோனியர்களுடைய வழக்கத்தின்படியே, பயமில்லாமல் அமைதியாகவும் எந்த குறையில்லாமலும் சுகமாக இருக்கிறதையும், அவர்கள் சீதோனியர்களுக்குத் தூரமானவர்கள் என்பதையும், அவர்களுக்கு ஒருவரோடும் கொடுக்கல் வாங்கல் விவகாரங்கள் இல்லை என்பதையும் பார்த்து,
پس نزد برادران خود به صرعه واشتاول آمدند. و برادران ایشان به ایشان گفتند: «چه خبر دارید؟» ۸ 8
சோராவிலும் எஸ்தாவோலிலும் இருக்கிற தங்கள் சகோதரர்களிடத்திற்குத் திரும்பிவந்தார்கள். அவர்களுடைய சகோதரர்கள்: நீங்கள் கொண்டுவருகிற செய்தி என்ன என்று அவர்களைக் கேட்டார்கள்.
گفتند: «برخیزیم و بر ایشان هجوم آوریم، زیرا که زمین را دیده‌ایم که اینک بسیار خوب است، و شما خاموش هستید، پس کاهلی مورزید بلکه رفته، داخل شوید و زمین رادر تصرف آورید. ۹ 9
அதற்கு அவர்கள்: எழும்புங்கள், அவர்களுக்கு எதிராகப் போவோம் வாருங்கள்; அந்த தேசத்தைப் பார்த்தோம், அது மிகவும் நன்றாயிருக்கிறது, நீங்கள் சும்மாயிருப்பீர்களா? அந்த தேசத்தைச் கைப்பற்றிக்கொள்ளும்படி புறப்பட்டுப்போக அசதியாக இருக்கவேண்டாம்.
و چون داخل شوید به قوم مطمئن خواهید رسید، و زمین بسیار وسیع است، و خدا آن را به‌دست شما داده است، و آن جایی است که از هرچه در جهان است، باقی ندارد.» ۱۰ 10
௧0நீங்கள் அங்கே சேரும்போது, சுகமாய்க் குடியிருக்கிற மக்களிடம் சேருவீர்கள்; அந்த தேசம் விசாலமாக இருக்கிறது; தேவன் அதை உங்களுடைய கைகளில் ஒப்புக்கொடுத்தார்; அது பூமியிலுள்ள எல்லாப் பொருட்களும் குறைவில்லாமலிருக்கிற இடம் என்றார்கள்.
پس ششصد نفر از قبیله دان مسلح شده، به آلات جنگ از آنجا یعنی از صرعه و اشتاول روانه شدند. ۱۱ 11
௧௧அப்பொழுது சோராவிலும் எஸ்தாவோலிலும் இருக்கிற தாண் கோத்திரத்தார்களில் அறுநூறுபேர் ஆயுதம் அணிந்தவர்களாக அங்கேயிருந்து புறப்பட்டுப்போய்,
و برآمده، در قریه یعاریم دریهودا اردو زدند. لهذا تا امروز آن مکان را محنه دان می‌خوانند و اینک در پشت قریه یعاریم است. ۱۲ 12
௧௨யூதாவிலுள்ள கீரியாத்யாரீமிலே முகாமிட்டார்கள்; ஆதலால் மக்கள் அதை இந்நாள்வரைக்கும் மக்னிதான் என்று அழைக்கிறார்கள்; அது கீரியாத்யாரீமின் மேற்குப்பகுதியிலே இருக்கிறது.
و از آنجا به کوهستان افرایم گذشته، به خانه میخا رسیدند. ۱۳ 13
௧௩பின்பு அவர்கள் அங்கேயிருந்து எப்பிராயீம் மலைக்குப் போய், மீகாவின் வீடுவரை வந்தார்கள்.
و آن پنج نفر که برای جاسوسی زمین لایش رفته بودند، برادران خود را خطاب کرده، گفتند: «آیا می‌دانید که در این خانه‌ها ایفود و ترافیم وتمثال تراشیده و تمثال ریخته شده‌ای هست؟ پس الان فکر کنید که چه باید بکنید.» ۱۴ 14
௧௪அப்பொழுது லாயீசின் நாட்டை உளவுபார்க்கப் போய்வந்த ஐந்து மனிதர்கள் தங்கள் சகோதரர்களைப் பார்த்து: இந்த வீடுகளில் ஏபோத்தும் சுரூபங்களும் வெட்டப்பட்ட விக்கிரகமும் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகமும் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா; இப்போதும் நீங்கள் செய்யவேண்டியதைத் தீர்மானித்துக் கொள்ளுங்கள் என்றார்கள்.
پس به آنسو برگشته، به خانه جوان لاوی، یعنی به خانه میخا آمده، سلامتی او را پرسیدند. ۱۵ 15
௧௫அப்பொழுது அந்த இடத்திற்குத் திரும்பி, மீகாவின் வீட்டில் இருக்கிற லேவியனான வாலிபனின் வீட்டிற்கு வந்து, அவனிடத்தில் சுகசெய்தி விசாரித்தார்கள்.
و آن ششصد مرد مسلح شده، به آلات جنگ که ازپسران دان بودند، در دهنه دروازه ایستاده بودند. ۱۶ 16
௧௬ஆயுதம் அணிந்தவர்களாகிய தாண் கோத்திரத்தார்கள் 600 பேரும் வாசற்படியிலே நின்றார்கள்.
و آن پنج نفر که برای جاسوسی زمین رفته بودند برآمده، به آنجا داخل شدند، و تمثال تراشیده و ایفود و ترافیم و تمثال ریخته شده راگرفتند، و کاهن با آن ششصد مرد مسلح شده، به آلات جنگ به دهنه دروازه ایستاده بود. ۱۷ 17
௧௭ஆசாரியனும் ஆயுதம் அணிந்தவர்களாகிய 600 பேரும் வாசற்படியிலே நிற்க்கும்போது, தேசத்தை உளவுபார்க்கப் போய் வந்த அந்த 5 மனிதர்கள் உள்ளே புகுந்து, செதுக்கப்பட்ட விக்கிரகத்தையும் ஏபோத்தையும் உருவங்களையும் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தையும் எடுத்துக்கொண்டு வந்தார்கள்.
وچون آنها به خانه میخا داخل شده، تمثال تراشیده و ایفود و ترافیم و تمثال ریخته شده راگرفتند، کاهن به ایشان گفت: «چه می‌کنید؟» ۱۸ 18
௧௮அவர்கள் மீகாவின் வீட்டிற்குள் புகுந்து, செதுக்கப்பட்ட விக்கிரகத்தையும் ஏபோத்தையும் உருவங்களையும் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தையும் எடுத்துக்கொண்டு வருகிறபோது, ஆசாரியன் அவர்களைப் பார்த்து: நீங்கள் செய்கிறது என்ன என்று கேட்டான்.
ایشان به وی گفتند: «خاموش شده، دست را بر دهانت بگذار و همراه ما آمده، برای ما پدر وکاهن باش. کدام برایت بهتر است که کاهن خانه یک شخص باشی یا کاهن سبطی و قبیله‌ای دراسرائیل شوی؟» ۱۹ 19
௧௯அதற்கு அவர்கள்: நீ பேசாதே, உன்னுடைய வாயை மூடிக்கொண்டு, எங்களோடு வந்து எங்களுக்குத் தகப்பனும் ஆசாரியனுமாயிரு; நீ ஒருவனுடைய வீட்டிற்கு மட்டும் ஆசாரியனாக இருக்கிறது நல்லதோ? இஸ்ரவேலில் ஒரு கோத்திரத்திற்கும் வம்சத்திற்கும் ஆசாரியனாக இருக்கிறது நல்லதோ? என்றார்கள்.
پس دل کاهن شاد گشت. وایفود و ترافیم و تمثال تراشیده را گرفته، در میان قوم داخل شد. ۲۰ 20
௨0அப்பொழுது ஆசாரியனுடைய மனது மகிழ்ச்சியடைந்து, அவன் ஏபோத்தையும் உருவங்களையும் செதுக்கப்பட்ட விக்கிரகத்தையும் எடுத்துக்கொண்டு, மக்களிடம் போனான்.
پس متوجه شده، روانه شدند، و اطفال ومواشی و اسباب را پیش روی خود قرار دادند. ۲۱ 21
௨௧அவர்கள் திரும்பும்படிப் புறப்பட்டு, பிள்ளைகளையும், ஆடுமாடுகளையும், உடைமைகளையும், தங்களுக்கு முன்னே போகச்செய்தார்கள்.
و چون ایشان از خانه میخا دور شدند، مردانی که در خانه های اطراف خانه میخا بودند جمع شده، بنی دان را تعاقب نمودند. ۲۲ 22
௨௨அவர்கள் புறப்பட்டு, மீகாவின் வீட்டை விட்டுக் கொஞ்சந்தூரம் போனபோது, மீகாவின் வீட்டிற்கு அயல்வீட்டார் கூட்டங்கூடி, தாண் கோத்திரத்தார்களை பின்தொடர்ந்துவந்து,
و بنی دان راصدا زدند، و ایشان رو برگردانیده، به میخا گفتند: «تو را چه شده است که با این جمعیت آمده‌ای؟» ۲۳ 23
௨௩அவர்களைப் பார்த்துக் கூப்பிட்டார்கள்; அவர்கள் திரும்பிப்பார்த்து, மீகாவை நோக்கி: நீ இப்படிக் கூட்டத்துடன் வருகிற காரியம் என்ன என்று கேட்டார்கள்.
او گفت: «خدایان مرا که ساختم با کاهن گرفته، رفته‌اید؛ و مرا دیگر‌چه چیز باقی است؟ پس چگونه به من می‌گویید که تو را چه شده است؟» ۲۴ 24
௨௪அதற்கு அவன்: நான் உண்டாக்கின என்னுடைய தெய்வங்களையும் அந்த ஆசாரியனையுங்கூட நீங்கள் கொண்டு போகிறீர்களே; இனி எனக்கு என்ன இருக்கிறது; நீ கூப்பிடுகிற காரியம் என்ன என்று நீங்கள் என்னிடத்தில் எப்படிக் கேட்கலாம் என்றான்.
و پسران دان او را گفتند: «آواز تو در میان ماشنیده نشود مبادا مردان تند خو بر شما هجوم آورند، و جان خود را با جانهای اهل خانه ات هلاک سازی.» ۲۵ 25
௨௫தாண் மக்கள் அவனைப் பார்த்து: எங்கள் காதுகள் கேட்க சத்தமிடாதே, சத்தமிட்டால் கடுங்கோபக்காரர்கள் உங்களைத் தாக்குவார்கள்; அப்பொழுது நீயும் உன்னுடைய குடும்பத்தினர்களும் கொல்லப்படுவார்கள் என்று சொல்லி,
و بنی دان راه خود را پیش گرفتند. و چون میخا دید که ایشان از او قوی ترند، رو گردانیده، به خانه خود برگشت. ۲۶ 26
௨௬தங்களுடைய வழியிலே நடந்துபோனார்கள்; அவர்கள் தன்னைவிட பலசாலிகள் என்று மீகா பார்த்து, அவன் தன்னுடைய வீட்டிற்குத் திரும்பினான்.
و ایشان آنچه میخا ساخته بود و کاهنی راکه داشت برداشته، به لایش بر قومی که آرام ومطمئن بودند، برآمدند، و ایشان را به دم شمشیرکشته، شهر را به آتش سوزانیدند. ۲۷ 27
௨௭அவர்களோ மீகா உண்டாக்கினவைகளையும், அவனுடைய ஆசாரியனையும் கொண்டுபோய், பயமில்லாமல் சுகமாயிருக்கிற லாயீஸ் ஊர் மக்களிடத்தில் சேர்த்து, அவர்களைக் கூர்மையான பட்டயத்தால் வெட்டி, பட்டணத்தை அக்கினியால் எரித்துப்போட்டார்கள்.
و رهاننده‌ای نبود زیرا که از صیدون دور بود و ایشان را با کسی معامله‌ای نبود و آن شهر در وادی‌ای که نزدبیت رحوب است، واقع بود. پس شهر را بنا کرده، در آن ساکن شدند. ۲۸ 28
௨௮அது சீதோனுக்குத் தூரமாயிருந்தது; மற்ற மனிதர்களோடு அவர்களுக்குச் சம்பந்தமில்லாமலும் இருந்ததால், அவர்களைக் காப்பாற்ற ஒருவரும் இல்லை; அந்தப் பட்டணம் பெத்ரேகோபுக்கு அருகே பள்ளத்தாக்கில் இருந்தது; அவர்கள் அதைத் திரும்பக் கட்டி, அதிலே குடியிருந்து,
و شهر را به اسم پدر خود، دان که برای اسرائیل زاییده شد، دان نامیدند. امااسم شهر قبل از آن لایش بود. ۲۹ 29
௨௯முதலில் லாயீஸ் என்னும் பெயர்கொண்டிருந்த அந்தப் பட்டணத்திற்கு இஸ்ரவேலுக்குப் பிறந்த தங்கள் முற்பிதவான தாணுடைய பெயரின்படியே தாண் என்று பெயரிட்டார்கள்.
و بنی دان آن تمثال تراشیده را برای خود نصب کردند ویهوناتان بن جرشوم بن موسی و پسرانش تا روزاسیر شدن اهل زمین، کهنه بنی دان می‌بودند. ۳۰ 30
௩0அப்பொழுது தாண் மக்கள் அந்தச் சுரூபத்தைத் தங்களுக்கு நியமித்துக்கொண்டார்கள்; மனாசேயின் மகனான கெர்சோனின் மகன் யோனத்தானும், அவன் மகன்களும் அந்தத் தேசம் சிறைப்பட்டுப்போன நாள்வரை, தாண் கோத்திரத்தார்கள் ஆசாரியர்களாக இருந்தார்கள்.
پس تمثال تراشیده میخا را که ساخته بودتمامی روزهایی که خانه خدا در شیلوه بود، برای خود نصب نمودند. ۳۱ 31
௩௧தேவனுடைய கூடாரம் சீலோவிலிருந்த காலம் முழுவதும் அவர்கள் மீகா உண்டாக்கின சிலையை வைத்துக்கொண்டிருந்தார்கள்.

< داوران 18 >