< پیدایش 5 >

این است کتاب پیدایش آدم. در روزی که خدا آدم را آفرید، به شبیه خدا او راساخت. ۱ 1
ஆதாமின் வம்சவரலாறு: தேவன் மனிதனை உருவாக்கின நாளிலே அவனை தேவசாயலாக உண்டாக்கினார்.
نر و ماده ایشان را آفرید. و ایشان رابرکت داد و ایشان را «آدم» نام نهاد، در روزآفرینش ایشان. ۲ 2
அவர்களை ஆணும் பெண்ணுமாக உருவாக்கினார், அவர்களை ஆசீர்வதித்து, அவர்களை உருவாக்கின நாளிலே அவர்களுக்கு மனிதர்கள் என்று பெயரிட்டார்.
و آدم صد و سی سال بزیست، پس پسری به شبیه و بصورت خود آورد، و او را شیث نامید. ۳ 3
ஆதாம் 130 வயதானபோது, தன் சாயலாகத் தன் உருவத்தைப்போல ஒரு மகனைப் பெற்றெடுத்து, அவனுக்கு சேத் என்று பெயரிட்டான்.
وایام آدم بعد از آوردن شیث، هشتصد سال بود، وپسران و دختران آورد. ۴ 4
ஆதாம் சேத்தைப் பெற்றபின், 800 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
پس تمام ایام آدم که زیست، نهصد و سی سال بود که مرد. ۵ 5
ஆதாம் உயிரோடிருந்த நாட்களெல்லாம் 930 வருடங்கள்; அவன் இறந்தான்.
و شیث صد و پنج سال بزیست، و انوش را آورد. ۶ 6
சேத் 105 வயதானபோது, ஏனோசைப் பெற்றெடுத்தான்.
وشیث بعد از آوردن انوش، هشتصد و هفت سال بزیست و پسران و دختران آورد. ۷ 7
சேத் ஏனோசைப் பெற்றபின், 807 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
و جمله ایام شیث، نهصد و دوازده سال بود که مرد. ۸ 8
சேத்துடைய நாட்களெல்லாம் 912 வருடங்கள்; அவன் இறந்தான்.
و انوش نود سال بزیست، و قینان را آورد. ۹ 9
ஏனோஸ் 90 வயதானபோது, கேனானைப் பெற்றெடுத்தான்.
و انوش بعداز آوردن قینان، هشتصد و پانزده سال زندگانی کرد و پسران و دختران آورد. ۱۰ 10
௧0ஏனோஸ் கேனானைப் பெற்றபின்பு, 815 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
پس جمله ایام انوش نهصد و پنج سال بود که مرد. ۱۱ 11
௧௧ஏனோசுடைய நாட்களெல்லாம் 905 வருடங்கள், அவன் இறந்தான்.
و قینان هفتاد سال بزیست، و مهللئیل را آورد. ۱۲ 12
௧௨கேனான் 70 வயதானபோது, மகலாலெயேலைப் பெற்றெடுத்தான்.
و قینان بعد از آوردن مهللئیل، هشتصد و چهل سال زندگانی کرد و پسران و دختران آورد. ۱۳ 13
௧௩கேனான் மகலாலெயேலைப் பெற்றபின், 840 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
و تمامی ایام قینان، نهصد و ده سال بود که مرد. ۱۴ 14
௧௪கேனானுடைய நாட்களெல்லாம் 910 வருடங்கள்; அவன் இறந்தான்.
ومهللئیل، شصت و پنج سال بزیست، و یارد را آورد. ۱۵ 15
௧௫மகலாலெயேல் 65 வயதானபோது, யாரேதைப் பெற்றெடுத்தான்.
و مهللئیل بعد از آوردن یارد، هشتصد وسی سال زندگانی کرد و پسران و دختران آورد. ۱۶ 16
௧௬மகலாலெயேல் யாரேதைப் பெற்றபின், 830 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான்.
پس همه ایام مهللئیل، هشتصد و نود و پنج سال بود که مرد. ۱۷ 17
௧௭மகலாலெயேலுடைய நாட்களெல்லாம் 895 வருடங்கள்; அவன் இறந்தான்.
و یارد صد و شصت و دو سال بزیست، و خنوخ را آورد. ۱۸ 18
௧௮யாரேத் 162 வயதானபோது, ஏனோக்கைப் பெற்றெடுத்தான்.
و یارد بعد از آوردن خنوخ، هشتصد سال زندگانی کرد و پسران ودختران آورد. ۱۹ 19
௧௯யாரேத் ஏனோக்கைப் பெற்றபின், 800 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
و تمامی ایام یارد، نهصد وشصت و دو سال بود که مرد. ۲۰ 20
௨0யாரேதுடைய நாட்களெல்லாம் 962 வருடங்கள்; அவன் இறந்தான்.
و خنوخ شصت وپنج سال بزیست، و متوشالح را آورد. ۲۱ 21
௨௧ஏனோக்கு 65 வயதானபோது, மெத்தூசலாவைப் பெற்றெடுத்தான்.
و خنوخ بعد از آوردن متوشالح، سیصد سال با خدا راه می‌رفت و پسران و دختران آورد. ۲۲ 22
௨௨ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின், 300 வருடங்கள் தேவனோடு நெருங்கி உறவாடிக்கொண்டிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான்.
و همه ایام خنوخ، سیصد و شصت و پنج سال بود. ۲۳ 23
௨௩ஏனோக்குடைய நாட்களெல்லாம் 365 வருடங்கள்.
وخنوخ با خدا راه می‌رفت و نایاب شد، زیرا خدااو را برگرفت. ۲۴ 24
௨௪ஏனோக்கு தேவனோடு நெருங்கி உறவாடிக்கொண்டிருக்கும்போது, காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.
و متوشالح صد و هشتاد و هفت سال بزیست، و لمک را آورد. ۲۵ 25
௨௫மெத்தூசலா 187 வயதானபோது, லாமேக்கைப் பெற்றெடுத்தான்.
و متوشالح بعداز آوردن لمک، هفتصد و هشتاد و دو سال زندگانی کرد و پسران و دختران آورد. ۲۶ 26
௨௬மெத்தூசலா லாமேக்கைப் பெற்றபின், 782 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
پس جمله ایام متوشالح، نهصد و شصت و نه سال بودکه مرد. ۲۷ 27
௨௭மெத்தூசலாவுடைய நாட்களெல்லாம் 969 வருடங்கள்; அவன் இறந்தான்.
و لمک صد و هشتاد و دو سال بزیست، و پسری آورد. ۲۸ 28
௨௮லாமேக்கு 182 வயதானபோது, ஒரு மகனைப் பெற்றெடுத்து,
و وی را نوح نام نهاده گفت: «این ما را تسلی خواهد داد از اعمال ما و ازمحنت دستهای ما از زمینی که خداوند آن راملعون کرد.» ۲۹ 29
௨௯“யெகோவா சபித்த பூமியிலே நமக்கு உண்டான வேலையிலும், நம்முடைய கைகளின் பிரயாசத்திலும், இவன் நம்மைத் தேற்றுவான்” என்று சொல்லி, அவனுக்கு நோவா என்று பெயரிட்டான்.
و لمک بعد از آوردن نوح، پانصدو نود و پنج سال زندگانی کرد و پسران و دختران آورد. ۳۰ 30
௩0லாமேக்கு நோவாவைப் பெற்றபின், 595 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான்.
پس تمام ایام لمک، هفتصد و هفتاد وهفت سال بود که مرد. ۳۱ 31
௩௧லாமேக்குடைய நாட்களெல்லாம் 777 வருடங்கள்; அவன் இறந்தான்.
و نوح پانصد ساله بود، پس نوح سام و حام و یافث را آورد. ۳۲ 32
௩௨நோவா 500 வயதானபோது சேம், காம், யாப்பேத் என்பவர்களைப் பெற்றெடுத்தான்.

< پیدایش 5 >