< اول تواریخ 1 >

آدم، شِيث اَنوش، ۱ 1
ஆதாம், சேத், ஏனோஸ்,
قِينان مهلَلئِيل يارَد، ۲ 2
கேனான், மகலாலெயேல், யாரேத்,
خَنُوخ مَتُوشالَح لَمَک، ۳ 3
ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு, நோவா ஆகியோர்.
نُوح سام حام يافَث. ۴ 4
நோவாவின் மகன்கள்: சேம், காம், யாப்பேத்.
پسران يافَث: جُومَر و ماجُوج و ماداي و ياوان و ماشَک و تيراس. ۵ 5
யாப்பேத்தின் மகன்கள்: கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ்.
وپسران جُومَر: اَشکَناز و ريفات و تُجَرمَه. ۶ 6
கோமரின் மகன்கள்: அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா.
و پسران ياوان: اَلِيشَه و تَرشِيش و کتيم و دُودانِيم. ۷ 7
யாவானின் மகன்கள்: எலீஷா, தர்ஷீஸ், கித்தீம், ரொதானீம்.
و پسران حام: کوش و مِصرايم و فُوت و کَنعان. ۸ 8
காமின் மகன்கள்: கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான்.
و پسران کوش: سَبا و حَويلَه و سبتا و رَعما و سَبتَکا. و پسران رَعما: شَبا و دَدان. ۹ 9
கூஷின் மகன்கள்: சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள். ராமாவின் மகன்கள்: சேபா, திதான்.
و کوش، نِمرود را آورد، و او به جبار شدن در جهان شروع نمود. ۱۰ 10
கூஷின் மகன் நிம்ரோத்; இவன் பூமியில் வலிமையுள்ள வீரனாக விளங்கினான்.
و مِصرايم، لُوديم و عَنَاميم و لَهابيم و نَفتُوحيم را آورد، ۱۱ 11
மிஸ்ராயீமின் சந்ததிகள்: லூதீமியர், ஆனாமியர், லெகாபியர், நப்தூகியர்,
و فَتروسيم و کَسلُوحيم را که فَلَستيم و کَفتوريم از ايشان پديد آمدند. ۱۲ 12
பத்ரூசீயர், பெலிஸ்தியரின் சந்ததிக்கு தலைவனான கஸ்லூகியர், கப்தோரியர்.
و کَنعان نُخست زاده خود، صيدون و حِتّ را آورد، ۱۳ 13
கானானின் சந்ததிகள்: மூத்த மகன் சீதோன், கேத்து,
و يبُوسي و اَمُوري و جَرجاشي، ۱۴ 14
எபூசியர், எமோரியர், கிர்காசியர்,
و حِوّي و عِرقي و سِيني، ۱۵ 15
ஏவியர், அர்கீயர், சீனியர்,
و اروادي و صَماري و حَماتي را. ۱۶ 16
அர்வாதியர், செமாரியர், காமாத்தியர்.
پسران سام: عيلام و آشُّور و اَرفَکشاد و لُود واَرام و عُوص و حُول و جاتَر و ماشَک. ۱۷ 17
சேமின் மகன்கள்: ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம். ஆராமின் மகன்கள்: ஊத்ஸ், கூல், கேத்தெர், மேசேக்கு.
و اَرفَکشاد، شالَح را آورد و شالَح، عابَر را آورد. ۱۸ 18
அர்பக்சாத் சேலாவின் தகப்பன், சேலா ஏபேரின் தகப்பன்.
و براي عابَر، دو پسر متولد شدند که يکي را فالَج نام بود زيرا در ايام وي زمين منقسم شد و اسم برادرش يقطان بود. ۱۹ 19
ஏபேருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். ஒருவன் பெயர் பேலேகு, ஏனெனில் அவன் காலத்தில் பூமியிலுள்ள மக்கள் வெவ்வேறு மொழி குழுக்களாக பிரிக்கப்பட்டனர். அவனுடைய சகோதரன் பெயர் யொக்தான்.
و يقطان، اَلمُوداد و شالَف و حَضَرموت و يارَح را آورد؛ ۲۰ 20
யொக்தான் என்பவன் அல்மோதாத், செலேப், அசர்மாவேத், யேராகு,
و هَدُورام و اُوزال و دِقلَه، ۲۱ 21
அதோராம், ஊசால், திக்லா,
و اِيبال و اَبيمايل و شَبا، ۲۲ 22
ஏபால், அபிமாயேல், சேபா,
و اُوفير و حَويلَه و يوباب را که جميع اينها پسران يقطان بودند. ۲۳ 23
ஓப்பீர், ஆவிலா, யோபாப் ஆகியோரின் தகப்பன். இவர்களே யொக்தானின் மகன்கள்.
سام، اَرفَکشاد سالَح، ۲۴ 24
சேம், அர்பக்சாத், சேலா;
عابَر فالَج رَعُو، ۲۵ 25
ஏபேர், பேலேகு, ரெகூ,
سَروج ناحُور تارَح، ۲۶ 26
செரூகு, நாகோர், தேராகு,
اَبرام که همان ابراهيم باشد. ۲۷ 27
ஆபிராமாகிய ஆபிரகாம்.
پسران ابراهيم: اسحاق واسماعيل. ۲۸ 28
ஆபிரகாமின் மகன்கள்: ஈசாக்கு, இஸ்மயேல் என்பவர்கள்.
اين است پيداش ايشان: نخستزاده اسماعيل: نَبايوت و قيدار و اَدَبئيل و مِبسام، ۲۹ 29
அவர்களின் சந்ததிகள் இதுவே: நெபாயோத் இஸ்மயேலின் மூத்த மகன், பின்பு கேதார், அத்பியேல், மிப்சாம்;
و مِشماع و دُومَه و مَسّا و حَدَد و تيما، ۳۰ 30
மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா,
و يطُور و نافيش و قِدمَه که اينان پسران اسماعيل بودند. ۳۱ 31
யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவர்கள். இவர்கள் இஸ்மயேலின் மகன்கள்.
و پسران قَطُورَه که مُتعه ابراهيم بود، پس او زِمران و يقشان و مَدان و مِديان و يشباق و شُوحا را زاييد و پسران يقشان: شَبا و دَدان بودند. ۳۲ 32
ஆபிரகாமின் மறுமனையாட்டி கேத்தூராள் பெற்ற மகன்கள்: சிம்ரான், யக்க்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா. யக்க்ஷானின் மகன்கள்: சேபா, தேதான்.
و پسران مِديان عِيفَه و عِيفَرو خَنُوح و اَبيداع و اَلدَعَه بودند. پس جميع اينها پسران قَطُورَه بودند. ۳۳ 33
மீதியானின் மகன்கள்: ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபிதா, எல்தாகா. இவர்கள் அனைவரும் கேத்தூராளின் சந்ததிகள்.
و ابراهيم اسحاق را آورد؛ و پسران اسحاق عِيسُو واسرائيل بودند. ۳۴ 34
ஆபிரகாம் ஈசாக்கின் தகப்பன், ஈசாக்கின் மகன்கள்: ஏசா, இஸ்ரயேல்.
و پسران عِيسُو: اَليفاز و رَعُوئيل و يعُوش و يعلام وقُورَح. ۳۵ 35
ஏசாவின் மகன்கள்: எலிப்பாஸ், ரெகுயேல், எயூஷ், யாலாம், கோராகு.
پسران اَليفاز: تيمان و اُومار و صَفي و جَعتام و قَناز و تِمناع و عَماليق. ۳۶ 36
எலிப்பாஸின் மகன்கள்: தேமான், ஓமார், செப்போ, கத்தாம், கேனாஸ்; திம்னா என்பவளுக்கு அமலேக்கு பிறந்தான்.
پسران رَعُوئيل: نَحَت و زارَح و شَمَّه و مِزَّه. ۳۷ 37
ரெகுயேலின் மகன்கள்: நாகாத், செராகு, சம்மா, மீசா.
و پسران سَعِير: لُوطان و شُوبال و صِبعون و عَنَه و ديشُون و اِيصر ودِيشان. ۳۸ 38
சேயீரின் மகன்கள்: லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு, திஷோன், ஏசேர், திஷான்.
و پسران لُوطان: حوري و هُومام و خواهر لُوطان تِمناع. ۳۹ 39
லோத்தானின் மகன்கள்: ஓரி, ஓமாம் என்பவர்கள். திம்னாள் லோத்தானின் சகோதரி.
پسران شُوبال: عَليان ومَنَاحَت وعِيبال وشَفي واُونام و پسران صِبعُون: اَيه و عَنَه. ۴۰ 40
சோபாலின் மகன்கள்: அல்வான், மானகாத், ஏபால், செப்பி, ஓனாம். சிபியோனின் மகன்கள்: அயா, ஆனாகு.
و پسران عَنَه: ديشون وپسران ديشون: حَمران و اِشبان و يتران و کَران. ۴۱ 41
ஆனாகின் மகன்: திஷோன். திஷோனுடைய மகன்கள்: எம்தான், எஸ்பான், இத்ரான், கெரான்.
پسران ايصر: بِلهان و زَعوان و يعقان وپسران ديشان: عُوص و اَران. ۴۲ 42
ஏசேருடைய மகன்கள்: பில்கான், சகவான், யாக்கான். திஷானுடைய மகன்கள்: ஊத்ஸ், அரான்.
و پادشاهاني که در زمين اَدُوم سلطنت نمودند، پيش از آنکه پادشاهي بر بني اسرائيل سلطنت کند، اينانند: بالَع بن بَعُور و اسم شهر او دِنهابِه بود. ۴۳ 43
இஸ்ரயேல் மக்களை ஒரு அரசர் ஆட்சி செய்யுமுன், ஏதோம் நாட்டில் அரசாண்ட அரசர்கள்: பேயோரின் மகன் பேலா; அவனுடைய பட்டணம் தின்காபா எனப் பெயரிடப்பட்டது.
و بالَع مُرد و يوباب بن زارَح از بُصرَه به جايش پادشاه شد. ۴۴ 44
பேலா இறந்தபின்பு போஸ்றாவைச் சேர்ந்த சேராகின் மகன் யோபாப் அவனுக்குப்பின் அரசனானான்.
و يوباب مرد و حوشام از زمين تيماني به جايش سلطنت نمود. ۴۵ 45
யோபாப் இறந்தபின்பு அவனுடைய இடத்தில் தேமான் நாட்டைச் சேர்ந்த உஷாம் அரசனானான்.
و حُوشام مُرد وهَدَد بن بَدَد که مِديان را در زمين موآب شکست داد در جايش پادشاه شد و اسم شهرش عَوِيت بود. ۴۶ 46
உஷாம் இறந்தபின்பு, மோவாப் நாட்டிலே மீதியானியரை முறியடித்த பேதாதின் மகன் ஆதாத் அவனுடைய இடத்தில் அரசனானான். இவனுடைய பட்டணம் ஆவீத் எனப் பெயரிடப்பட்டது.
و هَدَد مُرد و سَملَه از مَسريقَه به جايش پادشاه شد. ۴۷ 47
ஆதாத் இறந்தபின்பு அவனுடைய இடத்தில் மஸ்ரேக்கா என்னும் இடத்தைச் சேர்ந்த சம்லா அரசனானான்.
و سَملَه مُرد و شاؤل از رَحُوبوت نهر به جايش پادشاه شد. ۴۸ 48
சம்லா இறந்தபின்பு, ஆற்றின் அருகில் உள்ள ரெகொபோத் என்னுமிடத்தைச் சேர்ந்த சாவூல் அவனுடைய இடத்தில் அரசனானான்.
و شاؤل مُرد و بَعل حانان بن عَکبور به جايش پادشاه شد. ۴۹ 49
சாவூல் இறந்தபின்பு அவனுடைய இடத்தில் அக்போரின் மகன் பாகால்கானான் அரசனானான்.
و بَعل حانان مُرد وهَدَد به جايش پادشاه شد؛ و اسم شهرش فاعي و اسم زنش مَهِيطَبئيل دختر مَطرِد دختر مَي ذَهَب بود. ۵۰ 50
பாகால்கானான் இறந்தபின்பு, அவனுடைய இடத்தில் ஆதாத் அரசனானான். இவனது பட்டணம் பாகு எனப் பெயரிடப்பட்டது. இவனது மனைவியின் பெயர் மெகேதபேல்; இவள் மத்ரேத்தின் மகளும் மேசகாபின் பேத்தியுமாவாள்.
وهَدَد مُرد و اَميرانِ اَدوُم امير تِمناع وامير اَليه و امير يتِيت بودند. ۵۱ 51
ஆதாத்தும் இறந்தான். ஏதோமின் பிரதானமானவர்கள்: திம்னா, அல்வா, ஏதேத்,
و اَمير اَهولِيبَامَه و امير اِيلَه و امير فِينُون؛ ۵۲ 52
அகோலிபாமா, ஏலா, பினோன்,
وامير قَناز و اميرِتيمان وامير مِبصار؛ ۵۳ 53
கேனாஸ், தேமான், மிப்சார்,
وامير مَجدِيئيل وامير عيرام؛ اينان اميران اَدُوم بودند. ۵۴ 54
மக்தியேல், ஈராம். இவர்களே ஏதோமின் வம்சத்தலைவர்கள்.

< اول تواریخ 1 >