< Jēkaba Vēstule 3 >

1 Netopiet daudzi par mācītājiem, mani brāļi, zinādami, ka mēs grūtāku spriedumu dabūsim.
என் சகோதரரே, உங்களில் பலர் போதகர்கள் ஆவதற்கு விரும்பாதீர்கள். ஏனெனில் போதிக்கிற நாம் அதிக தீர்ப்பிற்கு உட்படுவோம் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே.
2 Jo mēs visi klūpam daudz; ja kas ne vārdā neklūp, tas ir pilnīgs vīrs, spēcīgs, arī savaldīt visu miesu.
நாம் எல்லோரும் பலவிதங்களில் தவறு செய்கிறோம். தன் பேச்சில் ஒருபோதும் தவறாதவனாக யாராவது இருந்தால், அவனே முழுநிறைவு பெற்ற மனிதன். இப்படிப்பட்டவன், தனது முழு உடலையும் அடக்கி ஆளும் ஆற்றல் உடையவன்.
3 Redzi, zirgiem liekam iemauktus mutē, lai tie mums paklausa, un valdām visu viņu miesu.
குதிரைகள் நமக்குக் கீழ்ப்படியும்படி, அவைகளுடைய வாய்களில் கடிவாளங்களைப் போடும்போது, அவைகளின் முழு உடலையும் நாம் கட்டுப்படுத்துகிறோம்.
4 Redzi, arī tādas lielas un no stipriem vējiem mētātas laivas top valdītas no mazas stūres, uz kurieni stūrmaņa prāts nesās.
அல்லது கப்பல்களை ஒரு உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். அவை மிகப்பெரியவைகளாய் இருந்தும், பலத்த காற்றினாலேயே அடித்துச் செல்லப்பட்டாலும், கப்பலின் மாலுமி தான் விரும்புகின்ற திசையை நோக்கி, ஒரு சிறு சுக்கானாலே அவற்றைத் திருப்புகிறான்.
5 Tāpat arī mēle ir mazs loceklis un daudz ko padara; redzi, maza uguns, kādu lielu mežu tā iededzina!
அதேபோலவே, நாவும் உடலின் ஒரு சிறு அங்கமாயிருக்கிறது; ஆனால் அது பெரும் அளவில் பெருமை பேசுகிறது. ஒரு சிறு நெருப்புப் பொறி எவ்வளவு பெரிய காட்டையும் எரித்துவிடுகிறது என்பதை எண்ணிப்பாருங்கள்.
6 Mēle arīdzan ir uguns, pasaule pilna netaisnības; tāpat mēle starp mūsu locekļiem ir tas, kas visu miesu apgāna un iededzina visapkārt mūsu dzīvības ceļu, pati iededzināta no elles. (Geenna g1067)
நாவும் நெருப்பாக இருக்கிறது. நமது உடலின் அங்கங்களுக்குள்ளே, நாவு ஒரு தீமை நிறைந்த உலகம் என்றே சொல்லலாம். அது ஒருவனை முழுவதுமாகவே சீர்கெடுத்து, அவனுடைய வாழ்க்கை முழுவதையும் எரியும் நெருப்பாக்கி விடுகிறது. அதுவும் நரகத்தின் நெருப்பினால் மூட்டப்படுகிறது. (Geenna g1067)
7 Jo ikkatra daba, tā zvēru, kā putnu, tā tārpu, kā jūras zvēru, top valdīta un ir tapusi valdīta no cilvēcīgas dabas;
எல்லா விதமான மிருகங்களும், பறவைகளும், ஊரும் பிராணிகளும், கடலில் வாழும் உயிரினங்களும் மனிதனால் அடக்கிக் கட்டுப்படுத்தப்படுகின்றன. அப்படிக் கட்டுப்படுத்தப்பட்டும் இருக்கின்றன.
8 Bet mēli neviens cilvēks nespēj savaldīt, to nepārvaramo ļaunumu ar nāves dzeloni.
ஆனால் நாவையோ ஒருவனாலும் அடக்கிக் கட்டுப்படுத்த முடியாது. அது கட்டுக்கடங்காத கொடியது. மரணத்தை விளைவிக்கும் விஷம் நிறைந்ததாயிருக்கிறது.
9 Ar to mēs slavējam To Kungu un Tēvu, un ar to mēs nolādam cilvēkus, kas pēc Dieva ģīmja radīti.
நாம் நாவினாலே நமது கர்த்தரையும், பிதாவையும் துதிக்கிறோம். அதே நாவினாலேயே இறைவனுடைய சாயலாக படைக்கப்பட்ட மனிதர்களைச் சபிக்கிறோம்.
10 No tās pašas mutes iziet svētīšana un lādēšana. Tam nebūs tā notikt, mani brāļi.
ஒரே வாயிலிருந்து துதியும், சாபமும் வருகிறது. எனக்கு பிரியமானவர்களே, இவ்விதமாய் இருக்கக்கூடாதே.
11 Vai arī no tā paša akas avota izverd salds un rūgts?
ஒரே ஊற்றிலிருந்து நல்ல தண்ணீரும் உப்புத் தண்ணீரும் சுரக்க முடியுமா?
12 Mani brāļi, vai vīģes koks var nest eļļas koka augļus, vai vīna koks vīģes? Tāpat aka nevar dot sāļu un saldu ūdeni.
எனக்கு பிரியமானவர்களே, அத்திமரம் ஒலிவப்பழங்களையும், திராட்சைக்கொடி அத்திப்பழங்களையும் விளைவிக்குமா? அதேபோல், உப்புத் தண்ணீர் ஊற்றிலிருந்து நல்ல தண்ணீர் வருவதுமில்லை.
13 Kurš ir gudrs un prātīgs starp jums? Tas lai rāda caur savu labo dzīvošanu savus darbus iekš lēnīgas gudrības.
உங்களுக்குள்ளே ஞானம் உள்ளவன் யார்? அறிவுள்ளவன் யார்? அவன் தன்னுடைய நல்ல வாழ்க்கையினாலே அதைக் காண்பிக்கட்டும். ஞானத்திலிருந்து வரும் மனத்தாழ்மையினால் செயல்களைச் செய்து காண்பிக்கட்டும்;
14 Bet ja jūs rūgtu bardzību un ienaidību turat savā sirdī, tad nelielāties un nemelojiet pret patiesību.
ஆனால், உங்களுடைய இருதயங்களிலே கசப்பான பொறாமையையும், சுயநல ஆசையையும் இருக்குமேயானால், அதைக்குறித்து பெருமைப்பட வேண்டாம், சத்தியத்திற்கு எதிராக பொய் பேசவேண்டாம்.
15 Šī nav tā gudrība, kas nāk no augšienes zemē, bet tā ir pasaules, dabas un velna gudrība.
அப்படிப்பட்ட ஞானம் பரலோகத்திலிருந்து வரும் ஒன்றல்ல; இது உலக ஞானம். இது ஆவிக்குரிய தன்மையற்றது. இது பிசாசினிடத்திலிருந்து வருகிறது.
16 Jo kur bardzība un ienaids, tur ir sajukšana un visāds ļaunums.
ஏனெனில் எங்கே பொறாமையும் சுயநல ஆசையும் இருக்கின்றதோ, அங்கே ஒழுங்கீனமும் எல்லாவிதத் தீயசெயல்களும் இருக்கின்றன.
17 Bet tā gudrība, kas ir no augšienes, papriekš ir šķīsta, pēc tam mierīga, lēna, paklausīga, pilna apžēlošanas un labu augļu, taisna un bez liekulības.
ஆனால் பரலோகத்திலிருந்து வருகிற ஞானமோ, முதலாவது தூய்மை உடையதாய் இருக்கிறது; அது சமாதானத்தை விரும்புகிறதும், தயவுடையதும், பணிவுடையதும், இரக்கம் நிறைந்ததும், நல்ல கனியினால் நிறைந்ததுமாய் இருக்கிறது; அது பாரபட்சமும் போலித்தன்மையற்றதுமாய் இருக்கிறது.
18 Bet taisnības auglis top sēts iekš miera tiem, kas mieru dara.
சமாதானத்தை உண்டுபண்ணுகிறவர்கள் சமாதானத்தின் விதையை விதைத்து, நீதியை அறுவடை செய்கிறார்கள்.

< Jēkaba Vēstule 3 >