< 시편 107 >

1 여호와께 감사하라! 그는 선하시며 그 인자하심이 영원함이로다
யெகோவாவை துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
2 여호와께 구속함을 받은 자는 이같이 말할지어다 여호와께서 대적의 손에서 저희를 구속하사
யெகோவாவால் எதிரியின் கைக்கு நீங்கலாக்கி மீட்கப்பட்டு,
3 동서 남북 각 지방에서부터 모으셨도다
கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமுள்ள பல தேசங்களிலுமிருந்து சேர்க்கப்பட்டவர்கள், அப்படிச் சொல்வார்களாக.
4 저희가 광야 사막 길에서 방황하며 거할 성을 찾지 못하고
அவர்கள் வாழும் ஊரைக்காணாமல், வனாந்திரத்திலே பாலைவனவழியாக,
5 주리고 목마름으로 그 영혼이 속에서 피곤하였도다
பசியாகவும், தாகமாகவும், ஆத்துமா சோர்ந்துபோனதாகவும் அலைந்து திரிந்தார்கள்.
6 이에 저희가 그 근심 중에 여호와께 부르짖으매 그 고통에서 건지시고
தங்களுடைய ஆபத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள், அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை மீட்டெடுத்தார்.
7 또 바른 길로 인도하사 거할 성에 이르게 하셨도다
வாழும் ஊருக்குப்போய்ச்சேர, அவர்களைச் செவ்வையான வழியிலே நடத்தினார்.
8 여호와의 인자하심과 인생에게 행하신 기이한 일을 인하여 그를 찬송할지로다
தாகமுள்ள ஆத்துமாவைக் யெகோவா திருப்தியாக்கி, பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறாரென்று,
9 저가 사모하는 영혼을 만족케 하시며 주린 영혼에게 좋은 것으로 채워주심이로다
அவருடைய கிருபையினிமித்தமும், மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக.
10 사람이 흑암과 사망의 그늘에 앉으며 곤고와 쇠사슬에 매임은
௧0தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாகக் கலகம்செய்து, உன்னதமான தேவனுடைய ஆலோசனையை அசட்டைசெய்தவர்கள்,
11 하나님의 말씀을 거역하며 지존자의 뜻을 멸시함이라
௧௧காரிருளிலும் மரண இருளிலும் வைக்கப்பட்டிருந்து, ஒடுக்கத்திலும் இரும்பிலும் கட்டப்பட்டு கிடந்தார்கள்.
12 그러므로 수고로 저희 마음을 낮추셨으니 저희가 엎드러져도 돕는 자가 없었도다
௧௨அவர்களுடைய இருதயத்தை அவர் வருத்தத்தால் தாழ்த்தினார்; உதவிசெய்ய ஒருவரும் இல்லாமல் விழுந்து போனார்கள்.
13 이에 저희가 그 근심 중에 여호와께 부르짖으매 그 고통에서 구원하시되
௧௩தங்களுடைய ஆபத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை நீங்கலாக்கிக் காப்பாற்றினார்.
14 흑암과 사망의 그늘에서 인도하여 내시고 그 얽은 줄을 끊으셨도다
௧௪காரிருளிலும் மரண இருளிலுமிருந்து அவர்களை வெளிப்படச்செய்து, அவர்களுடைய கட்டுகளை அறுத்தார்.
15 여호와의 인자하심과 인생에게 행하신 기이한 일을 인하여 그를 찬송할지로다
௧௫யெகோவா வெண்கலக் கதவுகளை உடைத்து, இரும்புத் தாழ்ப்பாள்களை முறித்தாரென்று,
16 저가 놋문을 깨뜨리시며 쇠빗장을 꺾으셨음이로다
௧௬அவருடைய கிருபையினிமித்தமும், மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக.
17 미련한 자는 저희 범과와 죄악의 연고로 곤난을 당하매
௧௭புத்தியீனரும் தங்களுடைய கலக வழிகளாலும் தங்களுடைய அக்கிரமங்களாலும் நோய்கொண்டு ஒடுங்கிப்போகிறார்கள்.
18 저희 혼이 각종 식물을 싫어하여 사망의 문에 가깝도다
௧௮அவர்களுடைய ஆத்துமா எல்லா உணவையும் வெறுக்கிறது, அவர்கள் மரணவாசல்கள் வரையிலும் நெருங்குகிறார்கள்.
19 이에 저희가 그 근심 중에서 여호와께 부르짖으매 그 고통에서 구원하시되
௧௯தங்களுடைய ஆபத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்; அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கிக் காப்பாற்றுகிறார்.
20 저가 그 말씀을 보내어 저희를 고치사 위경에서 건지시는도다
௨0அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்.
21 여호와의 인자하심과 인생에게 행하신 기이한 일을 인하여 그를 찬송할지로다
௨௧அவர்கள் யெகோவாவை அவருடைய கிருபையினிமித்தமும், மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து,
22 감사제를 드리며 노래하여 그 행사를 선포할지로다
௨௨நன்றிபலிகளைச் செலுத்தி, அவருடைய செயல்களை ஆனந்த சத்தத்தோடு விவரிப்பார்களாக.
23 선척을 바다에 띄우며 큰 물에서 영업하는 자는
௨௩கப்பலேறி, கடற்பயணம்செய்து, திரளான தண்ணீர்களிலே தொழில் செய்கிறார்களே,
24 여호와의 행사와 그 기사를 바다에서 보나니
௨௪அவர்கள் யெகோவாவுடைய செயல்களையும், ஆழத்திலே அவருடைய அதிசயங்களையும் காண்கிறார்கள்.
25 여호와께서 명하신즉 광풍이 일어나서 바다 물결을 일으키는도다
௨௫அவர் கட்டளையிட பெருங்காற்று எழும்பி, அதின் அலைகளைக் கொந்தளிக்கச்செய்யும்.
26 저희가 하늘에 올랐다가 깊은 곳에 내리니 그 위험을 인하여 그 영혼이 녹는도다
௨௬அவர்கள் வானத்தில் ஏறி, ஆழங்களில் இறங்குகிறார்கள், அவர்களுடைய ஆத்துமா துன்பத்தினால் கரைந்துபோகிறது.
27 저희가 이리 저리 구르며 취한 자 같이 비틀거리니 지각이 혼돈하도다
௨௭குடித்துவெறித்தவனைப்போல் அலைந்து தடுமாறுகிறார்கள்; அவர்களுடைய ஞானமெல்லாம் முழுகிப்போகிறது.
28 이에 저희가 그 근심 중에서 여호와께 부르짖으매 그 고통에서 인도하여 내시고
௨௮அப்பொழுது தங்களுடைய ஆபத்திலே அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்களுடைய இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார்.
29 광풍을 평정히 하사 물결로 잔잔케 하시는도다
௨௯கொந்தளிப்பை அமர்த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது.
30 저희가 평온함을 인하여 기뻐하는 중에 여호와께서 저희를 소원의 항구로 인도하시는도다
௩0அமைதி உண்டானதிற்காக அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்; தாங்கள் விரும்பிய துறைமுகத்தில் அவர்களைக் கொண்டுவந்து சேர்க்கிறார்.
31 여호와의 인자하심과 인생에게 행하신 기이한 일을 인하여 그를 찬송할지로다
௩௧அவர்கள் யெகோவாவை அவருடைய கிருபையினிமித்தமும், மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து,
32 백성의 회에서 저를 높이며 장로들의 자리에서 저를 찬송할지로다
௩௨மக்களின் சபையிலே அவரை உயர்த்தி, மூப்பர்களின் சங்கத்திலே அவரைப் போற்றுவார்களாக.
33 여호와께서는 강을 변하여 광야가 되게 하시며 샘으로 마른 땅이되게 하시며
௩௩அவர் ஆறுகளை வனாந்திரமாகவும், நீரூற்றுகளை வறண்ட இடமாகவும்,
34 그 거민의 악을 인하여 옥토로 염밭이 되게 하시며
௩௪குடிகளுடைய பொல்லாப்புக்காக செழிப்பான தேசத்தைத் தரிசு நிலமாகவும் மாற்றுகிறார்.
35 또 광야를 변하여 못이 되게 하시며 마른 땅으로 샘물이 되게 하시고
௩௫அவர் வனாந்திரவெளியைத் தண்ணீர் குளமாகவும், வறண்ட நிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றி,
36 주린 자로 거기 거하게 하사 저희로 거할 성을 예비케 하시고
௩௬பசித்தவர்களை அங்கே குடியேற்றுகிறார்; அங்கே அவர்கள் குடியிருக்கும் நகரத்தைக் கட்டி,
37 밭에 파종하며 포도원을 재배하여 소산을 취케 하시며
௩௭வயல்களை உண்டாக்கி விதைத்து, திராட்சைத்தோட்டங்களை நாட்டுகிறார்கள், அவைகள் வரத்துள்ள பலனைத் தரும்.
38 또 복을 주사 저희로 크게 번성케 하시고 그 가축이 감소치 않게 하실지라도
௩௮அவர்களை ஆசீர்வதிக்கிறார், மிகுதியும் பெருகுகிறார்கள்; அவர்களுடைய மிருகங்கள் குறையாமலிருக்கச்செய்கிறார்.
39 다시 압박과 곤란과 우환을 인하여 저희로 감소하여 비굴하게 하시는도다
௩௯பின்பு அவர்கள் இடுக்கத்தினாலும், ஆபத்தினாலும், துயரத்தினாலும் குறைவுபட்டுத் தாழ்வடைகிறார்கள்.
40 여호와께서는 방백들에게 능욕을 부으시고 길 없는 황야에서 유리케 하시나
௪0அவர் எதிரிகளின் தலைவர்கள்மேல் இகழ்ச்சிவரச்செய்து, வழியில்லாத வனாந்திர வெளியிலே அவர்களைத் திரியச்செய்து,
41 궁핍한 자는 곤란에서 높이 드시고 그 가족을 양무리 같게 하시나니
௪௧எளியவனையோ சிறுமையிலிருந்து எடுத்து, உயர்ந்த அடைக்கலத்திலே வைத்து, அவனுடைய வம்சங்களை மந்தையைப்போலாக்குகிறார்.
42 정직한 자는 보고 기뻐하며 모든 악인은 자기 입을 봉하리로다
௪௨உத்தமர்கள் அதைக்கண்டு மகிழுவார்கள்; நியாயக்கேடெல்லாம் தன்னுடைய வாயை மூடும்.
43 지혜 있는 자들은 이 일에 주의하고 여호와의 인자하심을 깨달으리로다
௪௩எவன் ஞானமுள்ளவனோ அவன் இவைகளைக் கவனிக்கட்டும்; ஞானவான்கள் யெகோவாவுடைய கிருபைகளை உணர்ந்துகொள்வார்கள்.

< 시편 107 >