< Mika 2 >

1 Mano kaka nobed malit ne joma chano timo richo, ka giriere e kitendinigi! Gokinyi ka chiengʼ wuok to gichopo chenrogi nikech gin gi teko mar timo kamano.
அக்கிரமத்தை யோசித்து, தங்கள் படுக்கைகளின்மேல் பொல்லாப்பு செய்ய திட்டமிட்டுத் தங்கள் கையில் வல்லமை இருக்கிறதினால், விடியற்காலமாகிறபோது அதைச் செயல்படுத்தி,
2 Gigombo puothe gi udi mag ji kendo gikawogi githuon. Giwuondo ngʼato ma gimaa dalane kendo kata anywolagi bende gimayo girkeni magi.
வயல்களை விரும்பி அவைகளைப் பறித்துக்கொண்டு, வீடுகளை விரும்பி அவைகளை எடுத்துக்கொண்டு, மனிதனையும் அவனுடைய வீட்டையும், குடும்பங்களையும் ஒடுக்குகிறவர்களுக்கு ஐயோ,
3 Emomiyo Jehova Nyasaye wacho kama: “Achano kelo chandruok ne jogi maonge ngʼama notony. Ok unuchak uwuothi gi ngʼayi nikech enobed kinde mar masira.
ஆகையால் யெகோவா: நான் இந்த வம்சத்தாருக்கு விரோதமாகத் தீமையை வரச்செய்ய நினைக்கிறேன்; அதிலிருந்து நீங்கள் தப்பமாட்டீர்கள்; நீங்கள் மேட்டிமையாக நடப்பதில்லை; அது தீமையான காலம்.
4 E ndalono ji nogou ngero; kendo ginichuognu wer malit mar kuyo ni: ‘Osetiekwa chuth, mwanduwa osepog jomoko nono. Eri omayowagi! Opogo puothewa ne joma ndhogowa.’”
அந்நாளில் உங்களை உதாரணமாகச்சொல்லி, நாம் முற்றிலும் பாழானோம்; நமது மக்களின் எல்லையை மாற்றிப்போட்டார்; எப்படியாக அதை என்னைவிட்டு நீக்கிப்போட்டார்! நமது வயல்களைப் பிடுங்கிப் பகிர்ந்துகொடுத்தாரே என்று துயரமான புலம்பலாகப் புலம்புவார்கள்.
5 Kuom mano ok unubed gi ngʼato kata achiel e chokruok mar Jehova Nyasaye ma nogo ombulu kipogo lowo.
யெகோவாவின் சபையில் நிலங்களை அளந்துகொடுக்கிறவர்கள் உனக்கு இல்லாதிருப்பார்கள்.
6 Jonabi mag-gi wacho niya, “Kik ukor wach. Kik ukor wach kuom gigi; wichkuot ok nomakwa.”
தீர்க்கதரிசனம் சொல்லாதிருப்பீர்களாக என்கிறார்கள்; அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள், இந்தவிதமாக அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லாவிட்டால் பழிச்சொல் நீங்காதே.
7 Yaye od Jakobo, inyalo wacho niya: “Bende Roho mar Jehova Nyasaye dikechi? Bende dotim gik ma kamago?” “Donge wechena timo maber ne ngʼatno ma yorene oriere?
யாக்கோபு வம்சம் என்று பெயர் பெற்றவர்களே, யெகோவாவின் ஆவி குறுகியிருக்கிறதோ? அவருடைய செயல்கள் இவைகள்தானோ? செம்மையாக நடக்கிறவனுக்கு என் வார்த்தைகள் நன்மை செய்யாதோ?
8 E ndalogi, joga oselokore wasik ji. Ulonyo oko lewni ma nengogi tek kuom joma kadho ka ok udewo, mana ka joma odwogo oa e lweny.
என் மக்கள் ஆரம்பம்முதல் எதிரியைப்போல் எழும்பினார்கள். போரிலிருந்து திரும்பிவந்து வழியில் பயப்படாமல் கடந்துபோகிறவர்களுடைய மேலங்கியையும் ஆடையையும் உரிந்துகொண்டீர்கள்.
9 Umonjo monde joga kendo uriembogi e miechgi mabeyo. Umayogi chuth gweth ma asegwedhogo nyithindgi.
என் மக்களின் பெண்களை அவர்களுடைய வசதியான வீடுகளிலிருந்து துரத்திவிட்டீர்கள்; அவர்களுடைய குழந்தைகளுக்கு இருந்த என் அலங்காரத்தை என்றைக்கும் இல்லாதபடிக்குப் பறித்துக்கொண்டீர்கள்.
10 Auru malo, dhiuru kucha! Nikech kae ok en kar yweyo maru, nimar odwanyore, kendo okethore ma ok nyal kony.
௧0எழுந்து போங்கள்; இது நீங்கள் இளைப்பாறும் இடம் அல்ல, இது தீட்டுப்பட்டது, இது உங்களை அழித்துவிடும், அந்த நாசம் மிகவும் கொடியதாக இருக்கும்.
11 Ka ja-miriambo ma jawuond obiro kawacho niya, ‘Abiro koronu wach mondo ubed gi divai gi kongʼo mangʼeny,’ to ngʼat makamano ema bedo janabi ma jogi ohero!
௧௧மனம்போகிற போக்கிலே போய், பொய்யானதைச் சொல்லுகிற ஒருவன், திராட்சைரசத்தையும் மதுபானத்தையும் குறித்து நான் உனக்குப் பிரசங்கிப்பேனென்றால், அவனே இந்த மக்களுக்கு ஏற்ற பிரசங்கியாக இருப்பான்.
12 “Abiro chokou un duto ma ok orem, yaye joka Jakobo; abiro kelo jo-Israel modongʼ kaachiel ma ok orem. Anakelgi kaachiel ka rombe manie abila, kendo kaka jamni manie lek. Kanyo nopongʼ gi ji.
௧௨யாக்கோபின் மக்களே, உங்களெல்லோரையும் நான் நிச்சயமாகக் கூட்டுவேன், இஸ்ரவேலின் மீதியானவர்களை நிச்சயமாகச் சேர்ப்பேன்; போஸ்றாவின் ஆடுகளைப்போல் அவர்களை ஒரே கூட்டமாக்குவேன், தன் தொழுவத்திற்குள்ளே சேர்ந்த மந்தைக்குச் சமமாக மக்கள் கூட்டத்தினாலே இரைச்சல் உண்டாகும்.
13 Jal mayawo yore modinore nodhi nyimgi kotelonegi. Ginimuom rangach mi gitony. Ruodhgi nokwong okadh kotelonegi. Jehova Nyasaye notelnegi.”
௧௩தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்களுடைய தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்களுடைய ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார், யெகோவா அவர்களுக்கு முன்பாக நடந்துபோவார்.

< Mika 2 >