< ⲖⲞⲨⲔⲞⲚ 23 >

1 ⲁ̅ ⲁⲩⲱ ⲁⲩⲧⲱⲟⲩⲛ ⲛ̅ϭⲓⲡⲙⲏⲏⲏϣⲉ ⲧⲏⲣϥ̅ ⲁⲩⲛⲧϥ ⲉⲣⲁⲧϥ ⲙ̅ⲡⲉⲓⲗⲁⲧⲟⲥ.
அவர்களுடைய கூட்டத்தாரெல்லோரும் எழுந்திருந்து, அவரைப் பிலாத்துவினிடத்திற்குக் கொண்டுபோய்:
2 ⲃ̅ ⲁⲩⲁⲣⲭⲓ ⲇⲉ ⲛ̅ⲕⲁⲧⲏⲅⲟⲣⲓ ⲙⲙⲟϥ ⲉⲩϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ⲁⲛϩⲉ ⲉⲡⲁⲓ̈ ⲉϥϣⲧⲟⲣⲧⲣ̅ ⲙ̅ⲡⲉⲛϩⲉⲑⲛⲟⲥ ⲁⲩⲱ ⲉϥⲕⲱⲗⲩ ⲉϯϣⲱⲙ ⲙ̅ⲡⲣⲣⲟ ⲉϥϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ⲁⲛⲅ̅ⲡⲣ̅ⲣⲟ ⲡⲉⲭ̅ⲥ̅.
இவன் தன்னைக் கிறிஸ்து என்னப்பட்ட ராஜாவென்றும், ராயருக்கு வரிகொடுக்க வேண்டியதில்லையென்றும் சொல்லி, மக்களைக் கலகப்படுத்தக் கண்டோம் என்று அவர்மேல் குற்றஞ்சுமத்தத் தொடங்கினார்கள்.
3 ⲅ̅ ⲁⲡⲓⲗⲁⲧⲟⲥ ⲇⲉ ϫⲛⲟⲩϥ ⲉϥϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ. ⲛ̅ⲧⲟⲕ ⲡⲉ ⲡⲣ̅ⲣⲟ ⲛ̅ⲓ̈ⲟⲩⲇⲁⲓ̈ ⲛ̅ⲧⲟϥ ⲇⲉ ⲁϥⲟⲩⲱϣⲃ̅ ⲉϥϫⲱ ⲙ̅ⲙⲟⲥ ϫⲉ ⲛⲧⲟⲕ ⲡⲉⲧϫⲱ ⲙ̅ⲙⲟⲥ.
பிலாத்து அவரைப் பார்த்து: நீ யூதர்களுடைய ராஜாவா என்று கேட்டான். அவர் அவனுக்கு மறுமொழியாக; நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.
4 ⲇ̅ ⲡⲉϫⲉⲡⲓⲗⲁⲧⲟⲥ ⲙ̅ⲡⲙⲏⲏϣⲉ ϫⲉ ⲛ̅ϯϭⲛ̅ⲗⲁⲁⲩ ⲁⲛ ⲛⲛⲟⲃⲉ ϩⲙⲡⲉⲓ̈ⲣⲱⲙⲉ.
அப்பொழுது பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் மக்களையும் பார்த்து: இந்த மனிதனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை என்றான்.
5 ⲉ̅ ⲛⲧⲟⲟⲩ ⲇⲉ ⲁⲩⲧⲱⲕ ⲉϩⲟⲩⲛ ⲉⲩϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ϥϣⲧⲟⲣⲧⲣ ⲙⲡⲗⲁⲟⲥ ⲉϥϯⲥⲃⲱ ϩⲛ̅ϯ(ⲟⲩ)ⲇⲁⲓⲁ ⲧⲏⲣⲥ̅. ⲉⲁϥⲁⲣⲭⲓ ϫⲓⲛⲧⲅⲁⲗⲓⲗⲁⲓⲁ ϣⲁϩⲣⲁⲓ̈ ⲉⲡⲉⲓ̈ⲙⲁ.
அதற்கு அவர்கள்: இவன் கலிலேயா நாடுதொடங்கி இந்த இடம்வரைக்கும் யூதேயா தேசமெங்கும் உபதேசம் செய்து, மக்களைக் கலகப்படுத்துகிறான் என்று வைராக்கியத்தோடு சொன்னார்கள்.
6 ⲋ̅ ⲡⲓⲗⲁⲧⲟⲥ ⲇⲉ ⲛ̅ⲧⲉⲣⲉϥⲥⲱⲧⲙ̅ ϫⲉ ⲧⲅⲁⲗⲓⲗⲁⲓⲁ ⲁϥϣⲓⲛⲉ ϫⲉ ⲟⲩⲅⲁⲗⲓⲗⲁⲓⲟⲥ ⲡⲉ ⲡⲣⲱⲙⲉ.
கலிலேயா என்பதைப் பிலாத்து கேட்டபொழுது, இந்த மனிதன் கலிலேயனா என்று விசாரித்து,
7 ⲍ̅ ⲁⲩⲱ ⲛ̅ⲧⲉⲣⲉϥⲓ̈ⲙⲉ ϫⲉ ⲟⲩⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲧⲉⲝⲟⲩⲥⲓⲁ ⲛ̅ϩⲏⲣⲱⲇⲏⲥ ⲡⲉ ⲁϥϫⲟⲟⲩϥ ϣⲁϩⲏⲣⲱⲇⲏⲥ ⲉϥϩⲛⲑⲓⲉⲣⲟⲩⲥⲁⲗⲏⲙ ϩⲱⲱϥ ϩⲛ̅ⲛⲉⲓ̈ϩⲟⲟⲩ.
அவர் ஏரோதின் அதிகாரத்திற்குள்ளானவர் என்று அறிந்து, அந்த நாட்களிலே எருசலேமிலே வந்திருந்த ஏரோதுவினிடத்திற்கு அவரை அனுப்பினான்.
8 ⲏ̅ ⲛⲧⲉⲣⲉϩⲏⲣⲱ(ⲇⲏⲥ) ⲇⲉ ⲛⲁⲩ ⲉⲓ̅ⲥ̅ ⲁϥⲣⲁϣⲉ ⲉⲙⲁⲧⲉ ⲛⲉϥⲟⲩⲉϣⲛⲁⲩ ⲅⲁⲣ ⲉⲣⲟϥ ⲡⲉ ϩⲓⲧⲛϩⲉⲛⲛⲟϭ ⲛⲟⲩⲟⲓ̈ϣ ϫⲉ ⲛⲉϥⲥⲱⲧⲙ̅ ⲉⲧⲃⲏⲏⲧϥ̅ ⲁⲩⲱ ⲛⲉϥϩⲉⲗⲡⲓⲍⲉ ⲉⲛⲁⲩ ⲉⲩⲙⲁⲉⲓⲛ ⲉϥⲓ̈ⲣⲉ ⲙ̅ⲙⲟϥ.
ஏரோது இயேசுவைக்குறித்து அநேக காரியங்களைக் கேள்விப்பட்டிருந்ததினாலும், அவரால் செய்யப்படும் அடையாளத்தைப் பார்க்கவேண்டுமென்று விரும்பியிருந்ததினாலும், அவரைக் காணும்படி வெகுநாளாக ஆசைகொண்டிருந்தான். அந்தப்படி அவரைப் பார்த்தபோது, மிகவும் சந்தோஷப்பட்டு,
9 ⲑ̅ ⲁϥϫⲛⲟⲩϥ ⲇⲉ ϩⲛϩⲉⲛⲙⲏⲏϣⲉ ⲛϣⲁϫⲉ ⲛ̅ⲧⲟϥ ⲇⲉ ⲙⲡ(ϥ)ⲟⲩⲱϣⲃⲉϥⲗⲁⲁⲩ.
அநேக காரியங்களைக்குறித்து, அவரிடத்தில் கேள்வி கேட்டான். அவர் மறுமொழியாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை.
10 ⲓ̅ ⲛⲉⲩⲁϩⲉ ⲇⲉ ⲉⲣⲁⲧⲟⲩ ⲡⲉ ⲛ̅ϭⲓⲛⲁⲣⲭⲓⲉⲣⲉⲩⲥ ⲛⲙ̅ⲛⲉⲅⲣⲁⲙⲙⲁⲧⲉⲩⲥ ⲉⲩⲕⲁⲧⲏⲅⲟⲣⲓ ⲙ̅ⲙⲟϥ ⲉⲙⲁⲧⲉ.
௧0பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் அவர்மேல் பிடிவாதமாகக் குற்றஞ்சுமத்திக்கொண்டே நின்றார்கள்.
11 ⲓ̅ⲁ̅ ⲁϩⲏⲣⲱⲇⲏⲥ ⲇⲉ ⲥⲟϣϥ̅ ⲛⲙⲛⲉϥⲥⲧⲣⲁⲧⲉⲩⲙⲁ ⲁⲩⲱ ⲁⲩⲥⲱⲃⲉ ⲙⲙⲟϥ ⲁⲩϭⲟⲟⲗⲉϥ ⲛⲟⲩϩⲃⲥⲱ ⲉⲥⲟⲩⲟⲃⲉϣ ⲁⲩϫⲟⲟⲩϥ ⲙⲡⲓⲗⲁⲧⲟⲥ.
௧௧அப்பொழுது ஏரோது தன் போர் வீரர்களோடுகூட அவரை நிந்தித்து, கேலிசெய்து மினுக்கான ஆடையை அவருக்கு அணிந்து, அவரைத் திரும்பப் பிலாத்துவினிடத்திற்கு அனுப்பினான்.
12 ⲓ̅ⲃ̅ ⲁⲩⲣϣⲃⲏⲣ ⲉⲛⲉⲩⲉⲣⲏⲟⲩ ϩⲙ̅ⲡⲉϩⲟⲟⲩ ⲉⲧⲙ̅ⲙⲁⲩ ⲛ̅ϭⲓϩⲏⲣⲱⲇⲏⲥ ⲛⲙⲡⲓⲗⲁⲧⲟⲥ. ⲛⲉⲩϣⲟⲟⲡ ⲅⲁⲣ ⲡⲉ ϩⲛⲟⲩⲙⲛⲧ̅ϫⲁϫⲉ ⲛⲙⲛⲉⲩⲉⲣⲏⲩ.
௧௨முன்னே ஒருவருக்கொருவர் விரோதிகளாக இருந்த பிலாத்துவும் ஏரோதும் அன்றையதினம் நண்பர்களானார்கள்.
13 ⲓ̅ⲅ̅ ⲁⲡⲓⲗⲁⲧⲟⲥ ⲇⲉ ⲙⲟⲩⲧⲉ ⲉⲛⲁⲣⲭⲓⲉⲣⲉⲩⲥ ⲛⲙⲛ̅ⲛⲁⲣⲭⲱⲛ ⲛⲙⲡⲗⲁⲟⲥ
௧௩பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் அதிகாரிகளையும் மக்களையும் கூடிவரச்செய்து,
14 ⲓ̅ⲇ̅ ⲉϥϫⲱ ⲙⲙⲟⲥ ⲛⲁⲩ ϫⲉ. ⲁⲧⲉⲧⲛⲓ̈ⲛⲉ ⲛⲁⲓ̈ ⲙ̅ⲡⲉⲓ̈ⲣⲱⲙⲉ ϩⲱⲥ ⲉϥϣⲧⲟⲣⲧⲣ ⲙⲡⲗⲁⲟⲥ. ⲉⲓⲥϩⲏⲏⲧⲉ ⲇⲉ ⲁⲓ̈ⲕⲣⲓⲛⲉ ⲙⲙⲟϥ ⲙⲡⲉⲧⲛⲙⲧⲟ ⲉⲃⲟⲗ ⲙⲡⲓϩⲉ ⲉⲗⲁⲁⲩ ⲛⲛⲟⲃⲉ ⲛ̅ϩⲏⲧϥ̅ ⲛⲁⲓ̈ ⲉⲧⲉⲧⲛⲕⲁⲧⲏⲅⲟⲣⲓ ⲙⲙⲟϥ ⲛϩⲏⲧⲟⲩ.
௧௪அவர்களைப் பார்த்து: மக்களைக் கலகத்திற்குத் தூண்டிவிடுகிறவனாக இந்த மனிதனை என்னிடத்தில் கொண்டுவந்தீர்கள்; நான் உங்களுக்கு முன்பாக விசாரித்தபோது, இவன்மேல் நீங்கள் சாட்டுகிற குற்றங்களில் ஒன்றையும் நான் இவனிடத்தில் காணவில்லை.
15 ⲓ̅ⲉ̅ ⲁⲗⲗⲁ ⲙ̅ⲡⲉⲡⲕⲉϩⲏⲣⲱⲇⲏⲥ ϩⲉ ⲉⲟⲩⲟⲛ ⲉϩⲟⲩⲛ ⲉⲣⲟϥ. ⲁϥⲧⲛ̅ⲛⲟⲟⲩϥ ⲅⲁⲣ ⲛⲁⲛ. ⲁⲩⲱ ⲉⲓⲥϩⲏⲏⲧⲉ ⲙ̅ⲡϥ̅ⲣ̅ⲗⲁⲁⲩ ⲉϥⲙ̅ⲡϣⲁ ⲙ̅ⲡⲙⲟⲩ.
௧௫உங்களை ஏரோதினிடத்திற்கும் அனுப்பினேன்; அவரும் இவனிடத்தில் குற்றம் காணவில்லை; மரணத்திற்கு ஏதுவாக இவன் ஒன்றும் செய்யவில்லையே.
16 ⲓ̅ⲋ̅ ϯⲛⲁⲡⲁⲓⲇⲉⲩⲉ ϭⲉ ⲙ̅ⲙⲟϥ ⲧⲁⲕⲁⲁϥ ⲉⲃⲟⲗ.
௧௬எனவே இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான்.
17 ⲓ̅ⲍ̅
௧௭பண்டிகைதோறும் அவர்களுக்கு ஒருவனை அவன் விடுதலையாக்குவது வழக்கமாக இருந்தபடியால் அப்படிச் சொன்னான்.
18 ⲓ̅ⲏ̅ ⲁⲩϫⲓϣⲕⲁⲕ ⲇⲉ ⲉⲃⲟⲗ ⲧⲏⲣⲟⲩ ⲉⲩϫⲱ ⲙ̅ⲙⲟⲥ ϫⲉ ϥⲓⲡⲁⲓ̈. ⲕⲱ ⲛⲁⲛ ⲉⲃⲟⲗ ⲃ̅ⲃⲁⲣⲁⲃⲃⲁⲥ
௧௮மக்களெல்லோரும் அதைக்கேட்டு: இவனை அகற்றும், பரபாசை எங்களுக்கு விடுதலையாக்கும் என்று சத்தமிட்டுக்கேட்டார்கள்.
19 ⲓ̅ⲑ̅ ⲡⲁⲓ̈ ⲉⲛⲧⲁⲩⲛⲟϫϥ ⲉⲡⲉϣⲧⲉⲕⲟ ⲉⲧⲃⲉⲟⲩⲥⲧⲁⲥⲓⲥ ⲉⲁⲥϣⲱⲡⲉ ϩⲛ̅ⲧⲡⲟⲗⲉⲓⲥ ⲛⲙ̅ⲟⲩϩⲱⲧⲃ̅.
௧௯அந்த பரபாஸ் என்பவன் நகரத்தில் நடந்த ஒரு கலவரத்தினிமித்தமும் கொலை குற்றத்தினிமித்தமும் காவலிலே வைக்கப்பட்டிருந்தான்.
20 ⲕ̅ ⲁⲡⲉⲓⲗⲁⲧⲟⲥ ⲇⲉ ⲟⲛ ϣⲁϫⲉ ⲛⲙ̅ⲙⲁⲩ ⲉϥⲟⲩⲱϣ ⲉⲕⲁⲓ̅ⲥ̅ ⲉⲃⲟⲗ
௨0பிலாத்து இயேசுவை விடுதலையாக்க விரும்பி, மறுபடியும் அவர்களிடத்தில் பேசினான்.
21 ⲕ̅ⲁ̅ ⲛ̅ⲧⲟⲟⲩ ⲇⲉ ⲁⲩⲁϣⲕⲁⲕ ⲉⲃⲟⲗ ⲉⲣⲟϥ ⲉⲩϫⲱ ⲙ̅ⲙⲟⲥ ϫⲉ. ⲥxⲟⲩ ⲙ̅ⲙⲟϥ ⲥxⲟⲩ ⲙⲙⲟϥ.
௨௧அவர்களோ: அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று கூச்சலிட்டார்கள்.
22 ⲕ̅ⲃ̅ ⲡⲉϫⲁϥ ⲛⲁⲩ ⲙⲡⲙⲉϩϣⲟⲙⲛ̅ⲧ ⲛ̅ⲥⲟⲡ. ϫⲉ ⲟⲩ ⲅⲁⲣ ⲡⲉ ⲡ̅ⲡⲉⲑⲟⲟⲩ ⲉⲛⲧⲁⲡⲁⲓ̈ ⲁⲁϥ ⲙ̅ⲡⲓϩⲉ ⲉⲗⲁⲁⲩ ⲙ̅ⲙⲟⲩ ⲉⲣⲟϥ. ϯⲛⲁⲡⲁⲓⲇⲉⲩⲉ ϭⲉ ⲙ̅ⲙⲟϥ ⲧⲁⲕⲁⲁϥ ⲉⲃⲟⲗ.
௨௨அவன் மூன்றாம்முறை அவர்களைப் பார்த்து: ஏன், இவன் என்ன குற்றம் செய்தான்? மரணத்திற்கு ஏதுவான குற்றம் ஒன்றும் இவனிடத்தில் நான் காணவில்லையே; ஆகவே, நான் இவனை தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான்.
23 ⲕ̅ⲅ̅ ⲛ̅ⲧⲟⲟⲩ ⲇⲉ ⲁⲩⲙⲟⲩⲛ ⲉⲃⲟⲗ ϩⲛϩⲉⲛⲛⲟϭ ⲛ̅ⲥⲙⲏ ⲉⲩⲁⲓⲧⲓ ϫⲉ ⲥxⲟⲩ ⲙ̅ⲙⲟϥ. ⲁⲩⲱ ⲛⲉⲣⲉⲛⲉⲩⲥⲙⲏ ϭⲙ̅ϭⲟⲙ.
௨௩அப்படியிருந்தும் அவரை சிலுவையில் அறையவேண்டுமென்று அவர்கள் உரத்த சத்தத்தோடு கேட்டுக்கொண்டேயிருந்தார்கள். அவர்களும் பிரதான ஆசாரியர்களும் இட்ட சத்தம் மேற்கொண்டது.
24 ⲕ̅ⲇ̅ ⲁⲡⲉⲓⲗⲁⲧⲟⲥ ⲇⲉ ⲕⲣⲓⲛⲉ ⲉⲉ͡ⲓⲣⲉ ⲙ̅ⲡⲉⲩⲁⲓⲧⲏⲙⲁ.
௨௪அப்பொழுது அவர்கள் கேட்டுக்கொண்டபடியே ஆகட்டும் என்று பிலாத்து தீர்ப்புசெய்து,
25 ⲕ̅ⲉ̅ ⲁϥⲕⲱ ⲉⲃⲟⲗ ⲙ̅ⲡⲉⲛⲧⲁⲩⲛⲟϫϥ ⲉⲡⲉϣⲧⲉⲕⲟ ⲉⲧⲃⲉⲧⲉⲥⲧⲁⲥⲓⲥ ⲛⲙ̅ⲫⲱⲧⲃ̅ ⲡⲉⲧⲉⲛⲉⲩⲁⲓⲧⲓ ⲙ̅ⲙⲟϥ. ⲁϥϯ ⲇⲉ ⲛ̅ⲓ̅ⲥ̅ ⲙⲡⲉⲩⲟⲩⲱϣ
௨௫கலவரத்தினிமித்தமும் கொலைக் குற்றத்தினிமித்தமும் காவலில் போடப்பட்டிருந்த பரபாசை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே விடுதலையாக்கி, இயேசுவையோ அவர்கள் விருப்பத்திற்கு ஒப்புக்கொடுத்தான்.
26 ⲕ̅ⲋ̅ ⲁⲩⲱ ⲉⲩϫⲓ ⲙ̅ⲙⲟϥ ⲉⲃⲟⲗ ⲁⲩⲁⲙⲁϩⲧⲉ ⲛ̅ⲟⲩⲕⲩⲣⲏⲛⲁⲓⲟⲥ ϫⲉ ⲥⲓⲙⲱⲛ. ⲉϥⲛⲏⲟⲩ ⲉϩⲣⲁⲓ̈ ϩⲛⲧⲥⲱϣⲉ ⲁⲩⲧⲁⲗⲉⲡⲉϥⲥxⲟⲥ ⲉϫⲱϥ (ⲉϥⲓⲧϥ) ϩⲓⲡⲁϩⲟⲩ ⲛ̅ⲓ̅ⲥ̅.
௨௬அவர்கள் இயேசுவைக் கொண்டுபோகிறபோது, நாட்டிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோன் என்கிற ஒருவனைப் பிடித்து, சிலுவையை அவருக்குப் பின்னே சுமந்துகொண்டுவரும்படி அதை அவன்மேல் வைத்தார்கள்.
27 ⲕ̅ⲍ̅ ⲛⲉⲣⲉⲟⲩⲙⲏⲏϣⲉ ⲇⲉ ⲙ̅ⲡⲗⲁⲟⲥ ⲟⲩⲏϩ ⲛ̅ⲥⲱϥ ⲛⲙⲛⲉϩⲓⲟⲙⲉ ⲛⲁⲓ̈ ⲉⲛⲉⲩⲛⲉϩⲡⲉ ⲡⲉ ⲁⲩⲱ ⲛⲉⲩⲧⲟⲓ̈ⲧʾ ⲉⲣⲟϥ.
௨௭திரள்கூட்டமான மக்களும் அவருக்காகப் கதறி அழுகிற பெண்களும் அவருக்குப் பின்னே சென்றார்கள்.
28 ⲕ̅ⲏ̅ ⲁⲓ̅ⲥ̅ ⲇⲉ ⲕⲟⲧϥ ⲉⲡⲁϩⲟⲩ ⲡⲉϫⲁϥ ⲛⲁⲩ ϫⲉ ⲛ̅ϣⲉⲉⲣⲉ ⲛ̅ⲑⲓⲉⲣⲟⲩⲥⲁⲗⲏⲙ ⲙ̅ⲡⲣⲣⲓⲙⲉ ⲛⲁⲓ̈. ⲡⲗⲏⲛ ⲣⲓⲙⲉ ⲛ̅ⲧⲟϥ ⲛⲏⲧⲛ ⲛⲙⲛⲉⲧⲛ̅ϣⲏⲣⲉ
௨௮இயேசு அவர்கள் பக்கமாகத் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்களுடைய பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்.
29 ⲕ̅ⲑ̅ ϫⲉ ⲉⲓⲥϩⲏⲏⲧⲉ ⲟⲩⲛϩⲉⲛϩⲟⲟⲩ ⲛⲏⲟⲩ ⲛⲥⲉϫⲟⲟⲥ ⲛ̅ϩⲏⲧⲟⲩ ϫⲉ ⲛⲁⲓ̈ⲁⲧⲟⲩ ⲛ̅ⲛⲁϭⲣⲏⲛ. ⲛⲙ̅ⲛ̅ϩⲏ ⲉⲧⲉⲙ̅ⲡⲟⲩⲙⲓⲥⲉ ⲛⲙⲛⲉⲕⲓⲃⲉ ⲉⲧⲉⲙ̅ⲡⲟⲩⲧⲥⲛⲕⲟ.
௨௯இதோ, மலடிகள் பாக்கியவதிகளென்றும், பிள்ளைபெறாத கர்ப்பங்களும் பால்கொடாத மார்பகங்களும் பாக்கியமுள்ளவைகளென்றும் சொல்லப்படும் நாட்கள் வரும்.
30 ⲗ̅ ⲧⲟⲧⲉ ⲥⲉⲛⲁⲁⲣⲭⲓ ⲛ̅ϫⲟⲟⲥ ⲛⲛ̅ⲧⲟⲟⲩ ϫⲉ ϩⲉ ⲉϩⲣⲁⲓ̈ ⲉϫⲱⲛ ⲁⲩⲱ ⲛⲥⲓⲃⲉⲧ ϫⲉ ϩⲟⲃⲥⲛ.
௩0அப்பொழுது மலைகளைப் பார்த்து: எங்களின்மேல் விழுங்களென்றும், குன்றுகளைப் பார்த்து: எங்களை மறைத்துக்கொள்ளுங்களென்றும் சொல்லத்தொடங்குவார்கள்.
31 ⲗ̅ⲁ̅ ϫⲉ ⲉϣϫⲉⲥⲉⲉ͡ⲓⲣⲉ ⲛⲛⲁⲓ̈ ϩⲙ̅ⲡϣⲉ ⲉⲧⲟⲩⲱⲧʾ ⲉⲉⲓ̈ⲉ ⲟⲩ ⲡⲉⲧⲛⲁϣⲱⲡⲉ ϩⲙ̅ⲡⲉⲧʾϣⲟⲩⲱⲟⲩ.
௩௧பச்சைமரத்திற்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்திற்கு என்ன செய்யமாட்டார்கள்” என்றார்.
32 ⲗ̅ⲃ̅ ⲁⲩⲛⲕⲉⲥⲟⲟⲛⲉ ⲇⲉ ⲥⲛⲁⲩ ⲉⲃⲟⲗ ⲉⲙⲟⲟⲩⲧⲟⲩ ⲛⲙ̅ⲙⲁϥ
௩௨குற்றவாளிகளாகிய வேறு இரண்டுபேரும் அவரோடுகூடக் கொலைசெய்யப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்கள்.
33 ⲗ̅ⲅ̅ ⲁⲩⲱ ⲛ̅ⲧⲉⲣⲟⲩⲉ͡ⲓ ⲉϫⲙ̅ⲡⲙⲁ ⲉϣⲁⲩⲙⲟⲩⲧⲉ ⲉⲣⲟϥ ϫⲉ ⲡⲉⲕⲣⲁⲛⲓⲟⲛ ⲁⲩⲥxⲟⲩ ⲙ̅ⲙⲟϥ ⲛⲙ̅ⲙⲁⲩ ⲛⲙ̅ⲡⲕⲉⲥⲟⲟⲛⲉ ⲥⲛⲁⲩ. ⲟⲩⲁ ⲙⲉⲛ ϩⲓⲟⲩⲛⲁⲙ ⲙ̅ⲙⲟϥ. ⲟⲩⲁ ⲇⲉ ϩⲓϩⲃⲟⲩⲣ ⲙ̅ⲙⲟϥ.
௩௩கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அங்கே அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள்.
34 ⲗ̅ⲇ̅ ⲁⲩⲡⲱϣ ⲛⲛⲉϥϩⲟⲓ̈ⲧⲉ ⲁⲩⲱ ⲁⲩⲛⲉϫⲕⲗⲏⲣⲟⲥ ⲉϫⲱⲟⲩ.
௩௪அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய ஆடைகளை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்.
35 ⲗ̅ⲉ̅ ⲁⲩⲱ ⲛⲉⲣⲉⲡⲗⲁⲟⲥ ⲡⲉ ⲁϩⲉⲣⲁⲧϥ̅ ⲉⲩⲛⲁⲩ ⲡⲉ. ⲁⲛⲕⲉⲁⲣⲭⲱⲛ ⲇⲉ ⲕⲱⲙϣ̅ ⲛⲥⲱϥ ⲉⲩϫⲱ ⲙ̅ⲙⲟⲥ ϫⲉ. ⲁϥⲧⲟⲩϫⲉϩⲉⲛⲕⲟⲟⲩⲉ ⲙⲁⲣⲉϥⲧⲟⲩϫⲟϥ. ⲉϣϫⲉⲡⲁⲓ̈ ⲡⲉ ⲡⲉⲭ̅ⲥ̅ ⲡⲥⲱⲧⲡ̅ ⲡϣⲏⲣⲉ ⲙ̅ⲡⲛⲟⲩⲧⲉ.
௩௫மக்கள் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களோடு அதிகாரிகளும் அவரை ஏளனம்செய்து: இவன் மற்றவர்களை இரட்சித்தான், இவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்துவானால், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ளட்டும் என்றார்கள்.
36 ⲗ̅ⲋ̅ ⲁⲛⲕⲉⲙⲁⲧⲟⲓ̈ ⲇⲉ ⲥⲱⲃⲉ ⲛ̅ⲥⲱϥ ⲉⲩϯ ⲙ̅ⲡⲉⲩⲟⲩⲟⲓ̈ ⲉⲣⲟϥ ⲛⲙ̅ⲟⲩϩⲙ̅ϫ
௩௬போர்வீரர்களும் அவரிடத்தில் சேர்ந்து, அவருக்குக் காடியைக் கொடுத்து:
37 ⲗ̅ⲍ̅ ⲉⲩϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ⲉϣϫⲉⲛ̅ⲧⲟⲕ ⲡⲉ ⲡⲣ̅ⲣⲟ ⲛ̅ⲓ̈ⲟⲩⲇⲁⲓ̈ ⲙⲁⲧⲟⲩϫⲟⲕ.
௩௭நீ யூதர்களின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள் என்று அவரைக் கேலிசெய்தார்கள்.
38 ⲗ̅ⲏ̅ ⲛⲉⲩⲛ̅ⲟⲩ(ⲉ)ⲡⲓⲅⲣⲁⲫⲏ ⲇⲉ ϩⲓϫⲱϥ ϫⲉ ⲡⲁⲓ̈ ⲡⲉ ⲡⲣ̅ⲣⲟ ⲛ̅ⲓ̈ⲟⲩⲇⲁⲓ̈
௩௮இவன் யூதர்களுடைய ராஜா என்று, கிரேக்கு, லத்தீன், எபிரெயு எழுத்துக்களில் எழுதி, அவருக்கு மேலாக வைக்கப்பட்டது.
39 ⲗ̅ⲑ̅ ⲛⲉⲩⲛⲟⲩⲁ ⲇⲉ ⲛⲛ̅ⲥⲟⲟⲛⲉ ⲉⲧⲁϣⲉ ϫⲓⲟⲩⲁ ⲉⲣⲟϥ ⲉϥϫⲱ ⲙ̅ⲙⲱⲥ ϫⲉ. ⲙⲏ ⲛ̅ⲧⲟⲕ ⲁⲛ ⲡⲉ ⲡⲉⲭ̅ⲥ̅. ⲙⲁⲧⲟⲩϫⲟⲕ ⲛⲙ̅ⲙⲁⲛ.
௩௯அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இழிவாகப் பேசினான்.
40 ⲙ̅ ⲁⲡⲕⲉⲟⲩⲁ ⲇⲉ ⲟⲩⲱϣⲃ̅ ⲉϥⲁⲓⲡⲓⲧⲓⲙⲁ ⲛⲁϥ ⲉϥϫⲱ ⲙ̅ⲙⲟⲥ ϫⲉ. ⲛ̅ⲕⲣ̅ϩⲟⲧⲉ ⲛ̅ⲧⲟⲕ ⲁⲛ ϩⲏⲧϥ̅ ⲙ̅ⲡⲛⲟⲩⲧⲉ ϫⲉ ⲉⲛϣⲟⲟⲡ ⲙ̅ⲡⲉⲓ̈ⲕⲣⲓⲙⲁ ⲟⲩⲱⲧʾ
௪0மற்றவன் அவனைப் பார்த்து: நீ இந்த தண்டனைக்குட்பட்டவனாக இருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?
41 ⲙ̅ⲁ̅ ⲁⲛⲟⲛ ⲅⲁⲣ ⲇⲓⲕⲁⲓⲱⲥ ⲡⲉⲙⲡϣⲁ ⲅⲁⲣ ⲛ̅ⲛⲉⲛⲧⲁⲛⲁⲁⲩ ⲡⲉⲧⲛⲛⲁϫⲓ ⲙ̅ⲙⲟϥ ⲡⲁⲓ̈ ⲇⲉ ⲙ̅ⲡϥ̅ⲣ̅ⲗⲁⲁⲩ ⲛ̅ϩⲱⲃ ⲉⲙⲉϣϣⲉ.
௪௧நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் செய்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் செய்யவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு,
42 ⲙ̅ⲃ̅ ⲁⲩⲱ ⲡⲉϫⲁϥ ϫⲉ ⲓ̅ⲥ̅ ⲁⲣⲓⲡⲁⲙⲉⲩⲉ ⲡϫⲟⲉⲓⲥ ⲉⲕϣⲁⲛⲉ͡ⲓ ϩⲛ̅ⲧⲉⲕⲙⲛ̅ⲧⲉⲣⲟ.
௪௨இயேசுவைப் பார்த்து: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.
43 ⲙ̅ⲅ̅ ⲡⲉϫⲁϥ ⲇⲉ ⲛⲁϥ ϫⲉ. ϩⲁⲙⲏⲛ ϯϫⲱ ⲙ̅ⲙⲟⲥ ⲛⲁⲕ ⲙ̅ⲡⲟⲟⲩ ϫⲉ ⲕⲛⲁϣⲱⲡⲉ ⲛⲙ̅ⲙⲁⲓ̈ ϩⲙ̅ⲡ̅ⲡⲁⲣⲁⲇⲓⲥⲟⲥ.
௪௩இயேசு அவனைப் பார்த்து: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
44 ⲙ̅ⲇ̅ ⲛⲉⲡⲛⲁⲩ ⲇⲉ (ⲛ̅)ϫⲡ̅ⲡⲥⲟ ⲡⲉ. ⲁⲩⲕⲁⲕⲉ ϣⲱⲡⲉ ⲉϫⲙ̅ⲡⲕⲁϩ ⲧⲏⲣϥ̅ ϣⲁϫⲡ̅ⲯⲓⲧⲉ.
௪௪அப்பொழுது ஏறக்குறைய பகல் பன்னிரண்டு மணியாக இருந்தது; மூன்று மணிவரைக்கும் பூமியெங்கும் இருளுண்டானது.
45 ⲙ̅ⲉ̅ ⲉⲣⲉⲡⲣⲏ ⲇⲉ ⲛⲁϩⲱⲧⲡ̅. ⲁⲡⲕⲁⲧⲁⲡⲉⲧⲁⲥⲙⲁ ⲙ̅ⲡⲉⲣⲡⲉ ⲡⲱϩ ϩⲓⲧⲉϥⲙⲏⲧⲉ.
௪௫சூரியன் இருளடைந்தது, தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டாகக் கிழிந்தது.
46 ⲙ̅ⲋ̅ ⲁⲓ̅ⲥ̅ ϫⲓϣⲕⲁⲕ ⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲟⲩⲛⲟϭ ⲛ̅ⲥⲙⲏ ⲡⲉϫⲁϥ ϫⲉ ⲡⲁⲓ̈ⲱⲧʾ ϯϯ ⲙ̅ⲡⲁⲡⲛ̅ⲁ ⲉⲛⲉⲕϭⲓϫ. ⲛⲧⲉⲣⲉϥϫⲉⲡⲁⲓ̈ ⲇⲉ ⲁϥⲕⲁⲡⲧⲏⲟⲩ.
௪௬இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார்.
47 ⲙ̅ⲍ̅ ⲁⲫⲉⲕⲁⲧⲟⲛⲧⲁⲣⲭⲟⲥ ⲇⲉ ⲛⲁⲩ ⲉⲡⲉⲛⲧⲁϥϣⲱⲡⲉ ⲁϥϯⲉⲟⲟⲩ ⲙⲡⲛⲟⲩⲧⲉ ⲉϥϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ⲟⲛⲧⲱⲥ ⲛⲉⲟⲩⲇⲓⲕⲁⲓⲟⲥ ⲡⲉ ⲡⲉⲓ̈ⲣⲱⲙⲉ.
௪௭நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக் கண்டு: மெய்யாகவே இந்த மனிதன் நீதிமானாக இருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான்.
48 ⲙ̅ⲏ̅ ⲁⲩⲱ ⲙ̅ⲙⲏⲏϣⲉ ⲛ̅ⲧⲉⲣⲟⲩⲉ͡ⲓ ⲉⲛⲁⲩ ⲛ̅ⲧⲉⲣⲟⲩⲛⲁⲩ ⲉⲛⲉⲛⲧⲁⲩϣⲱⲡⲉ ⲁⲩϩⲓⲟⲩⲉ ⲉϩⲟⲩⲛ ⲉⲛⲉⲩⲙⲉⲥⲑⲏⲧʾ ⲁⲩⲱ ⲁⲩⲕⲟⲧⲟⲩ.
௪௮இந்தக் காட்சியைப் பார்க்கும்படி கூடிவந்திருந்த மக்களெல்லோரும் சம்பவித்தவைகளைப் பார்த்தபொழுது, தங்களுடைய மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள்.
49 ⲙ̅ⲑ̅ ⲛⲉⲣⲉⲛⲉⲧⲥⲟⲟⲩⲛ ⲇⲉ ⲙ̅ⲙⲟϥ ⲧⲏⲣⲟⲩ ⲡⲉ ⲁϩⲉⲣⲁⲧⲟⲩ ⲙ̅ⲡⲟⲩⲉ ⲛⲙ̅ⲛⲉϩⲓⲟⲙⲉ ⲉⲛⲉⲩⲟⲩⲏϩ ⲛ̅ⲥⲱϥ ϫⲓⲛⲧⲅⲁⲗⲓⲗⲁⲓⲁ ⲉⲩⲛⲁⲩ ⲉⲛⲁⲓ̈.
௪௯அவருக்கு அறிமுகமானவர்களெல்லோரும், கலிலேயாவிலிருந்து அவருக்குப் பின்னே சென்ற பெண்களும் தூரத்திலே நின்று இவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
50 ⲛ̅ ⲉⲓⲥⲟⲩⲣⲱⲙⲉ ⲇⲉ ⲉⲡⲉϥⲣⲁⲛ ⲡⲉ ⲓ̈ⲱⲥⲏⲫ ⲉⲩⲃⲟⲩⲗⲉⲩⲧⲏⲥ ⲡⲉ ⲣ̅ⲣⲱⲙⲉ ⲛ̅ⲁⲅⲁⲑⲟⲥ ⲛ̅ⲇⲓⲕⲁⲓⲟⲥ
௫0யோசேப்பு என்னும் பெயர்கொண்ட ஒரு ஆலோசனைக்காரன் இருந்தான்; அவன் உத்தமனும் நீதிமானுமாக இருந்தான்.
51 ⲛ̅ⲁ̅ ⲡⲁⲓ̈ ⲉⲛϥϥⲓ ⲁⲛ ⲛⲙⲡⲉⲩϣⲟϫⲛⲉ ⲁⲩⲱ ⲡⲉⲩϩⲱⲃ ⲉⲩⲉⲃⲟⲗ ⲡⲉ ϩⲛⲁⲣⲓⲙⲁⲑⲁⲓⲁ ⲧⲡⲟⲗⲓⲥ ⲛ̅ⲓ̈ⲟⲩⲇⲁⲓ̈· ⲡⲁⲓ̈ ⲉⲛⲉϥϭⲱϣⲧ ⲉⲃⲟⲗ ϩⲏⲧⲥ̅ ⲛ̅ⲧⲙⲛⲧⲉⲣⲟ ⲙ̅ⲡʾⲛⲟⲩⲧⲉ.
௫௧அவன் யூதர்களுடைய பட்டணங்களில் ஒன்றாகிய அரிமத்தியாவிலிருந்து வந்தவனும், தேவனுடைய ராஜ்யத்திற்குக் காத்திருந்தவனும், யூதர்களுடைய ஆலோசனைக்கும் செய்கைக்கும் சம்மதிக்காதவனுமாக இருந்தான்.
52 ⲛ̅ⲃ̅ ⲡⲁⲓ ϭⲉ ⲁϥϯⲡⲉϥⲟⲩⲟⲓ̈ ⲉⲡⲓⲗⲁⲧⲟⲥ ⲁϥⲁⲓⲧⲓ ⲙⲡⲥⲱⲙⲁ ⲛ̅ⲓ̅ⲥ̅
௫௨அவன் பிலாத்துவினிடத்தில்போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டு,
53 ⲛ̅ⲅ̅ ⲁϥⲛ̅ⲧϥ̅ ⲉⲡⲉⲥⲏⲧʾ ⲁϥⲕⲟⲟⲥϥ̅ ϩⲛ̅ⲟⲩⲥⲓⲛⲇⲱⲛ ⲁϥⲕⲁⲁϥ ϩⲛ̅ⲟⲩⲙ̅ϩⲁⲟⲩ ⲉⲁⲩⲕⲉϩⲕⲱϩϥ̅ ⲉⲙⲡⲟⲩⲕⲁⲗⲁⲁⲩ ⲛ̅ϩⲏⲧϥ̅ ⲉⲛⲉϩ. ⲁⲩⲱ ⲛ̅ⲧⲉⲣⲉϥⲕⲁⲁϥ ⲇⲉ ⲁⲩⲟⲩⲉϩⲟⲩⲱⲛⲉ ⲉⲣⲛ̅ⲧ̅ⲧⲁⲡⲣⲟ ⲙ̅ⲡⲉⲙϩⲁⲟⲩ. ⲡⲁⲓ̈ ⲉⲛⲉⲙⲟⲅⲓⲥ ⲉⲛⲉⲣⲉϣϫⲟⲩⲱⲧʾ ⲣ̅ⲣⲱⲙⲉ ⲛⲁϣⲥⲕⲣⲕⲱⲣϥ̅.
௫௩அதை இறக்கி, மெல்லிய துணியிலே சுற்றி, கன்மலையில் வெட்டப்பட்டதும் ஒருபோதும் ஒருவனும் வைக்கப்படாததுமாக இருந்த ஒரு கல்லறையிலே வைத்தான்.
54 ⲛ̅ⲇ̅ ⲛⲉⲡⲉϩⲟⲟⲩ ⲇⲉ ⲡⲉ ⲛ̅ⲧⲡⲁⲣⲁⲥⲕⲉⲩⲏ ⲉϩⲧⲟⲟⲩⲉ ⲙ̅ⲡⲥⲁⲃⲃⲁⲧⲟⲛ.
௫௪அந்த நாள் ஆயத்தநாளாக இருந்தது; ஓய்வுநாளும் ஆரம்பமானது.
55 ⲛ̅ⲉ̅ ⲁⲛⲉϩⲓⲟⲙⲉ ⲇⲉ ⲟⲩⲁϩⲟⲩ ⲛ̅ⲥⲱϥ ⲛⲁⲉⲓ ⲉⲛⲧⲁⲩⲉ͡ⲓ ⲛⲙ̅ⲙⲁϥ ⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲧⲅⲁⲗⲓⲗⲁⲓⲁ ⲉⲩⲛⲁⲩ ⲉⲡⲉⲙϩⲁⲟⲩ ⲛⲙⲑⲉ ⲉⲛⲧⲁϥⲕⲁⲡⲉϥⲥⲱⲙⲁ ⲙⲙⲟⲥ.
௫௫கலிலேயாவிலிருந்து அவருடன் வந்திருந்த பெண்களும் பின்னேசென்று, கல்லறையையும் அவருடைய சரீரம் வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்து,
56 ⲛ̅ⲋ̅ ⲁⲩⲕⲟⲧⲟⲩ ⲇⲉ ⲁⲩⲥⲟⲃⲧⲉ ⲛ̅ϩⲉⲛϩⲏⲛⲉ ⲛⲙ̅ϩⲉⲛⲥⲧⲟ. ⲁⲩⲱ ⲁⲩϭⲱ ⲙ̅ⲡʾⲥⲁⲃⲃⲁⲧⲟⲛ ⲕⲁⲧⲁⲧⲉⲛⲧⲟⲗⲏ.
௫௬திரும்பிப்போய், கந்தவர்க்கங்களையும் பரிமளதைலங்களையும் ஆயத்தம்பண்ணி, கட்டளையின்படியே ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.

< ⲖⲞⲨⲔⲞⲚ 23 >