< 詩篇 21 >

1 大衛的詩,交與伶長。 耶和華啊,王必因你的能力歡喜; 因你的救恩,他的快樂何其大!
இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். யெகோவாவே, உம்முடைய வல்லமையிலே இராஜா மகிழ்ச்சியாக இருக்கிறார்; உம்முடைய இரட்சிப்பிலே எவ்வளவாகச் சந்தோஷப்படுகிறார்!
2 他心裏所願的,你已經賜給他; 他嘴唇所求的,你未嘗不應允。 (細拉)
அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்குத் தந்தருளி, அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாமலிருக்கிறீர். (சேலா)
3 你以美福迎接他, 把精金的冠冕戴在他頭上。
உத்தம ஆசீர்வாதங்களோடு நீர் அவருக்கு எதிர்கொண்டுவந்து, அவர் தலையில் பொற்கிரீடம் அணிவிக்கிறீர்.
4 他向你求壽,你便賜給他, 就是日子長久,直到永遠。
அவர் உம்மிடத்தில் ஆயுளைக்கேட்டார்; நீர் அவருக்கு என்றென்றைக்குமுள்ள நீடித்த ஆயுளை அளித்தீர்.
5 他因你的救恩大有榮耀; 你又將尊榮威嚴加在他身上。
உமது இரட்சிப்பினால் அவர் மகிமை பெரிதாக இருக்கிறது; மேன்மையையும் மகத்துவத்தையும் அவருக்கு கொடுத்தீர்.
6 你使他有洪福,直到永遠, 又使他在你面前歡喜快樂。
அவர் நீடித்த ஆசீர்வாதங்களை அவர்களுக்கு கொடுக்கிறார்; அவரை உம்முடைய சமுகத்தின் மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குகிறீர்.
7 王倚靠耶和華, 因至高者的慈愛必不搖動。
ஏனெனில் இராஜா யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறார்; உன்னதமான தேவனுடைய தயவினால் அசைக்கப்படாமல் இருப்பார்.
8 你的手要搜出你的一切仇敵; 你的右手要搜出那些恨你的人。
உமது கை உமது எதிரிகள் எல்லோரையும் எட்டிப்பிடிக்கும்; உமது வலதுகரம் உம்மைப் பகைக்கிறவர்களைக் கண்டுபிடிக்கும்.
9 你發怒的時候,要使他們如在炎熱的火爐中。 耶和華要在他的震怒中吞滅他們; 那火要把他們燒盡了。
உமது கோபத்தின் காலத்திலே அவர்களை நெருப்புச் சூளையாக்கிப்போடுவீர்; யெகோவா தமது கோபத்திலே அவர்களை அழிப்பார்; நெருப்பு அவர்களை அழிக்கும்.
10 你必從世上滅絕他們的子孫, 從人間滅絕他們的後裔。
௧0அவர்கள் பிள்ளைகளை பூமியிலிருந்தும் அவர்கள் சந்ததியை மனுமக்களிலிருந்தும் அழிப்பீர்.
11 因為他們有意加害於你; 他們想出計謀,卻不能做成。
௧௧அவர்கள் உமக்கு விரோதமாக தீங்கு நினைத்தார்கள்; தீவினை செய்ய முயன்றார்கள்; ஒன்றும் வாய்க்காமல்போனது.
12 你必使他們轉背逃跑, 向他們的臉搭箭在弦。
௧௨உம்முடைய அம்புகளை நாணேற்றி அவர்கள் முகத்திற்கு நேரே எய்து அவர்களைத் திரும்பி ஓடச்செய்கிறீர்.
13 耶和華啊,願你因自己的能力顯為至高! 這樣,我們就唱詩,歌頌你的大能。
௧௩யெகோவாவே, உம்முடைய பலத்திலே நீர் எழுந்தருளும்; அப்பொழுது உம்முடைய வல்லமையைப் பாடித் துதிப்போம்.

< 詩篇 21 >