< 約伯記 23 >

1 約伯回答說:
யோபு மறுமொழியாக:
2 如今我的哀告還算為悖逆; 我的責罰比我的唉哼還重。
“இன்றையதினமும் என் அங்கலாய்ப்பு முரட்டுத்தனமாக எண்ணப்படுகிறது; என் தவிப்பைவிட என் வாதை கடினமானது.
3 惟願我能知道在哪裏可以尋見上帝, 能到他的臺前,
நான் அவரை எங்கே கண்டு சந்திக்கலாம் என்பதை அறிந்தால் நலமாயிருக்கும்; அப்பொழுது நான் அவர் இருக்கைக்கு முன்பாக வந்து சேர்ந்து,
4 我就在他面前將我的案件陳明, 滿口辯白。
என் நியாயத்தை அவருக்கு முன்பாக வரிசையாக வைத்து, காரியத்தை நிரூபிக்கும் வார்த்தைகளால் என் வாயை நிரப்புவேன்.
5 我必知道他回答我的言語, 明白他向我所說的話。
அவருடைய மறுமொழிகளை நான் அறிந்து, அவர் எனக்குச் சொல்வதை உணர்ந்துகொள்ளுவேன்.
6 他豈用大能與我爭辯嗎? 必不這樣!他必理會我。
அவர் தம்முடைய மகா வல்லமையினால் என்னுடன் வழக்காடுவாரோ? அவர் அப்படிச் செய்யாமல் என்மேல் தயை வைப்பார்.
7 在他那裏正直人可以與他辯論; 這樣,我必永遠脫離那審判我的。
அங்கே சன்மார்க்கன் அவருடன் வழக்காடலாம்; அப்பொழுது என்னை நியாயந்தீர்க்கிறவரின் கைக்கு என்றைக்கும் விலக்கிக் காப்பாற்றிக்கொள்வேன்.
8 只是,我往前行,他不在那裏, 往後退,也不能見他。
இதோ, நான் முன்னேபோனாலும் அவர் இல்லை; பின்னேபோனாலும் அவரைக் காணவில்லை.
9 他在左邊行事,我卻不能看見, 在右邊隱藏,我也不能見他。
இடதுபுறத்தில் அவர் செயல்பட்டும் அவரைப் பார்க்கவில்லை; வலது புறத்திலும் நான் அவரைக் பார்க்காமலிருக்க மறைந்திருக்கிறார்.
10 然而他知道我所行的路; 他試煉我之後,我必如精金。
௧0ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்.
11 我腳追隨他的步履; 我謹守他的道,並不偏離。
௧௧என் கால்கள் அவர் அடிகளைப் பற்றிப்பிடித்தது; அவருடைய கட்டளையை விட்டு நான் விலகாமல் அதைக் கைக்கொண்டேன்.
12 他嘴唇的命令,我未曾背棄; 我看重他口中的言語,過於我需用的飲食。
௧௨அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை; அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாகக் காத்துக்கொண்டேன்.
13 只是他心志已定,誰能使他轉意呢? 他心裏所願的,就行出來。
௧௩அவரோவென்றால் ஒரே மனமாயிருக்கிறார்; அவரைத் திருப்பத்தக்கவர் யார்? அவருடைய விருப்பத்தின்படியெல்லாம் செய்வார்.
14 他向我所定的,就必做成; 這類的事他還有許多。
௧௪எனக்கு திட்டமிட்டிருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்; இப்படிப்பட்டவைகள் இன்னும் அநேகம் அவரிடத்தில் உண்டு.
15 所以我在他面前驚惶; 我思念這事便懼怕他。
௧௫ஆகையால் அவருக்கு முன்பாகக் கலங்குகிறேன்; நான் சிந்திக்கிறபோது, அவருக்குப் பயப்படுகிறேன்.
16 上帝使我喪膽; 全能者使我驚惶。
௧௬தேவன் என் இருதயத்தை சோர்வடையச் செய்தார்; சர்வவல்லமையுள்ள தேவன் என்னைக் கலங்கச் செய்தார்.
17 我的恐懼不是因為黑暗, 也不是因為幽暗蒙蔽我的臉。
௧௭இருள் வராததற்கு முன்னே நான் அழிக்கப்படாமலும், இருளை அவர் எனக்கு மறைக்காமலும் போனதினால் இப்படியிருக்கிறேன்.

< 約伯記 23 >